அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள், பணம் வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் – MAKKAL ADHIKARAM MEDIA.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கருத்துக்களை கட்டுரையாக இந்த தேச நலன் கருதி, மக்கள் நலன் கருதி, கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,

இது பற்றி பல கருத்துக்கள், இந்தியாவின் எதிர்கால நலனின் முன்னேற்றம்,மக்களின் முன்னேற்றம், இலவசத்தால் கொடுக்க முடியாது. அரசியல் கட்சிகள் இது தெரிந்த இந்த தவறை மக்களிடம் தொடர்ந்து செய்து வருகிறது. இது ஓட்டுக்கான அரசியலேத் தவிர, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமான , முன்னேற்றத்தின் அரசியல் இல்லை.

மேலும், மக்களுக்கு இந்த உண்மை புரியாமல் தான், இந்த இலவசம் தன்னை முன்னேற்றுவதற்கு கொடுப்பதாக, அவர்கள் சொல்லும் பொய்யில், மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இன்று தமிழ்நாட்டில் திமுக அரசு பெண்களுக்கு உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. அது இவர்களுடைய வாழ்க்கை தரத்தையோ, வாழ்வாதாரத்தையோ உயர்த்தப் போவதில்லை .

மேலும்,அப்படி இலவசத்தை கொடுக்கும்போது, மக்களுக்கு உழைக்கக் கூடிய மனநிலை அவர்களுக்கு குறைந்து விடுகிறது. அது மட்டுமல்ல, நீங்கள் மக்களுக்கு இலவசமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்கள் என்றால், அதை மக்களிடமிருந்து பத்தாயிரம் ஆக மறைமுகமாக எடுத்து விடுகிறார்கள். இதை இன்னும் தமிழ்நாட்டு மக்கள் உணரவில்லையா? அதாவது,

திமுக ஆட்சியில் பெண்களுக்கு கொடுக்கக்கூடிய இந்த ஆயிரம் ரூபாய் இலவசம், அது பத்தாயிரம் ரூபாயாக அவர்கள் அரசாங்கத்திற்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது எப்படி என்றால், அதற்கும் சில உதாரணங்களை சொல்கிறேன். டாஸ்மாக் கடையில் கொடுக்கிறார்கள், மின்சார கட்டண உயர்வில் கொடுக்கிறார்கள், சொத்து வரி, குடிநீர் வரி ,வீட்டு வரி, துப்புரவு வரி, கழிவுநீர் வரி, இப்படி வரி மூலமாக இதை உரிஞ்சிக் கொண்டிருக்கிறது திமுக ஆட்சி.

மேலும்,இப்போதும் 2026 இல் இந்திய முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில், இலவச அறிவிப்பை மக்களுக்கு ஓட்டுக்காக விலை பேசுவது போல், இந்த இலவச அறிவிப்புக்கள் ,வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் உதாரணத்திற்கு அதிமுக 3000 மாதம் கொடுப்பதாக அறிவித்தால், திமுக 5000 கொடுப்பதாக அறிவிப்பார்கள். இவர்கள் கொடுப்பவர்கள் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை.தவிர, இதற்கு மக்களிடம் எந்த பத்திரமும், எழுதிக் கொடுக்கவில்லை. மேலும், இது யெல்லாம் ஒரு வெத்து அறிவிப்பு தான். கடந்த தேர்தலில் திமுக! நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,

கூட்டுறவு வங்கி கடன்களில் வைக்கப்பட்ட ஐந்து சவரன் நகைக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்களே, தவிர , தள்ளுபடி செய்யவில்லை.ஆனால், அந்த அறிவிப்பை பார்த்து மக்கள் மட்டும் வாக்களித்தார்கள். ஆனால் இவர்கள் செய்யவே இல்லை. பேருக்கு ஒவ்வொரு வங்கிகளிலும் சுமார் நூறு பேருக்கு நகை கடன்களை தள்ளுபடி செய்து கணக்கு காட்டி விட்டார்கள்.

இது பற்றி தேர்தல் ஆணையம் ,எந்த கேள்வியும் ,கேட்கவில்லை. இனிமேலும், இதே போல் பொய்யை சொல்லி ,பல அரசியல் கட்சிகள் மக்களை ,அதாவது வாக்காளர்களை தொடர்ந்து ஏமாற்றுவார்கள்.

மக்கள் இந்த இலவசத்தை நம்பி ,பொய் வாக்குறுதிகளை நம்பி ,வாக்களித்தால் அப்போது தேர்தல் என்பது பொய் வாக்குறுதிகளுக்காக நடத்தப்படும் ,தேர்தலாக மக்களிடம் செயல்பட வேண்டிய கால சூழ்நிலைக்கு தேர்தல் ஆணையம் இருந்து விடக் கூடாது.

அதனால், நாட்டு மக்கள் தேர்தல் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள். இப்போதே பல அரசியல் கட்சிகளின் மீது 70 சதவீதத்திற்கு மேல் நம்பிக்கை இல்லை. மேலும், இன்றைய அரசியல் கட்சிகள் என்பது தன்னுடைய பொது நோக்கத்தை மறந்து ,இன்று பதவி வெறியாகவும், பணத்தின் வெறியாகவும், சொத்துக்களின் மீது வெறியாகவும், தன்னுடைய சுயநலத்திற்காக மாறி உள்ளது. இப்படி இருக்கின்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களுக்கு அது நம்பிக்கையுடன் செயல்படுத்துமா? அதனால்,தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையாக செயல்பட வேண்டும்.

அது தேர்தல் நடத்தை விதிகளில் தற்போது வாக்காளர் திருத்த சட்டம் கொண்டு வந்தது போல, இந்த இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

அப்போது தான், அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்பு ,இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு எதிரானது. அதாவது, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, எதிர்காலத்தில் அது பெருமளவில் பாதிக்கக்கூடிய ஒரு சூழ்நிலைக்கு கொண்டு போய் தள்ளிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இப்போதே தமிழ்நாட்டின் கடன் 10 லட்சம் கோடிக்கு மேல் தாண்டியுள்ளது.மேலும், இலவச அறிவிப்பு என்றால்,எல்லாவற்றையும் மக்களுக்கு இலவசமாக கொடுத்தால்! உழைப்பவன் யார்? உழைக்காமல், ஏதாவது கிடைக்குமா? எதுவுமே கிடைக்காது.

அப்படி என்றால்! ஒரு பக்கம் மக்களை குடிகாரர்களாக்கி, இலவசத்தையும் கொடுத்து, அவர்களை சோம்பேறிகளாக ஆக்கி, இதனால், நாட்டின் எதிர்கால முன்னேற்றம் ,தொழில், கல்வி, வேலை வாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, சமூக கலாச்சாரங்கள், அத்தனையுமே பாதிக்கப்படும் என்பது உறுதி.

அதனால், தேர்தல் ஆணையம் நாட்டில் அரசியல் கட்சிகளின் மீது நடவடிக்கை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். அதற்கான சட்ட திருத்தங்கள் தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் 8% ,6% வாங்கிய ஓட்டுக்களை எல்லாம் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்கி, குறைந்தது ஒரு அரசியல் கட்சி 35 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும்.

அதாவது ஒரு மாணவன் நூற்றுக்கு 35 சதவீதம் என்பது குறைந்தபட்ச மதிப்பெண் என்பது போல, ஒவ்வொரு அரசியல் கட்சியும், 35 சதவீதம் தேர்தலில் வாக்கு சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள். அந்த கொடியோ, அந்த சின்னமோ ,அவர்கள் பயன் படுத்த கூடாது. அப்படி உபயோகப்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.

இப்படி பல அரசியல் கட்சிகள், நாட்டில் லெட்டர் பேடு கட்சிகள், முதல் ஜாதி கட்சிகள் வரை, இன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் ,ரவுடியிசத்துக்கும், ஊழலுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

மேலும்,இன்று அரசியல் கட்சிகள் பதவி வெறிக்கும், பணத்தின் வெறிக்கும், முக்கியத்துவமாக செயல்படுகிறது. இப்படி இதை மட்டுமே, நோக்கமாக கொண்டு செயல்படக்கூடிய அரசியல் கட்சிகளால், மக்களின் முன்னேற்றத்திற்கு, இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு, மிகப்பெரிய தடையாக இருந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களுடைய முன்னேற்றத்தை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தடை செய்யப்பட வேண்டும். இதற்கு ,இப்படிப்பட்ட கடுமையான சட்டங்களை, தேர்தல் ஆணையம் கொண்டு வந்தால் தான், மக்களுக்கு தேர்தல் என்பது ஏதோ கணக்கு காட்டுவதற்கு தேர்தல் அல்ல, இந்த நாட்டு மக்களுக்காகவும், இந்த தேச நலனுக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் ,தேர்தல் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அவர்களுக்கு இன்னும் தேர்தல் என்றால் !ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே வாக்களிப்பேன் என்ற மனநிலையில் உள்ள மக்களும் இருக்கிறார்கள். அப்படி இருக்கின்ற மக்கள் ,இவர்கள் தான் முதல் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். அவர்களை ஒன்று தகுதி நீக்கம் செய்யுங்கள். இல்லை, அரசியல் கட்சிகள் இவர்களை பணம் கொடுத்து ஏலத்தில் எடுப்பதை நிறுத்துங்கள். இது ஒரு கடினமான வேலை தான்.

ஆனால், தேர்தல் ஆணையம் அதற்கான முயற்சிகளை இந்த காலகட்டத்தில், நாட்டுக்கு தேவையான சட்டங்களை, அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள், பொது நலமாக இருந்தது. பதவி என்பது கௌரவத்திற்காக இருந்தது. இப்போது அது பணத்திற்காக ஆகிவிட்டது. பணம் இருந்தால் கௌரவம் என்று நினைக்கிறார்கள்.

நான் சொகுசு காரில் போனால் தான் எனக்கு கௌரவம் என்று நினைக்கிறார்கள்.மேலும், மக்களுக்காக உழைப்பதை அவர்கள் கௌரவமாக நினைத்தார்கள். இப்போது மக்களிடம் கொள்ளையடிப்பது, கௌரவமாக நினைக்கிறார்கள். அதனால்,

காலத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் சட்ட திருத்தங்களை கொண்டு வருவது மிக, மிக அவசியம் என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் மீண்டும், இக்கருத்தை தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி, இதன் அவசியத்தை சட்ட நிபுணர்கள் உடன் ஆய்வு செய்து, சட்ட வரையறை மேற் கொண்டு, தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டு மக்கள் நலன் கருதி செயல் படுத்திட மக்கள் அதிகாரம் பத்திரிகையின் கோரிக்கை மட்டும் அல்ல ,இ ந்த தேச நலன் விரும்பிகளின் கோரிக்கையும் அதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *