
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் தொடர்ந்து, சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, செய்தித்துறை சலுகை, விளம்பரங்களை கொடுக்க வேண்டும் என்று பத்தாண்டுகளாக செய்திகளை செய்தி துறைக்கு தெரிவித்துள்ளது.

இதற்கு இப்போதுதான் அரசாங்கம் இதற்கு ஜி.ஓ. (G.O.) வரவுள்ளதாக தலைமைச் செயலகத்தில் கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் என்னிடம் தெரிவித்தார். அதற்கு அவருக்கும்,அரசுக்கும், மிகவும் நன்றி என்று தெரிவித்தேன்.மேலும், சமூக நலன் பத்திரிகைகள் எல்லாம் வியாபார நோக்கம் இன்றி, சமூக நோக்கத்திற்காக பத்திரிக்கை நடத்துகிறோம். இந்த ஐந்தாண்டு காலம் பத்திரிக்கை துறையில் மிகவும் வேதனையும், வெறுப்பும் சந்தித்தோம் என்று தெரிவித்தேன்.
இந்தப் போராட்டத்திற்கு பின்னால், பத்திரிக்கை துறையில் எவ்வளவு விமர்சனங்களை, எவ்வளவு கேவலமான பேச்சுகளை, கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் இருந்து வருகிறார்கள். இதில் எப்படி? அரசு எந்தெந்த விதிமுறைகளை வகுத்துள்ளது? என்பது தெரியவில்லை. ஆனால், இதற்கான ஜி.ஓ. மட்டும் வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், பத்திரிக்கை துறையை ஆய்வு செய்து உண்மைகளை மக்களிடமும், செய்தித்துரைக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இப்போதும், மத்திய அரசுக்கும், செய்தித் துறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உண்மைகள், தமிழ்நாட்டு செய்தித் துறைக்கு மட்டுமல்ல, தொடர்ந்து மத்திய அரசுக்கும், இந்த செய்திகளை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தெரிவித்து தான் வருகிறது .

மேலும், பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய கார்ப்பரேட் பத்திரிகையின் போலி பிம்பங்களை மக்களுக்கும், செய்தி துறைக்கும் எடுத்துரைத்தேன். இப்போது கூட, சில தினங்களுக்கு முன் அதிகாரிகளுக்கு, மக்கள் அதிகாரம் புத்தகத்தை கொடுத்து அவர்களிடம் கருத்து கேட்பேன். அதில் ஒரு சிலர், சில பத்திரிகைகள் கொடுத்தாலும், வாங்கி வைத்துக் கொள்கிறோம். ஆனால், மக்கள் அதிகாரம் படிக்கிறார் போல், விஷயங்களை, உண்மைகளை எடுத்துச் சொல்கிறீர்கள், என்கிறார்கள்.
மேலும்,நமக்கு திமுக கட்சியோ அல்லது ஆட்சியோ எதிரி அல்ல.அது மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் வேண்டியது, வேண்டாதது என்ற பாகுபாடும் இல்லை. நம்முடைய நோக்கம், மக்களுக்கு யார்? நல்லது செய்கிறார்கள்? ஆட்சி எதை நோக்கி போகிறது? வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறதா? இதுதான் தேவை. ஆனால்,
பல கார்ப்பரேட் பத்திரிகைகள் அரசியல் கட்சியினர் பேசுவதை எல்லாம் உண்மை என்று மக்களிடம் கொண்டு செல்வது, பத்திரிக்கையின் போலியான பீம்பம், இதை மக்கள் அதிகாரம் மக்களிடம் சொன்ன ஒரு உண்மை.மேலும், நாட்டில் லட்சம் பத்திரிகைகள் வரலாம். ஆனால், பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய அவலங்களை சொன்ன ஒரு பத்திரிக்கை மக்கள் அதிகாரம்.

அது இந்து ,இந்தியன் எக்ஸ்பிரஸ் அல்ல, ஒரு சாமானியனின் பத்திரிக்கை….! மக்கள் அதிகாரம்.
எனவே, லேபில் தான் பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இன்றைய செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் பிம்பங்களை உடைத்தது மக்கள் அதிகாரம். அதுமட்டுமல்ல ,இது பத்திரிக்கை வட்டாரத்தில்! இந்த கருத்துக்கு, இந்த உண்மைக்கு, தலைமை செயலகத்தில் கூட நிருபர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது.
மேலும்,கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலே இதற்கான ஒரு ஜீ.ஓ. வர வேண்டியது அது தேர்தல் நெருங்குகின்ற சமயத்தில், அப்போதைய செய்தித்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் கடைசி நேரத்தில் அனுப்பப்பட்டதால், அது தோல்வி அடைந்து விட்டது. இப்போது இந்த ஜனவரி முடிவதற்குள் இதற்கான அரசாணை வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார்கள்.

மேலும்,தமிழக அரசு பருவ இதழ்களுக்கு சலுகை, விளம்பரங்கள் இதுவும் பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் ,அரசு இதைக் கொண்டு வருகிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால், சிவந்தி ஆதித்தன் இருக்கும் வரை, இப்படிப்பட்ட சமூக நலன் பத்திரிகைகள் வளர விடாமல், பார்த்துக் கொண்டார்கள். அப்போதுதான் அவர்களுடைய பத்திரிகை வியாபாரம் நன்றாக இருக்கும்.
மேலும், இப்போதும் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை முதலாளிகள், தொடர்ந்து இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள்.அப்போது, அரசையும் மிரட்டி கூட செய்தி போட்டவர்கள் உண்டு.
ஆனால், இப்போது திமுக அரசு பருவ இதழ்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க அரசாணை வெளியிட்டால் , பத்திரிக்கை துறையில் இது ஒரு வரலாற்று அரசணையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேலும், தகுதியான பத்திரிகைகள்! சமூக நோக்கத்திற்காக வெளிவரும்போது, அது ஆட்சியாளர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது, இந்த தேசத்திற்கும் நல்லது. எனவே, லேபிள் வைத்து பத்திரிக்கை இல்லை, என்ற உண்மையான கருத்தை பத்திரிகை வட்டாரத்தில் பதிய வைத்த ஒரு உண்மை மக்கள் அதிகாரம், என்பதை பத்திரிகை உலகம் புரிந்து கொண்டால் சரி.
Also, worthy newspapers! When they come out for social purposes, it is good for the rulers, good for the people, and good for this nation. Therefore, it would be good if the world of journalism understood that a true makkal adhikaram has imprinted the true idea in the press circle that there is no such thing as a label-based newspaper.
ஆசிரியர்.Editor