நீதிபதிகள் சட்ட மாண்புகளை மீறுவதற்கு ஆட்சியாளர்களின் அரசியல் கட்சிகளின் பரிந்துரை தான் முக்கிய காரணமா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில்,நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் மகாதேவன் கொடுக்கப்பட்ட தீர்ப்பு,குடியரசுத் தலைவர் மற்றும் கவர்னரின் அதிகாரங்களை பறித்து இவர்களே அந்த அதிகாரத்தின் உச்சமாக மாறிவிட்டார்கள். மேலும்,மகாதேவன் நீதிபதி திமுக கட்சிக்காரர் ஆக இருந்தவர் என்று நீதித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. நான் சந்தேகப்பட்டது சரியாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட நீதிபதிகளால் தான் அரசியல் ஊழல்வாதிகள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.மேலும்,

இவர்கள் ஒரு வேலை சட்ட புத்தகத்தை படிக்காமல் நீதிபதிகளாக வந்து விட்டார்களா? அல்லது அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளின் பேரில் நீதிபதிகளாக ஆனவர்களாக இருந்தால் சரியான முறையில் சட்டத்தை படிக்க வாய்ப்பே இல்லை. பெரும்பாலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்ற கூடியவர்கள் மெரிட்டில் (merit ) ல் வந்தவர்களாக இருக்க வேண்டும்.

மேலும்,சட்டம் தெரியாமல் நீதிபதிகளாக வந்ததால், இன்று நாட்டில் ஊழல்வாதிகளுக்கு நீதிமன்றத்தில் வாய்தா கொடுத்து,சட்டத்தின் ஓட்டை மூலம் அவர்களை தப்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை எப்போது மாற்றப்படுமோ அப்போதுதான் சட்டத்தின் நீதி சாமானிய மக்களுக்கு எளிதாக கிடைக்கும்.

மேலும், அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் வருகின்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளுக்கு பக்கபலமாகவே இருந்து வருகிறார்கள். அவர்களால் சாமானிய மக்களுக்கு நீதி பெற்றுத் தர முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. மேலும்,அவர்களுடைய தீர்ப்பு மக்களிடையே பேசுபொருளாகி நீதித்துறை வெட்கித் தலை குனிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட தவறுகளால், நாட்டு மக்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனைகளை அது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது? மேலும் நீதித்துறையில் அரசியல் தலையீடு உச்சபட்சமாக வருவதற்கு இதுதான் முக்கிய காரணம்.இது தவிர, நீதித்துறையில் சாமானிய மக்களுக்கு எளிதில் நீதி கிடைக்காமல் அவர்கள் போராட வேண்டி இருக்கிறது.

மேலும்,உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளுநரின் அரசியல் அதிகாரத்தை மீறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கி உள்ள தீர்ப்பு,மத்திய அரசு அதை மேல்முறையீட்டுக்கு கொண்டு செல்ல தயாராகி வருகிறதாம்.

இப்படிப்பட்ட தீர்ப்பு,இது நீதித்துறைக்கு எவ்வளவு பெரிய அவமானம்? சட்டத்தை சரிவர படிக்காமல் கொடுக்கப்பட்டதா? அல்லது எதிர்பார்ப்புக்கு கொடுக்கப்பட்டதா? எல்லாம் வல்ல கடவுளுக்கு தான் உண்மை தெரியும் என்று இது பற்றி மக்கள் பேசி வருவது சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழுகின்ற மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *