நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டப்பேரவையிலோ வாக்களிக்க லஞ்சம் வாங்குவது சிறப்புரிமை என் கீழ் வராது – உச்ச நீதிமன்றம்

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் எம்பி ,எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் உரையாற்ற அல்லது வாக்களிக்க லஞ்சம் வாங்குவது சிறப்புரிமை என் கீழ் வராது என்று உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

 மேலும், ஒரு எம்பி அல்லது ஒரு எம்எல்ஏ லஞ்சம் வாங்கி சபையில் பேசினாலோ அல்லது வாக்களித்தாலோ அவர்கள் மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்படலாம். இது தவிர, நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ, தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு உரிமை தொடர்பான வழக்கில் ஒட்டுமொத்த செயல்முறைக்கு சலுகைகளை வழங்குவதாகும் என இந்த தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி டி .ஒய். சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

 மேலும், நாட்டில் நீதிமன்றம் இல்லையென்றால் ,இன்று மக்கள் என்ன ஆவார்கள்? என்பது தெரியவில்லை .தமிழ்நாட்டை பொறுத்தளவில் ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை. அது ஆட்சியாளர்களுக்காகவும், அரசியல் கட்சியினருக்காகவும் தான் உள்ளது .மக்கள் வாக்களித்து விட்டால் அவர்களுடைய அடிமை என்று கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் முதல் முதலமைச்சர் வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 மேலும், சட்டத்தின் மாண்பை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்க கூடிய காவல் துறை அவர்களுடைய எடுபிடியாக இருக்கிறது .ஐஏஎஸ் அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டுவதை விட ,ஆட்சியாளர்களின் நலனில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் .அதனால், தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் நீதிமன்றம் தான் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும். வேறு வழி இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *