பிரதமர் மோடி அரியானா மாநிலத்தில் இன்று பெண்களுக்கு மாதம் ரூபாய் 7000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
முதல் முறையாக இந்த திட்டம் அரியானாவில் துவக்கப்பட்டு, பின்பு விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் பெண்களை முகவர்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
எல். ஐ.சி சஹி பீமா திட்டம் இதில் முதல் ஆண்டு ஏழாயிரம் அடுத்த ஆண்டு 6000 அதற்கடுத்து ஐயாயிரம் என தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இத் திட்டம் பெண்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெரும் என்பதில் ஐயமில்லை.