
மும்பையில் உள்ள டாட்டா சமூக அறிவியல் கழகத்தின் கல்லூரி 86 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை வரவேற்றுள்ளனர்.

ஆனால், அந்தப் பட்டமளிப்பு விழாவிற்கு இவர் வந்தால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததால், அது திடீரென்று கால வரை இன்றி தள்ளி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து மாணவர்களுக்கும் நேற்று மின்னஞ்சல் மூலமாக செய்திகள் கல்லூரி சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கே இந்த நிலைமையா என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும்,

ஒவ்வொரு மாநிலத்திலும் ,ஊழல் அரசியல்வாதிகளின் பின்னால் மற்றும் அரசியல் கட்சிகளின் பின்னால் இருக்கக்கூடிய அமைப்புகள் ,மாணவர் அமைப்புகள், மத இயக்கங்கள் ,போராட்ட இயக்கங்கள், இதை அத்தனையும் உளவுத்துறை ஆராய்ந்து , மத்திய அரசு ரிப்போர்ட் கேட்கட்டும் அப்போது தெரியும்.

இதற்கு பின்னால் காங்கிரஸ் கட்சி போன்ற ஊழல் அமைப்புகள் அல்லது ஊழல் அரசியல்வாதிகள் பின்னால், இவைகள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு பணம் எப்படி வருகிறது? ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால் ,அதற்கான பணம் அவசியம். அந்த பணத்தை இவர்களுக்கு கொடுப்பவர்கள் யார்?

ஊழல் பின்னணி கொண்ட அரசியல் கட்சிகள் தான், இவர்களுக்கு பைனான்சியர். அல்லது வெளிநாடுகளில் இருந்து இவர்களுக்கு பைனான்ஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் இவர்கள் வீதிக்கு வந்து போராட முடியாது. மேலும்,
மாணவர்கள் கல்வி கற்று ,வேலைக்கு செல்வதுதான் ,அவர்களுடைய முக்கிய நோக்கம் .ஆனால், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு மற்றும் வேலையின்மையை தூண்டிவிட்டு, மாணவர்கள் பெயரில், அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் வன்முறையை மறைமுகமாக இவர்கள் மூலமாக அரங்கேற்றுவது, நாட்டுக்கு ஆபத்தானது.
மேலும், வேலை என்பது படித்த அத்தனை பேருக்கும் அரசு வேலை எதிர் பார்க்க முடியாது அதே போல், தனியார் நிறுவனங்களில் தகுதியானவர்களை மட்டும் தான் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். திறமையற்றவர்களை தனியார் நிறுவனம் எந்த காலத்திலும் எடுக்காது.

அப்போது ஒரு மாணவனின் திறமை என்பது வேலைவாய்ப்பில் முக்கியத்துவமானது .இதைப் பற்றி எல்லாம் எதிர்க்கட்சிகள் பேசாமல், பொத்தாம் பொதுவாக ,மாணவர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். அவர்கள் வேலையில்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
இப்படி உண்மையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாமல், அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் ,பேசிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளை இப்படிப்பட்ட ஊழல் பணத்தை வைத்து தான் ,நாட்டில் வன்முறை கலாச்சாரங்களை மாணவர் இயக்கங்கள் மூலமும் மற்றும் பல்வேறு போராடுகின்ற அமைப்புகள் மூலமும், திட்டமிட்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? என்னுடைய மக்கள் அதிகாரம் பத்திரிக்கை பெயரை காப்பியடித்து, மக்கள் அதிகார இயக்கமோ அல்லது கழகமோ தெரியவில்லை . இவர்களும் பத்திரிகை போல் இணையதளத்திலும், செய்தியை போட்டுக் கொண்டு இருந்து வருகிறார்கள்.
மக்கள் அதிகாரம் 2015 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது 2017 இல் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும்,இப்படி நாட்டில் மக்களை குழப்புவதற்கும், ஏமாற்றுவதற்கும் ,அரசியல் செய்வதற்கும், ஊழல் பணம் ஊடுருவியிருக்கிறது .

இதை தடுக்க வேண்டும் என்றால்! ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்களை கொண்டு வந்து, ஊழல்வாதிகளின் பணத்தை, சொத்தை, அரசுடைமையாக்குவதை தவிர, வேறு வழி இல்லை. மேலும்,ஊழல்வாதிகளுக்கு சட்டத்தின் ஓட்டை ஒரு பக்க பலமாக இருந்து வருகிறது. இன்று வரை அதிமுக, திமுகவின் ஊழல் அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் செய்த ஊழல்கள் நீதிமன்றத்தில் வழக்காகத்தான் போய்க் கொண்டிருக்கிறதே தவிர, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து ஊழல் செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியவில்லை.

மேலும்,மக்கள் அதிகாரம் இதை தொடர்ந்து மத்திய அரசுக்கு தெரிவித்து வருகிறது. இதற்கெல்லாம் சட்டங்கள் கடுமையாக்கப்படாத வரை நாட்டில் யாராலும் நல்லாட்சியை தர முடியாது. ஊழல்வாதிகளின் பின்னால் தான், அரசியல் போய்க் கொண்டிருக்கும்.

இதை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இந்த ஓட்ட சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்கள்.
