
தமிழக அரசு கடந்த 2023 ஆண்டிலிருந்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க 5750 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன், நிலத்தை ஆய்வு செய்து இருக்க வேண்டும். மேலும்,மண் ஆய்வு செய்யாமலே, அரசாணை வெளியிட்டது, தமிழக அரசின் தவறு. இது ஒரு பக்கம், இருப்பினும்,

அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் நிலை எடுப்புக்கு எதிராக போராட்டம் தெரிவித்து, வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தவிர, நில எடுப்புக்கு உத்தரவிட்ட பகுதியில் 26.5% நிலம் நீர் நிலை ஆக்கிரமித்துள்ளது.

மேலும், பெரும்பாலான நிலப் பரப்பு அப் பகுதி களிமண் பூமியால் ஆனது. இந்த களிமண் பூமி என்னதான் அப்பகுதியில் விமான ஓடுதளம் அமைக்கும் போது, நிச்சயம் அந்த ரோடுகள் வெடிப்புகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.

எனவே, பரந்தூர் விமான நிலையம் குறித்து மண் ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், கூறும் கருத்து அப்பகுதி ஒரு பக்கம் நீர் நிலை ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் களிமண் பூமியாக இருந்து வருகிறது. இது தவிர, விவசாயிகள், பொதுமக்கள் இத் திட்டத்தை கைவிட போராடி வருகிறார்கள்.மேலும்,

இனியாவது மத்திய ,மாநில, அரசுகள், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டு ,மறு பரிசீலனை செய்வார்களா ?