நாட்டில் பல சட்டங்கள் திருத்த வேண்டி உள்ளது ‌‌. அந்த சட்டங்கள் திருத்தாத வரை தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு அரசியல்! போராட்டம் தான், என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் ,அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தான், அது பொருந்தும்.

அந்த காலம் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்த காலம், தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்த காலம், இப்போது அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல், சுயநலமாக தான் மட்டுமே வாழ்வது எப்படி?

அரசியலில், அரசியல் கட்சிகளை பயன்படுத்தி, எப்படி கொள்ளையடிப்பது? அதை பத்திரிக்கை, தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள், மூலம் மக்களிடம் நியாயப்படுத்துவது எப்படி?

மேலும்,அது சட்டப்படி சம்பாதித்தது என்று சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவது, பல சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு, மக்களின் மனநிலைக்கேற்றவாறு, மாற்றப்பட வேண்டியது அவசியம்.

அதில் முக்கியமாக ஊழல் முறைகேடுகள் சம்பந்தமான, சட்டங்கள் உடனடியாக சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும். பிறகு பினாமி சொத்துக்கள் முதல் இவர்கள் காட்டும் சொத்துக்கள் வரை இதனுடைய மூலம் எப்படி வந்தது? என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

போலியான ஆடிட்டர்கள் காட்டுகின்ற கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் மூலம் பினாமி சொத்துக்கள் யார்? யார்? இடம் இருக்கிறது? என்பது குறித்து அவர்களுடைய வாக்குமூலம் வாங்க வேண்டும். அவர்கள் தானே சான்று கொடுக்கிறார்கள்.

அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும். நாட்டில் ஊழலையும், ஊழல்வாதிகளையும், ஒழிக்காத வரை, அரசியலில் ரவுடிகளை ஒழிக்க முடியாது.

மேலும் ,நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும். இந்தியாவுக்கு எதிராக பேசுபவர்களை முஸ்லிம்களாக இருந்தால், அவர்களை பாகிஸ்தானுக்கு பேக் செய்ய வேண்டும். இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால், பொது சிவில் சட்டம் அவசியமானது.

மேலும், இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளாக பேசிக் கொண்டிருப்பார்களுக்கு, சப்போர்ட் செய்யக்கூடிய அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் எதுவாக இருந்தாலும் ,அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல் பத்திரிக்கை துறையில் சர்குலேஷன் சட்டத்தை எடுக்க வேண்டும். வியாபார பத்திரிகைகள், அரசியல் கட்சி பத்திரிகைகள் ,இதற்கு சலுகை ,விளம்பரங்களை சர்குலேஷன் மூலம் தேர்வு செய்வது, பத்திரிக்கை துறைக்கு எதிரானது.

மேலும் ,பத்திரிக்கை என்பது மக்களுக்கானது. செய்தி மக்களுக்கானது.இவர்கள் ஆட்சியாளர்களுக்காகவும், அரசியல் கட்சிக்காகவும் , பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டு, செய்திக்கும் விளம்பர படுத்தும் நோக்கத்திற்கும் அர்த்தம் தெரியாத செய்தித் துறை அதிகாரிகள், பிரபகண்டா செய்திகளையும், அதையும் சர்குலேஷனில் கொண்டு வந்து, மத்திய, மாநில அரசு பத்திரிக்கை துறையில் சட்டமாக வைத்திருப்பது கேலிக்கூத்தானது.

எனவே,சட்டத்தை மாற்றாமல், சமூக முன்னேற்றமும் சமூக மாற்றமும் இல்லை. இந்த சட்டங்கள் உழைப்பவனுக்கு எதிராக உள்ளது. நேர்மையாளர்களுக்கு எதிராக உள்ளது.

மேலும்,கிரிமினல்ஸ் அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் ஒளிந்து கொண்டு சட்டத்தின் மூலம் தப்பிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எனவே காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கேற்ப, கால சூழ்நிலைக்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்படுவது அவசியமானது.

அதுவரை மனித வாழ்க்கை இந்தியாவில் சட்டப் போராட்டம் என்பது தொடர்கதையாகவே இருக்கிறது இதை தனி மனித வாழ்க்கை முதல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் வரை இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம்.

“சட்டங்கள் திருத்தப்படாத வரை உழைக்கும் மக்களின் போராட்டம் தொடரும்!”
⚖️ காலத்திற்கேற்ற சட்டங்கள் தேவை!

மக்கள் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் என்பது தேர்தல் மட்டும் அல்ல…!

மக்களின் உரிமைக்கான குரல் ! மக்கள் விழிப்புணர்வே
ஜனநாயகத்தின் வலிமை!

மக்கள் அதிகாரம் மக்களுடன் என்றும் !மக்கள் நலனில் என்றும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *