
நாட்டில் அரசியல் கட்சிகளால் ஊருக்குள் பிரிவினையும், உறவுகளுக்குள் பிரிவினையும், ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால்,
ஓட்டு கேட்கும் போது மட்டும் தான் மாமன், மச்சான் ,பங்காளி உறவுகள், ஜாதி ,பிறகு நீ யாரோ, நான் யாரோ, இப்படி தான் பெரும்பாலான கிராமங்களில் இந்த அரசியல் கட்சிகளால் பிரிவினைகள் ஏற்படுத்தி, தான் வாழ்வதற்கு இந்த அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும்,

இந்த உண்மை எல்லாம் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெரியாது. தவிர, பத்திரிகைகள் வெளிப்படுத்தினாள் தானே தெரியும். அவர்களை காசு கொடுத்தால் பாராட்டிக் கொண்டிருக்கிறது.மேலும்,

லஞ்சம் என்பது அதிகாரிகள் மட்டத்தில் சில ஆயிரங்கள் கை மாறுகிறது. ஆதனால், நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஆனால்,பல கோடிகளில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் ஊழல் என்பது வெளிநாட்டில் சொத்து வாங்கி போடுகின்ற அளவுக்கு கோயில் இருக்கிறது.மேலும்,லஞ்சத்தை கொடுக்க முடியாது என்றால், அதிகாரிகள் அவர்களை வற்புறுத்த முடியாது .யாரோ ஒரு சிலர் தான் அதுபோல் செய்கிறார்கள்.

ஆனால், அரசியல்வாதிகள் கொடுத்தால் தான், உனக்கு காண்ட்ராக்ட் வேலை. அதில் கமிஷன் சொந்த கட்சியாக இருந்தாலும் ,வாங்கி தான் தீருவார்கள். இந்த அரசியல் கட்சிகளால் தான், ஊழல்கள் நாட்டில் அதிகரிக்கிறது.

மேலும்,ஊழலை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டு ,ஊழலை செய்து கொண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு சீமானின் ஒரு வீடியோ பார்த்தேன். ஊழல் எங்கிருந்து வருகிறது அப்படின்னு கேட்கிறார்? ஊழல் உங்களிடம் இருந்து தான் வருகிறது. ஒவ்வொரு கம்பெனிக்காரர்களிடம் இருந்து மாநாடு வசூல், பெரிய கடைக்காரர்கள் இடமிருந்து வசூல்,

இது தவிர ,கம்பெனி ஸ்கிராப் மூலம் வருமானம், ஒவ்வொரு பகுதியிலும் காண்ட்ராக்டர்ர்களிடம் கமிஷன், பொது சொத்துக்களை பட்டா போட்டுக் கொள்வது, குவாரி மண், மற்றும் மணல் எடுப்பதில் கொள்ளையடிப்பது, அதில் பெரும் தொகை வசூல் செய்வது,கட்ட பஞ்சாயத்து செய்வது, இவ்வளவுக்கும், காவல்துறை இவர்களுக்கு மறைமுகமாக உடந்தையாக செயல்படுகிறது, தட் இஸ் இன் அண்டர் கிரவுண்ட் (That is in under ground) மேலும்,

ஒரு ஏரியாவில் நகை திருட்டு சம்பவம் நடைபெற்றால், அந்த ஏரியாவில் யார் ?யார் ?இதை செய்திருப்பான்? அதேபோல் போதை பொருள் கடத்தல் விஷயத்திலும், அரசியல் கட்சியினர் ஈடுபட்டு இருக்கிறார்கள், கள்ளச் சாராயத்தில் ஈடுபடுகிறார்கள். அதற்கு உதாரணம்: 60 பேர் செத்த கள்ளக்குறிச்சி சம்பவம்.

இது தவிர ,பெரிய ,பெரிய ஸ்கேம் நடப்பதும் அரசியல் பின்னணியில் தான் நடக்கிறது. இதில் எந்த கட்சி இதில் அதிகம் ஈடுபடுகிறது? இதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு வருமானமே இப்படித்தான் ,நேர்மையான வருமானம் இல்லை. எல்லாமே இல் லீகல் ஆக்டிவிட்டீஸ் (illegal activities)

இதில் நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளான பிஜேபி ,காங்கிரஸ் ,திமுக, அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் ,நாம் தமிழர், மதிமுக, தேமுதிக, புரட்சி பாரதம், மற்றும் பல லெட்டர் பேடு கட்சிகள் வரை இதை தான் செய்கிறது. இது அதன், அதன் தகுதிக்கு தக்கவாறு செய்கிறது.

மேலும்,இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளால், ரவுடிசம் ,நாட்டில் இருப்பதற்கு முக்கிய காரணமே அரசியல் கட்சிகள் தான். தவிர இவர்கள் அரசியல்வாதியாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள். மேலும்,இவர்கள் பேசுவதற்கும் செய்வதற்கும் சம்பந்தமே இருக்காது. மக்களிடம் நல்லவர்களாக வேஷம் போட்டுக் கொண்டு, இந்த இல் ஆக்டிவிட்டீஸ் 90% நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒவ்வொரு கட்சியிலும் எத்தனை சதவீதம் என்றுதான் தீர்மானிக்க வேண்டும். தவிர, அரசியல் வியாபாரிகள் முதல் போட்டு முதல் எடுப்பார்கள். அது மட்டுமல்ல, இதில் கார்ப்பரேட் அரசியல்வாதிகளின் கார் போனால், கார் கதவை திறப்பதற்கு கார் பின்னால் ஓடுவதற்கும், கட்சியினர் இருப்பார்கள்.

இதையெல்லாம் படிக்காதவன் ,எந்த தொழிலும் தெரியாதவன், ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவன், சமூக விரோத செயல்களை செய்து கொண்டிருப்பவன், இவர்களுக்கு எல்லாம் இப்போது அரசியல் கட்சிகள் தான் அடைக்கலம். இதில் ஒரு அரசியல் கட்சியில் 10 கோடி பேர் இருக்கிறாரன் என்றால் ,10 கோடி பேரும் சமுதாய அர்ப்பணிப்பும் ,தேச நலன் அர்பணிப்பும் கொண்டவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

உதாரணத்துக்கு பிஜேபி யில் தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் தேருவார்கள்? காங்கிரஸ் கட்சியில் எவ்வளவு பேர் தேருவார்கள்? திமுகவில் எவ்வளவு பேர் தேர்வார்கள்? அதிமுகவில் எவ்வளவு பேர் தேருவார்கள்? பாமகவில் எவ்வளவு பேர் தேருவார்கள்? மேலும்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் எவ்வளவு பேர் தேருவார்கள்? நாம் தமிழர் சீமான் கட்சியில் எவ்வளவு ,தேருவார்கள்? தேமுதிக ,மதிமுக கம்யூனிஸ்டுகள், மற்றும் பெயர் தெரியாத லெட்டர் பேட் கட்சிகள்?இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், எவ்வளவு பேர் தேருவார்கள்?

இவர்களையெல்லாம் நம்முடைய கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள், மக்களிடம் நற்சான்று கொடுக்கிறது என்றால், அது பத்திரிகை துறையின் நான்காவது தூண் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இது அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? என் கேள்வி அல்ல.

மேலும், ஒரு நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார் ஒரு வீடியோவை அனுப்பி ,பிஜேபி கட்சியில் ஒருவர் இவ்வளவு ஊழல் பண்ணி இருக்கிறார் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இங்கே மனசாட்சி இல்லாமல் ஊழல் பண்ணுகிறவர்கள், எத்தனை கட்சியில் எவ்வளவு பேர்? மனசாட்சியுடன் ஊழல் பண்ணுகிறவர்கள் எத்தனை பேர்? இதைதான் எடுக்க வேண்டும்.

மேலும்,மனசாட்சியுடன் செயல்படுகின்ற காவல்துறை அதிகாரிகள் எத்தனை பேர்? மனசாட்சி இல்லாமல் செயல்படக்கூடிய காவல்துறை அதிகாரிகள் எவ்வளவு பேர்? யார் யாரெல்லாம் இந்த அரசியல் கட்சி கிரிமினல்களுடன் கைகோர்த்து இருக்கிறார்கள்? ஆதாயம் இல்லாமல், கைகோர்க்க மாட்டார்கள். இதுதான் அதிகார வர்க்கத்தின் ஊழல்.

