மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கு பிரதமர் அலுவலகம் என்னுடைய whatsapp-பிற்கு அனுப்பிய செய்தி! எங்களைப் போன்ற சமூக நலன், பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை அவருடைய தேச நலனை வெளிப்படுத்துகிறதா ?

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிரதமர் மோடி ஜியின்  தேசப்பற்றும் , 140 கோடி மக்களின் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தலைவரும், ஆளுமை மிக்க இந்திய நாட்டின் தலைவரும், நாட்டுக்கு இந்த பத்தாண்டுகளில் பிஜேபி செய்த நல திட்டங்கள் பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை, பிரதமர் மோடி அலுவலகம் கண்காணித்துள்ளது. இது ஒரு வேலை உளவுத்துறை ரிப்போர்ட்டாக கூட இருக்கலாம்.

 ஆனால், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கு பிரதமர் மோடி இச்செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல அங்கீகரித்திருப்பது, அவருக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக, சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பாக, மனமார்ந்த இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களைப் போன்ற எத்தனையோ பத்திரிகைகள் இருந்தும்,மக்கள் அதிகாரத்திற்கென்று ஒரு சிறிய இடத்தை பிரதமர் மோடி கொடுத்திருப்பது, இந்த நாட்டு மக்களின் மீதும், இந்த தேசத்தின் மீதும், எங்களைப் போன்ற சாமானிய சிறு பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதும், அவர் வைத்துள்ள நம்பிக்கைக்கு மனதாரப் பாராட்டி ,அன்புமிக்க பாசத்துடன் அவர் எப்படி குடும்ப உறுப்பினராக எழுதி இருக்கிறாரோ, அதேபோல் எங்களின் குடும்ப உறுப்பினராகவே மோடியை பார்க்கிறேன்.

 நாட்டின் இறையாண்மைக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு ,கலாச்சார பண்பாட்டிற்கு, வருங்கால இளைய தலைமுறைகளுக்கு, இந்த தேசத்தின் பாதுகாப்பிற்கு, இந்த நாட்டின் வளர்ச்சி மிக்க நல்ல செயல் திட்டங்களுக்கு ,மீண்டும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர வேண்டும் .அவருடைய நல்லாட்சி எந்த அரசியல் கட்சிகளாலும் தர முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இதற்கு ஒரு முக்கிய காரணம் ,இந்த மக்களுக்கு சினிமாவும், அரசியலும் வெவ்வேறு என்பது தெரியாது.

 நிழல் என்பது நிஜமாகாது. நிஜம் என்பது நிழலாகாது . இதில் பல உண்மைகள் மறைந்து கிடக்கிறது. உழைப்பு வேறு ,பேசுவது வேறு, நடிப்பது வேறு, இவை அனைத்திற்கும் அரசியல் தேவைப்படுகிறது .அந்த அரசியல் எப்படிப்பட்ட அரசிய லாக இருக்க வேண்டும் ?என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல தமிழ்நாட்டில் ஊடகங்கள் இல்லை. இந்த ஊடகங்கள் அரசியல் கட்சியை சார்ந்தது. இந்த ஊடகங்கள் வியாபார நோக்கம் சார்ந்தது. இந்த ஊடகங்கள் சுயநல நோக்கம் சார்ந்தது .இந்த ஊடகங்கள் பல இப்படித்தான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. அதே போல் தான் இந்த பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,சமூக நலன் சார்ந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் ஏதோ எங்களைப் போன்று ஒன்று இரண்டு இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன். மக்கள் உண்மைக்கும் ,செய்திக்கும், தகவலுக்கும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் .அதிலும் சுயநலத்துடன் வாழும் மக்கள் தமிழ்நாட்டில் அதிகம் .

அதனால் தான், இவர்கள் சுயநலத்துடன் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளை தேர்வு செய்கிறார்கள்.சுயநலவாதிகளை தேர்வு செய்து இருக்கிறார்கள். பணத்திற்காக யாரை வேண்டுமானாலும், தேர்வு செய்கிறார்கள் .அதன் பலனை இன்று வரை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, தமிழ்நாட்டில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள், வேதனையில் புலம்பித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறேன். அவர்கள் செய்த தவறு, ஊழல்வாதிகளை மீண்டும், மீண்டும் தேர்வு செய்து இருக்கிறார்கள்.

 அரசியல் புரியாமல், அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை எப்படி புரிய வைப்பது ?என்பது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு தெரியவில்லை. இதை காலம்தான் அவர்களுக்கு இந்த உண்மையை உணர்த்த வேண்டும். இதை காலத்தின் கையில் தான் இந்த பொறுப்பை நான் கொடுக்கிறேன் .நான் ஒரு கருவி தானே ஒழிய, அனைத்தையும் இயக்குகின்ற பரம்பொருள் ஒருவரால் மட்டும் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் .

அந்த மாற்றம் இந்த நாட்டு மக்களுக்கும், இந்த தேசத்திற்கும், ஒரு நல்ல தலைவராக, ஒரு நல்ல பிரதமராக ,பிரதமர் மோடி மீண்டும் அதே பதவியில் இந்த உலகை இயக்கம் பரம்பொருள் வாய்ப்பளித்து, நாட்டின் ஏழை ,எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் .

                                                                                                                      ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *