நாட்டில் இந்திய மக்களுக்காக நமது ராணுவ வீரர்கள் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை அர்ப்பணித்து,அவர்களுடைய சொந்த சுக, துக்கங்களை அர்ப்பணித்து,நாட்டைக் காக்க எல்லையில் போராடும் தியாகத்திற்கும், அர்ப்பணிப்புக்கும், ஒவ்வொரு இந்திய மக்களும் அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
ஏனென்றால்,அவர்கள் எத்தனை நாள் தூங்கி இருப்பார்கள்? எத்தனை நாள் விழித்திருப்பார்கள்?அவர்கள் வாழ்க்கையை எதிரி நாட்டு ராணுவ வீரர்களுடன் இந்த தேசத்தை இந்த மண்ணை காப்பாற்ற அவர்களுடைய தியாகம்,அவர்கள் சிந்தும் ரத்தம், ஒரு சரித்திர வரலாறு.
அப்படிதான் தற்போது 30 பேரை காப்பாற்றிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்பையா என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். அவர் ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர், எதிரிகள் வைத்திருந்த கன்னிவெடியை தெரியாமல் மிதித்துள்ளார்.
இதனை தெரிந்த அவர்,சக ராணுவ வீரர்களை உடனே அங்கிருந்து தப்பிக்குமாறு அறிவுறுத்தியதால், அவர்கள் 30 பேரும் உயிர்த்தபினர். இருப்பினும், அவருடைய ஆத்மாவின் வீர மரணத்துக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.