போதைப் பொருளை இறக்குமதி செய்யும் ஆட்சியில் இயற்கையின் அருமை தெரியுமா ? – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் .

அரசியல் ஆன்மீகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 29, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை எல்லாமே இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் பட்டங்கள் வாங்கவில்லை. செல்போன் பார்க்கவில்லை. டிவி பார்க்கவில்லை. இன்டர்நெட் பார்க்கவில்லை. 

ஆனால், இயற்கையை மட்டும் தான் பார்த்தார்கள். இயற்கை வாழ்வியலோடு வாழ்ந்து பார்த்தார்கள். இந்த நேரத்திற்கு சூரியன் இந்த இடத்தில் உதித்தால், இத்தனை மணி என்று கணக்கிட்டார்கள். வானத்தைப் பார்ப்பார்கள். சந்திரனைப் பார்த்து சந்திரன் பூத்திருந்தால், மழை வரும் என்பார்கள். ஆடு, மாடுகளோடு வாழ்ந்த மக்கள் கஞ்சியோ அல்லது கூழோ குடித்து விவசாயம் செய்த மக்கள், எவ்வளவு அன்போடு, பாசத்தோடு வாழ்ந்தார்கள்.இப்போது பாசம் என்பது வெளி வேஷமாகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பணம், பதவி ,போலி கௌரவம், எதுவுமே மனிதனுக்கு சந்தோஷத்தை, நிம்மதியை தராது என்று பலமுறை எழுதியிருக்கிறேன். இவை எல்லாம் உண்மையின் ஆய்வு. 

மேலும், தமிழ்நாட்டில் மரங்களை வெட்டி, இயற்கையை அழித்து, மனிதன் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறான். இயற்கை என்னும் மரங்கள் மனிதனுக்கு சுத்தமான காற்றை தருகிறது. அந்த மரத்தை வெட்டி விட்டால் அங்கே ஆக்சிஜனுக்கு பஞ்சம். சூரிய வெப்பத்தின் தாக்கம் பூமிக்கு நேரடியாக விழும் பொழுது ,இன்று வெயிலை தாங்க முடியாமல், எவ்வளவு மக்கள்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கதறிக்கொண்டு இருந்தார்கள் என்பது சமீபத்தில் பார்த்திருப்போம். இதைப் பற்றி எல்லாம் அரசாங்கம் கவலைப்படவில்லை. 

யாரோ இது போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பருத்திச் சேரி ராஜா போன்றவர்கள், இந்த பண மரங்களை நட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், இந்த நாட்ட மரத்தை கூட பாதுகாக்க இந்த அரசாங்கம் தெரியாமல் அதை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், இவர்கள் மனித குலத்தை அழிக்க ஆட்சி செய்கிறார்கள் என்று தான் அர்த்தம் .இயற்கையை அழிப்பவன் யாராக இருந்தாலும் அவன் மனித குலத்தை அளிப்பவன். அவனுக்கு சட்டப்படி நீதிமன்றம் தண்டனை வழங்கி, அபராதம் விதிக்க வேண்டும் என்கிறார் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்தி சேரி ராஜா.

 மேலும், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பட்டமங்கலம் பகுதியில், தமிழக அரசின் ஆதரவுடன் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா? பனை மரங்கள் இதற்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசு செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அதாவது அறிக்கைகள், பேட்டிகள், திட்டங்கள், எல்லாம் எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும், ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும் தான் இருக்கும் என்கிறார். அதாவது பிரமாதமாக பேசுவார்கள் .அதை கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் வெளியிடுவார்கள்.அதைப் பார்த்து தமிழாக மக்கள் ஆறுதல் அடைந்து கொள்வதா?

 மேலும் ,எங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை என்பார்கள். நாங்கள் தான் சகலகலா வல்லவர்கள் என்பார்கள். அனைத்தும் தெரிந்தவர்கள் என்பார்கள். அது எதிலே? என்றால் ஊழலிலே, ரவுடிசத்திலே இதுதான் திமுக & திமுக ஆட்சியா? இங்கே 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது. இது பொதுப்பணித் துறைக்கு தெரியாமல், அழித்திருக்க முடியாது .

மேலும், கால்வாய் தூர்வார வேண்டும் என்றால்! அந்த கால்வாயின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள மரங்கள் ஏன் வெட்டி எடுக்க வேண்டும்? விவசாயிகள் அந்த மரத்தை பாதுகாக்கிறார்கள். அவர்களுக்கு வெட்டத் தெரியாதா? அந்த ஊர் கிராம மக்களுக்கு? எதற்காக மரங்களை அவர்கள் பாதுகாக்கிறார்கள்? இதையெல்லாம் அநாவசியமாக இந்த ஆட்சியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தேவை  கோடிகள் . மனித வாழ்க்கையின் உயிரைப் பாதுகாக்கும் மரங்கள் வெட்டப்பட்டது பற்றி எவ்வித அனுமதியும் இன்றி வெட்டி இருக்கிறார்கள்.

 இதற்கு இயற்கையின் சமூக ஆர்வலர்கள், பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் அனைவரும் இதற்கு கண்டனத்தை பதிவு செய்கிறோம் . இந்த மரங்களை வெட்டிய எந்தத் துறை அதிகாரிகளாக இருந்தாலும் ,அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என அனைவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 இது சம்பந்தமாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இப்பிரச்சினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்தி சேரி ராஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *