
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் எதை நோக்கி அரசியல் செய்கிறார்கள்? வாக்குகளை நோக்கி தான் அரசியல் செய்கிறார்கள்.

மக்களை நோக்கி அரசியல் செய்ய அரசியல் கட்சிகள் எது? என்று தேட வேண்டி இருக்கிறது. கொடுக்கிற பணத்திற்கு கூலிக்கு கூடுகிற கூட்டமாக இருக்கின்ற இந்துக்கள் யார் கூப்பிட்டாலும், போய் உட்கார்ந்து கொள்கிறார்கள்.
இந்த நிலை, உங்களிடம் இருந்து மாற வேண்டும். அடுத்தவனை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து, மாற வேண்டும்.

உங்களுக்கு 1000, 500 கொடுத்து அவன் மொத்தமாக கொள்ளை அடிக்க வருகிறான் தமிழ்நாட்டில் இதை எந்த ஒரு ஊடகமும், உங்களுக்கு இந்த உண்மைகளை சொல்லாது.

நீங்கள் உண்மைகளை படிக்காமல் இந்த ஏமாற்று அரசியல் கூட்டத்திலும் இருந்து, விடுபட முடியாது. அரசியல் என்பது சுயநலத்திற்காக அரசியல் இல்லை. அது பொதுநலத்திற்காக அரசியல் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், அரசியல் என்பது வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். அரசியல் வியாபாரிகளை நம்பி உங்களுடைய வாக்களித்தால், வியாபாரிக்கு தான் லாபமே தவிர, விவசாயிகளின் கதி தான் வாக்களிப்பவர்களுக்கு ஏற்படுகிறது. கஷ்டப்பட்டு, வேர்வை சிந்தி விளைச்சல் வரும்போது அவன் வைக்கின்ற வேலை தான் அந்த பொருளுக்கு கொடுப்பான்.

அதுவாவது, பொருள் ,ஆனால் உங்களுடைய வாக்கு விலைமதிப்பற்றது. இதற்கு விலை கொடுக்கும் வியாபாரிகள் உங்கள் வாக்குகளை விலை பேசி விட்டால், அதோடு உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டான். இதுதான் ஒவ்வொரு ஐந்தாண்டும் நடக்கின்ற இந்த வாக்கு வங்கி வியாபார அரசியல்.

இதற்கு புரோக்கர்களாக ஒரு ஊருக்கு பத்து அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் அரசியல் பற்றி தெரியாது. தான் பிழைப்பு நடத்துவதற்கு அரசியல் தெரியாத மக்களிடம் விலை கொடுத்து வாக்குகளை ஒரு வியாபாரிக்கு சேர்க்கிறார்கள். இதுதான் வாக்கு வங்கி வியாபார அரசியல்.மேலும்,

ஒவ்வொரு ஊரிலும், நகரிலும், இருக்கக்கூடிய பத்து அரசியல் கட்சியும், அந்த ஊருக்கு என்ன நல்லது செய்கிறார்கள்? என்ன பொது நலன் சேவை, இவர்கள் செய்கிறார்கள் ?அதுதான், எனக்கு தேவை. ஒரே ஒரு ஆள்? ஒரே ஒரு கட்சி? யாராவது இருக்கிறார்களா?

இவர்கள் சொத்து சம்பாதிக்க அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பதவிக்கு வர அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆயிரம், ஐநூறு கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி , ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றத்திற்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது உழைப்பவனுக்கு ஏமாற்றம். ஊரை ஏமாற்றுபவனுக்கு முன்னேற்றம். இது எல்லா கட்சியிலும் இருக்கிறது.

நாட்டில் இன்று அரசியல் என்பது சுயநலத்தின் உச்சம் ஆகிவிட்டது. இதற்கு காரணம் இந்த மக்களிடையே பிரிவினை சக்திகள் அதிகமாக பேசி, இந்த அரசியல் கட்சிகள் ஜாதியையும், மதங்களையும், பிரித்தாலும் அரசியலில், இவர்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் தான் தமிழ்நாட்டு அரசியல்.

இதை எப்படி வருங்கால சமுதாயம் எதிர்கொள்ள போகிறது? இந்த உண்மைகள் கசப்பானது. பணக்காரன் எப்படியும் பிழைப்பான் என்று சொல்ல முடியாது. அவனுக்கும் ,இந்த சமூகத்தில் ஒரு போராட்டமான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏழை, நடுத்தர மக்களும் இந்த சமூகத்தில் ஒரு போராட்டமான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன? இந்த மக்களிடம் நல்ல எண்ணம் நேர்மை உழைப்பு குறைந்துவிட்டது. உழைக்காமல் எப்படி முன்னேறுவது? உழைக்காமல் எப்படி முன்னேற முடியும்? ஏமாற்றினால் தான் முன்னேற முடியும்.

இதை எல்லா அரசியல் கட்சியினரும் உழைக்காமல் முன்னேறுவது எப்படி? எல்லோருக்கும் ,எளிதானது மைக்கிலே பேசிவிட்டு போவது. அதற்கு எந்த முதலிடோ, கஷ்டமோ தேவையில்லை. 50 ,100 பேர் கூட்டிக்கொண்டு, இருக்கவே இருக்கிறது .கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகள், அதிலே என்னென்ன பொய்களை சொல்ல வேண்டுமோ, அத்தனை பொய்களையும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.மேலும்,

ஒருவரைப் பற்றி ஒருத்தர் விமர்சனம் செய்து கொள்ளலாம். இவர்களே சொல்லவில்லை என்றாலும், செய்தியாளர்கள் கேட்பார்கள் ,அவர் உங்களைப் பற்றி இப்படி பேசினாரே அவர் இவரைப் பற்றி இப்படி பேசினாரே, இதுதான் அரசியல். இவங்க பேசறதுக்கு தான் அரசியலா?

இதைவிட இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நீங்கள் செய்கிறீர்களோ, இல்லையோ வாயிலை செய்யாததையும், வாரி விடுங்கள். என்ன அதனால் நஷ்டம் ஆகிவிடும்? ஆனால் உண்மையை பேசக்கூடிய அரசியல்வாதிகள் நாட்டில் இல்லை. நேர்மையான அரசியல்வாதிகள் இல்லை. உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய ஊடகங்கள் இல்லை. பத்திரிகைகள் இல்லை. இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை.
இதை நாளைய சமுதாயம் இதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? இது மிகப்பெரிய அரசியல் போராட்டம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் போராட்டத்திற்குள் அவரவர் மதங்கள், ஜாதிகள் ,கலாச்சாரங்கள் இது எல்லாவற்றிற்கும், இதற்குள் அரசியல் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் போராட்டத்தின் அரசியல்

தற்போது திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தின் உச்சியில் அரசியல் ஆரம்பித்திருக்கிறது. இதை மத அரசியலாக பார்க்க முடியாது. இது தெய்வ வழிபாட்டின் உரிமை. இதைத்தான் நீதிமன்றம் ஜி .ஆர் .சாமிநாதன் கொடுத்த தீர்ப்பு தெய்வ வழிபாட்டின் உரிமையை இந்துக்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு.

அந்தத் தீர்ப்பை நிறைவேற்றாத திமுக அரசு, மேல்முறையீடு செய்கிறது. இது இந்துக்களுக்கு எதிரான ஒரு அரசியல். இதே அரசியல், அதே மலை மீது சந்தனக்கூடு நடத்த அனுமதி கொடுத்து, அந்த மலையில் கொடியேற்றுகிறார்கள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், பாரம்பரியமிக்க திருப்பரங்குன்றம் மலை, பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, அதன் வரலாறு நிற்கிறது. வெள்ளைக்காரன் காலத்தில் அங்கே தர்கா வந்து, தர்காவுக்கு முக்கியத்துவம் ஆகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் ,அதிகாரிகள் அதை செயல்படுத்தவில்லை. இங்கே மக்களுக்கு இதை செய்து விடுவோம்,அதை செய்து விடுவோம், இலவசமாக இதைக் கொடுப்போம், அதை கொடுப்போம், இந்த கடன்களை தள்ளுபடி செய்து விடுவோம் ,அந்த கடன்களை தள்ளுபடி செய்து விடுவோம், எல்லாம் வாயிலே பேசிவிட்டு, ஒரு புத்தகமாக தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள்.

