
தேர்தல் நெருங்க ,நெருங்க அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துகிறது. காலையில், சென்று மாலை வரை உழைத்து விட்டு, வீட்டுக்கு திரும்பும் வேளையில், அரசியல் கட்சியினரின் கூட்டங்களால், ஒவ்வொரு பகுதியிலும், பொதுமக்களுக்கு வீட்டுக்கு செல்லும்போது, டிராபிக் ஜாம் ஏற்படுத்தி விடுகிறார்கள்.

இதனால், பொதுமக்கள் சரியான நேரத்திற்கு, அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சில பேர் ஓடிப் போய் ரயில்களில் ஏற வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேர் பஸ் மூலம் வீட்டுக்கு செல்ல வேண்டி இருக்கும்.
இவை அத்தனைக்கும், இந்த போக்குவரத்து இடையூறுகள் பொதுமக்களுக்கு இனி வரும் காலம் கட்டத்தில், அதிக அளவில் நிகழ வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், சுமார் 20 அரசியல் கட்சிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் ,இந்த அரசியல் கட்சி கூட்டங்களை ஏற்பாடு செய்தால், என்ன ஆகும்?

பொது மக்கள் தினமும், வீட்டுக்குப் போகும் நேரத்தில், அலுவலகத்தை வீட்டுச் செல்லும் பெண்களும், மாணவ, மாணவர்களும், ஆண்களும் டென்ஷனில்,இந்த அரசியல் கட்சிகளை மனதளவில் திட்டிக் கொண்டு இருப்பார்கள். எப்படி திட்டினாலும், கவலைப்படாதவர்கள் அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய அடியாட்கள் , அதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் உங்கள் அரசியல் கட்சியின் நற்பெயரை காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்! எனவே,

அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தாமல் ,நடத்திக் கொள்வது நல்லது. அதாவது காலையில் அவர்கள் வேலைக்கு செல்லும்போதும், மாலையில் வீட்டுக்கு திரும்பும் போதும், இந்த நேரத்தில் ஒவ்வொரு நகரப் பகுதியிலும் போக்குவரத்து இடையூறுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளாமல் ,இவர்கள் அரசியல் பொதுக் கூட்டங்களை நடத்திக் கொள்ள வேண்டும்.
இதனால் பொதுமக்களுக்கும் பாதிப்பு காவல்துறையின் இருக்கும் ஒரு கஷ்டமான வேலை என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து கொண்டால் சரி.