மேலும்,காங்கிரஸ் கட்சியின் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றின் ஊழல் எவ்வளவு ?என்பதை எடுத்துப் பாருங்கள். பிஜேபியின் 10 ஆண்டுகால அரசியல் வரலாற்று ஊழல் எவ்வளவு? என்று எடுத்து பாருங்கள். திமுக, அதிமுக 50 ஆண்டு கால தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்று ஊழல்களை எடுத்துப் பாருங்கள். இதுதான் அரசியல் வரலாற்று உண்மை.

இதை மனசாட்சியுடன் பேசக்கூடிய அரசியல் கட்சி தலைவர்கள் யாருமே கிடையாது. சீமான் கேட்கிறார் நீங்கள் எல்லாம் ஊழல் செய்கிறீர்களா? என்று அவர்கள் கட்சியினரை பார்த்து கேட்கிறார்? அந்த காலத்தில் ஊழல் என்றால் என்ன? என்று தெரியாமல் வாழ்ந்து சென்றவர்களுக்கு, அரசியலுக்கு வந்தவர்களுக்கு தெரியாது.
மேலும்,இப்போது மாடு மேய்த்துக் கொண்டிருப்பவன் ,ஊரில் பஞ்சாயத்து தலைவராக வந்தாலும் கூட, அவனை கையில் பிடிக்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்பித் தவிக்கிறார்கள். ஊரையே விற்று காசாக்கி விடலாமா? என்று நினைக்கிறான்.

இதற்கு தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு ,பலமுறை மக்கள் அதிகாரம் சார்பில், அரசியல் கட்சியினருக்கும்,அரசியல்வாதிகளுக்கும், தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.

மேலும், அப்பாவி மக்களுக்கு அரசியல் தெரியாது. இதை பயன்படுத்தி, அவர்களுடைய வறுமையை பயன்படுத்தி ,அரசியல் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் வியாபாரம் ஆக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இப்படிப்பட்ட ஒரே, ஒரு உண்மை இந்த மக்களிடம் சொல்லுமா? ஏனென்றால் ,அவர்களுக்கு பத்திரிக்கை வியாபாரம் தான் முக்கியம்.

மேலும் ,கார்ப்பரேட் அரசியல்வாதிகளை நம்பிமக்கள்ஏமாறக்கூடாது.வீட்ல போன பாக்க முடியாது . அலுவலகத்திற்கு போனால் பார்க்க முடியாது, இப்படிப்பட்ட அரசியல் வாதிகள் எவ்வளவு பேர்? இன்று பிஜேபி அண்ணாமலையை ஓரம் கட்டி இருக்கிறது என்றால், எதற்காக? அண்ணாமலை மீது ஊழல் குற்றச்சாட்டு ,வெளிவந்தது தான். அது உண்மையா ?பொய்யா? என்பதை பிஜேபி மேலிடம் ஆய்வு செய்து வைத்துள்ளது.மேலும்,

எப்போது உழைப்பவனுக்கு, உண்மைக்கு ,நேர்மையான அரசியல்வாதிக்கு, மக்கள் வாக்களிப்பதில்லையோ, அப்போதே உங்களுடைய தலையில், நீங்கள் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டீர்கள். பணம், பொருள், பார்த்து வாக்காளர்கள் வாக்களித்தால் , சமூக முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் எல்லாவற்றிற்கும் அது மிகப்பெரிய பிரச்சனையாக நாட்டில் ஊழலாக உருவெடுத்து வருகிறது.மேலும்,

அரசியல் கட்சி என்பது, இவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் என்ற ஒரு ஆயுதம். இவர்களுடைய பேச்சு என்பது சேவை என்று பேசிக் கொண்டிருக்கும் ஒரு போலியான அரசியல். இதிலிருந்து உண்மை எது? பொய் எது? என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு மார்க்? என்பது உங்கள் மனசாட்சி படி நீங்கள் போடுங்கள்.வருகின்ற 2026 தேர்தலில்! உங்கள் தீர்ப்பை சொல்லுங்கள்.