அதை இந்த தொலைக்காட்சிகள் ,பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி மக்களை மகிழ்வைப்பார்கள். இதைதான் மக்கள் பார்த்து ஏமாற வேண்டும். இந்த ஏமாற்று அரசியல் தான் தொடர்ந்து மக்கள் அதிகாரத்தில் உண்மைகளை தொடர்ந்து எழுதி ஆனால் மக்களுக்கு தான் எது உண்மை என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,உண்மையை எடுத்துரைக்க தான் பத்திரிகைகள் ,அரசியல் கட்சியினர் சொல்லும் பொய்களை மக்களிடம் சொல்லி, மக்களை ஏமாற்றுவதற்கு பத்திரிகைகளும் ,தொலைக்காட்சிகளும் தேவையில்லை.
சட்டங்கள் மக்களுக்காகத் தான், சட்டங்களுக்காக மக்கள் இல்லை. காவல்துறை சட்டத்தை பாதுகாக்க தான் காவல்துறையே தவிர, சட்டத்தை மீறி செயல்படுவதற்கும், அதை ஏமாற்றுவதற்கும், அதில் இருட்டடிப்பு செய்வதற்கும், காவல் துறையின் செயல்பாடுகள் தேவை இல்லை .

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தான் காவல்துறையே தவிர, ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மட்டுமே காவல்துறையில்லை.மேலும்,
மக்களின் வரிப்பணத்தில் தான் காவல்துறையினர் சம்பளம் வாங்குகிறார்கள் .ஆட்சியாளர்களின் வீட்டிலிருந்து சம்பளம் வாங்கவில்லை. இங்கே காவல்துறை அவர்களுடைய கடமை என்ன? என்று கூட தெரியாமல் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை, நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை. ஆட்சியாளர்களின் எடுப்பு வேலைக்கு காவல்துறை என்று ஆக்கி விட்டார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால், சட்டங்கள் மாற்றியமைக்க வேண்டும். மேலும்

ஒரு நீதிபதியின் உத்தரவே இந்த நாட்டில் செயல்படுத்தாமல் அவரை தகுதி நீக்கம் செய்கின்ற அளவுக்கு மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள். சாமானிய மக்களின் நிலைமை என்ன? இதையெல்லாம் விட்டு,விட்டு கொள்கை என்று பேசி, ஏமாற்றுகிற கூட்டம், வாய்க்கு வந்ததெல்லாம் நியாயப்படுத்தும் கூட்டம் ,இதையெல்லாம் நியாயப்படுத்தும்.
இதையே தான் பத்திரிகை, தொலைக்காட்சிகள் கூட்டம் தமிழ்நாட்டில் அரசியல் என்று ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த மக்களுக்கு அரசியல் புரிதல் இல்லாதது தான் முக்கிய காரணம் என்று தொடர்ந்து எழுதி வருகிறேன்.

மேலும் ,இதில் ஒவ்வொருவருடைய வேலைகள், முக்கிய எதிர்பார்ப்புகள், குடும்ப சூழ்நிலைகள் ,பொருளாதார வசதி வாய்ப்புகள், இதற்காக தனிமனித போராட்டம் வாழ்க்கையோடு, போராடிக் கொண்டிருக்கும் போது, அரசியலைப் பற்றி அலட்சியமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால், இவர்களின் ஒட்டு மொத்த அரசியல் எல்லாவற்றையும் பாதிக்கிறது.அது, எல்லாவற்றுக்கும், முக்கிய காரணமாக இருக்கிறது, என்பதை இந்த மக்கள் இன்னும் புரிதல் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,
இந்த அரசியலில் தான் பாதிக்கப்படும் போது மட்டும் தான் இந்த அரசியல் பற்றி ,ஆட்சியைப் பற்றி விமர்சிக்கிறார்கள். வேறு ஒருவன் பாதிக்கப்படும்போது, அந்த வலியும், வேதனையும் இவர்களுக்கு தெரியவில்லை.
இப்படிப்பட்ட சுயநலத்தில் உங்கள் வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் போது தான், இவ்வளவு அரசியல் கட்சிகள், உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இதில் ஒரு மிகப்பெரிய கொடுமை நடிகர்கள் சினிமாவை விட்டு தற்போது வந்திருக்கும் விஜய் சினிமாவில் வசனம் பேசுவது போல, பேசி விட்டு போய்க் கொண்டிருக்கிறார்.
அதற்கு பின்னாலும், கூட்டம் கூடுகிறது .அதையும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் முன்னிலைப்படுத்துகிறது. வாயிலே பேசுவது எல்லாருக்கும் சுலபம்

அது விஜய்க்கு எழுதி கொடுத்து பேச வைப்பது, என்பது அரசியலில் சாமானிய மனிதனும் ,சாதாரண மக்களும் பேசலாம். பணம் இருப்பவன் அரசியல் என்று இந்த மக்கள் எப்போது நினைப்பதை நிறுத்துகிறார்களோ ,அப்போதுதான் இதற்கு ஒரு முடிவு.
மேலும்,தகுதி என்பது அரசியலில் எப்போது தேர்வு செய்கிறார்களோ, அப்போது தான் இதற்கு ஒரு தீர்வு, வெளிநாடுகளில் தகுதிக்கு தேர்வு, கேரளாவில் தகுதிக்கு தேர்வு, ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் பணத்துக்கு தேர்வு,
அரசியலுக்கு நேர்மை, உழைப்பு, பொதுநலம் ,இது இல்லாமல் எந்த அரசியல் கட்சியிலும், இருப்பவர்களுக்கு வாக்களிப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் என்பது இறுதிவரை ஏமாற்றம்தான்.
மேலும்,இது அரசியல் கட்சிகளையும் தாண்டி நாம் தேர்வு செய்ய வேண்டிய ஒரு முக்கிய அரசியல் என்பதை புரிந்து அரசியலை தேர்வு செய்யுங்கள். தவிர,
தமிழ்நாட்டில் இந்துக்கள் அதிகம், கோயில்கள் அதிகம், கோயில் கோயிலாக போயிட்டு சாமி கும்பிடுவது இந்துக்கள் தான் அதிகம். ஆனால், இந்துக்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு வாக்களித்து ,அவர்களை தேர்வு செய்கிறார்கள்.

திமுக இந்துக்களின் எதிரியாகிவிட்டது என்பதை திருப்பரங்குன்றம் முருகன் தான் மலை மீது ஏற்படுத்தியிருக்கும் அரசியல். இதற்காக ஒரு உயிரை தியாகம் செய்த பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு கூட எந்த அரசியல் கட்சியும், உதவ முன் வரவில்லை. எல்லாம் வாயிலே பேசிக்கொண்டு அரசியல் செய்கிறார்கள். அப்படி என்றால், இந்த அரசியல் ஒரு வெத்து விட்டு அரசியலா? ஆம் ,இது ஒரு வெத்து வெட்டு அரசியல்.
வாயில பேசி விட்டு போவது ,என்ன அரசியல்? வெத்து வெட்டு அரசியல். என்ன செய்தீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? இதுவரை செய்தது என்ன? இதுதான் அரசியல்?

கொடி கட்டுவது, கோஷம் போடுவது, கூட்டத்தை காட்டுவது, இது எல்லாம் ஏமாற்று அரசியல். இந்த ஏமாற்று அரசியலை நம்பி ,இளைய சமுதாயம், படித்த சமுதாயம் ஏமாறாதீர்கள்.
நாளைய அரசியலில் உங்களின் எதிர்காலம்…. !கேள்விக்குறியாகும்? சிந்தியுங்கள். அரசியல் என்பது நேர்மை, தியாகம், அர்ப்பணிப்பு, இதற்கு தகுதியானவர்கள், எத்தனை அரசியல் கட்சிகளில், எத்தனை பேர் இருக்கிறார்கள் ?என்பதை தேர்வு செய்யுங்கள்.
கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்கைகளில் பேசி விட்டு, போகும் கூட்டமெல்லாம் ,அரசியல்வாதி கிடையாது. ஒரு அரசியல் கட்சியை இன்னொரு அரசியல் கட்சியை விமர்சனம் செய்பவன், அரசியல் கட்சி தலைவன் இல்லை. அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவன், சுயநலவாதியாக, அரசியலில் பிழைப்பு நடத்துபவனாக தகுதியில்லாதவனாக தான் இருப்பான்.
அதனால் கூட்டத்தைப் பார்த்து, இவர்களுடைய மேடை பேச்சுகளை பார்த்து, கைதட்டி கொண்டு, தொலைக்காட்சி மைக்கைகளில் பேசுவதை பார்த்து , தவிர, சினிமாவில் நடித்துவிட்டு வந்து நடிப்பு அரசியலை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாறாதீர்கள்.