நாட்டில் எதிர்க்கட்சிகள் பதவி, அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்களா? – மோடி

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும்? என்ற ஒரு வரைமுறை இல்லாமல் மக்களை குழப்பிக் கொண்டு, இவர்களும் சரியாக மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பதவி ,அதிகாரம் இதற்காக ஒரு அரசியல் செய்வது நாட்டு மக்களுக்கு வீணானது.

 ஆளுங்கட்சிகள் செய்கின்ற தவறை எதிர்க்கட்சிகள் தான் சுட்டிக்காட்டி, அதற்காக போராட வேண்டும் .அந்தப் போராட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், இவர்களுடைய போராட்டம் இவர்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறது. மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு யார் காரணம்? என்பதை ஒரு குழு அமைத்து, அங்கே விசாரணை செய்து நியாயமான நடவடிக்கை தேவை என்று போராட்டம் நடத்தினால் பரவாயில்லை.

மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அதற்குப் பொறுப்பேற்பார்களா? அல்லது எதிர்க்கட்சி தான் பொறுப்பேற்பார்களா? அல்லது ஆளும் கட்சி தான் பொறுப்பேற்கார்களா? இது எல்லாம் தெரியாமல் பிஜேபி மீதும், மோடி மீதும் குறை ,குற்றங்களை சொல்லி, மக்களிடம்  ஒரு ஏமாற்று அரசியல் செய்வது எதிர்க்கட்சிகளின் வேலையாகி விட்டது. எதிர்க்கட்சிகள் நாட்டிற்கு தேவையானது. அந்த எதிர்க்கட்சிகள் சுயநலத்துடன் அரசியல் செய்வது ,நாட்டுக்கு தேவையற்றது .

மேலும், எந்த ஒரு சட்டம் கொண்டு வந்தாலும், உங்களுக்கு அது சாதகமாக இல்லை என்றால், அதற்கு போராட்டம் நடத்துவது ,எதிர்கட்சிகள் வேலை இல்லை. உங்களுக்காக, உங்கள் அரசியல் நலனுக்காக ,உங்கள் அரசியல் லாபங்களுக்காக, மோடி அரசியல் செய்யவில்லை என்று குற்றங்களை சொல்லிக்கொண்டு ,குறைகளை சொல்லிக்கொண்டு , அரசியல் செய்வது எக்காலத்திலும், மக்களிடம் எடுபடாது.

 அதேபோல், உங்களுக்காக, உங்கள் கருத்துக்களை மக்களிடம் திணித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களும், அதாவது பொய்யை மெய்யாக்கி காட்டும் திறமை, மக்களிடம் எடுபடவில்லை. உண்மை எப்போதும் ஜெயிக்கும். மக்கள் எப்போதும் ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள். அதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதை கைவிட்டு விட்டு, மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக செயல்படுவது தான், மக்களுக்கான அரசியல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *