மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பில் எமது தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்🙏.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எமது பத்திரிக்கைக்கும், இணையதளத்தின் செய்திகளுக்கும் , கருத்துக்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் உங்கள் நல் ஆதரவுக்கு ! எமது மனமார்ந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

மேலும், இத் திருநாளில்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ,அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், சமூகம் சார்ந்த உறவுகள், நண்பர்கள் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் ,பொதுமக்கள் என அனைவருக்கும் எமது இனிய தீபாவளி! திருநாள் வாழ்த்துக்கள் 🙏.

இந் திருநாளில் உள்ளத்தில் அனைத்து ஆத்மாக்களின் இருள் நீங்கி, ஒளியை பெறக்கூடிய நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மனித ஆத்மா இருளில் இருக்கும் போது, அது சந்தோஷத்தை உணர முடியாது. வெளிச்சம் என்ற ஒரு ஒளியை பெரும் போது, அது ஆத்ம சந்தோஷத்தை அடைகிறது. இந்த நாளை தீபாவளி திருநாளாக, நரகாசுரன் பண்டிகையாக, இந்துக்கள் கொண்டாடுகிறோம்.

மேலும்,நமக்குள் இருக்கின்ற அசுரனை வெல்வது தான் இதன் நோக்கம்!
ஆனால், புராணத்தில் நரகாசுரன் என்ற அசுரனை மகாவிஷ்ணு அழித்ததாக சொல்லப்பட்டு வருகிறது. இதை அசுரவதமாக இந்தப் பண்டிகை கொண்டாடுகிறோம் எல்லாம் ஒன்றுதான்.மேலும்,

இந்த நாள் குழந்தைகளின் மகிழ்ச்சியான நாள். பெற்றோர்கள் குழந்தைகளுக்காக பட்டாசு ,புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், கொடுத்து அவர்களை மகிழ்விக்கும் ஒரு திரு நாளாகவே தொடர்ந்து இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இத் திருநாளில் ! அனைவரும் குடும்பத்தில் ஒற்றுமையுடன், சமூக கடமையுடன் ,இல்லத்தில் தீபத்தை ஏற்றி, இறைவனை வழிபட வேண்டும். அந்த இறைவன் நமக்கெல்லாம் ஒளியின் தீபத்தில் அருள்புரிந்து ,அவருடைய அருளாசி வழங்கி, சுபிட்ஷத்தையும் ,சந்தோஷத்தையும் அளிக்க மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், இணையதளத்தின் பத்திரிக்கை சார்பிலும், மனமார்ந்த தீப ஒளி !திருநாள் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன், சமூகப் பணியில் !

ஆசிரியர்

கே.என். இராஜேந்திரன் .

மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *