நாட்டில் மாநிலங்களில் நடைபெறும் ஆட்சி, ஊழலை தடுக்கவில்லை என்றால், மத்திய அரசு அதை தடுக்க நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டு வருமா ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல்கள் தலைவலித்தாடுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சியே நடக்கிறது.  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கும் ,நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் மோடியே தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் எந்த துறை எடுத்துக் கொண்டாலும் ,அது ஊழல் நிர்வாகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது .அது அதிகாரிகள் செய்யும் தவறா?  அல்லது அமைச்சர்கள் செய்யும் தவறா?  என்பதை மக்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகைகள், சமூக நல அமைப்புகள் இவர்களுக்கு இவ்வித பாதுகாப்பும் இல்லை .

மேலும், இந்த சட்டங்கள் பல ஓட்டைகளில் தப்பித்துக் கொள்ள ஊழல்வாதிகளுக்கு இடமளிக்கிறது. இது தவிர ,ஊழல் புகார்கள் அளிக்கும்போது, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள்,சமூக நல அமைப்புகள், காவல்துறையால் மிரட்டப்படுகிறார்கள் .சட்டம் யாருக்கு பாதுகாப்பு?  என்பதை கூட தெரியாமல் தமிழ்நாட்டு காவல்துறை இருந்து வருகிறது. மேலும், இப்படிப்பட்ட ஓட்ட சட்டத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுவது, மிகப்பெரிய சவால்களாக உள்ளது. அதனால் ,இங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டு வந்தால் இந்த ஊழல் பிரச்சனைக்கு முக்கிய தீர்வு காண முடியும் .

மேலும், காவல்துறை தவறுகள் முதல் அனைத்து துறை சம்பந்தமான நிர்வாக சீர்கேடுகள் வரை நடவடிக்கை எடுக்க ஊழலுக்கான புதிய சட்டம் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் .அப்படி கொண்டு வந்தால், இப்போது உள்ள மந்திரிகள் நீதித்துறையில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளை தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஊழல் செய்த சொத்துக்கள் பறிமுதல் செய்ய உடனடி நடவடிக்கை தேவை. இப்படிப்பட்ட கடும் சட்டங்கள் கொண்டு வராத வரை, நாட்டில் ஊழலுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள், சமூக போராட்டங்கள் ,அரசியல் கட்சிகளே ஊழல் செய்து கொண்டு, அதிலே அரசியல் செய்து கொண்டு மக்களை முட்டாளாக்கி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த ஊழல் பணம் தான் தான் ஓட்டுக்கு மக்களிடம் பணமாக  கொடுக்கப்படுகிறது .

அதனால், பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க சட்ட சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். அது சாதாரண கிராம பஞ்சாயத்து முதல் நகராட்சி,பேரூராட்சி வரை இதற்கான புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும்.

 ஏனென்றால் நாட்டில் 1965 முன்னாள் கௌரவத்திற்காக இந்த பொறுப்புக்களை மக்கள் கொடுத்தார்கள் என்று மதித்து வாழ்ந்தார்கள். இப்பொழுது தாய் கருவிலிருந்து வெளிவந்ததிலிருந்து ,இந்த பொது சொத்துக்களை எப்படி கொள்ளை அடிக்கலாம் ? அதில் எவ்வளவு கோடி பார்க்கலாம் ? அதில் எவ்வளவு ஊழல் செய்யலாம்?  என்ற பேராசை அதிகரித்து விட்டது. இதன் பின் விளைவு தான் இன்று நாட்டில் அரசியல் கட்சி ரவுடிகளுடனும்,  பொய் வழக்கு போடுகின்ற காவல் துறையினருடனும், உள்ளாட்சி நிர்வாகிகளுடனும் மக்கள் போராட வேண்டி உள்ளது.

 வாக்களித்த மக்கள் ஐந்து வருடம் இவர்களை எந்த கேள்வியும் கேட்க கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ,மாநில அரசு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது இந்திய மக்கள் அனைவரின் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *