மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால் வாழ்க்கையின் போராட்டங்கள்…. என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள்……!போராட்டங்களும், ஏமாற்றமும்!

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மே 22, 2025 • Makkal Adhikaram

நாட்டில் மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால்! வாழ்க்கையின் போராட்டங்கள்…. என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள் மூலம் பல லட்சங்களை இழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் வேதனை வெளியில் சொன்னால் கௌரவம் குறைந்துவிடும் என்று போலி வாழ்க்கையில் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இன்றைய காலகட்டத்தில், எது எல்லாம் எளிதாகவும், விலை குறைவாகவும் வருகிறது? என்று மக்கள் ரயில்களில் விற்கும் தின்பண்டங்கள் முதல் தெருவோரக் கடைகளில் விற்கும் தின்பண்டங்கள் வரை நோயை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நோயின்றி வாழ்வது மக்களுக்கு பெரும் சவால்கள். அதைவிட பெரிய சவால்கள் கார்ப்பரேட் ஹாஸ்பிடல் மருத்துவமனையில், சிகிச்சைக்கு சென்றால் பல லட்சங்கள்……..!இழக்காமல் வெளிவர முடியாது.

 மனித வாழ்க்கை ஒரு பக்கம் அரசியல் போராட்டத்தின் உச்சத்தில், பெண்கள் திமுக ஆட்சியில் மிரட்டப்பட்டு, பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி, காவல்துறையில் புகார் அளித்தால் கூட ,அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதுவும் கல்லூரியில் படிக்கக்கூடிய பெண்களுக்கே இந்த நிலைமை. அதாவது திமுக இந்த கட்சிக்காரனுக்காக ஒரு ஆட்சி நடத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும். கட்சிக்காரன் ஓட்டு போட்டு, ஜெயிக்க வேண்டிய தானே, ஏன் மக்களிடம் பணம் கொடுத்து பிச்சை எடுக்கிறீர்கள்? 

தவிர, நாட்டில் எந்த தொழிலும், தமிழ்நாட்டில் தற்போது முன்னேற்றம் இல்லை என்று தான் பல தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கிறது. அரசியல் பின்புலத்தில் இருக்கக்கூடிய முதலாளிகள் தவிர, மற்றவர்கள் தொழில் முன்னேற்றம் இல்லை என்று தான் தெரிவிக்கிறார்கள். இது நடுத்தர சுயதொழில் செய்பவர்களின் நிலைமை.

மற்றொரு பக்கம் நோய் இன்றி வாழ மக்களின் போராட்டம், அதைவிட மோசமானது. இன்னொரு பக்கம் போலி சாமியார்களால், பயமுறுத்தி பல லட்சங்களை, பல ஆயிரம்களை பிடுங்குவது, மக்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்? ஒரு பக்கம் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளால், நடுத்தர மக்கள் ஏமாறுகிறார்கள். 

இன்னொரு பக்கம், இதுபோன்ற கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளால் ஏமாறுகிறார்கள். மற்றொரு பக்கம் போலி வழக்கறிஞர்களால் ஏமாறுகிறார்கள். இன்று பெரும்பான்மை மக்கள் வாழ்க்கையோடு போராடுவது, போராட்டத்தின் முக்கிய காரண கர்த்தாவாக இருப்பவர்கள் இவர்கள்தான். 

இதற்கு அடுத்த நிலையில், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், நில மோசடி கூட்டம் இந்த ஏமாற்றத்திற்கு மக்களின் பேராசை பெரு நஷ்டம் என்று சொல்வார்கள். அது மிக முக்கியம். இங்கே அரசியல்வாதி அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும், பேசியே கவிழ்ப்பான். இவனுங்கள எல்லாம் எங்கடா ட்ரெயினிங் எடுக்குறாங்கன்னு பார்த்தா, அந்தந்த கட்சித் தலைவனுங்க பேசுற பேச்சே அப்படி இருக்கிறது. அதை அப்படியே இமிடேட் பண்ணி உள்வாங்கி ஏழை, எளிய நடுத்தர மக்களிடம், இவர்களுடைய வித்தையை காட்டுகிறார்கள். அப்படியே தூக்கி வைக்கிற மாதிரி பேசுவார்கள். ஒன்னும் இருக்காது. இத்த தான் பாத்துட்டு போகணும். 

இதுக்கு அடுத்தது, இந்த போலி சாமியார்கள் கூட்டம், உங்களுக்கு கிரகம் சரியில்லை. உங்கள் வீட்டிற்கு செய்வினை கோளாறு ,இதெல்லாம் சரி செய்யணும்னா,நீங்க! ஆளுக்கு தகுந்த மாதிரி, அளவு எடுப்பார்கள். இவர்கள் ஐயாயிரம், பத்தாயிரம், லட்சம் எந்த அளவுக்கு தாங்குவார்கள்? என்று அந்த போலிகள் நிர்ணயிப்பார்கள். அதற்கு தகுந்தவாறு பூஜை, தாயத்து ,ஓமம் எல்லாம் செய்யணும் .அப்பதான் நீங்க இதிலிருந்து வெளியே வர முடியும். இப்படி எல்லாம் கதையை விடுவார்கள். அவன் ஏற்கனவே வேதனையில் இருப்பான் .எப்படியாவது நமக்கு இந்த பிரச்சனைகள் தீர்ந்தால் போதும், என்று கடன் வாங்கியாவது செய்வார்கள். 

இதற்கு அடுத்தது நோய்! இந்த நோயை பாதிபேர் விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்கள். ஒரு பக்கம் டாஸ்மாக் மது கடைகள், இன்னொரு பக்கம் ஹோட்டல் உணவகங்கள்,இன்றைக்கு நிறைய பாஸ்ட் ஃபுட் உணவகங்கள், வந்துவிட்டது .தெருவோரக்கடைகள் வந்துவிட்டது. தெருவோரக்கடைகளில் போண்டா, பஜ்ஜி வாங்கி சாப்பிடும் கூட்டங்கள், அந்த எண்ணையே கலப்படம் ஆனால் ,அந்த எண்ணெய் குருடாயில் அளவுக்கு போனாலும், அவன் அதை விட மாட்டான். அதிலே போட்டு சுட்டுக் கொண்டே இருப்பான். இவனும் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருப்பான். 

இது ஒரு பக்கம் என்றால், ஹோட்டல்களில் அஜினமோட்டோ, சோடா மாவு, சுண்ணாம்பு தண்ணீர், இதையெல்லாம் உணவுகளில் நஞ்சு கலப்பது போல, கலப்படம் செய்து பணம் மட்டும்தான் என்ற குறிக்கோளாக ஹோட்டல் உணவுகள் மாறி இருக்கிறது.தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களிடம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்களா?

இது தவிர, பாக்கெட்டுகளில் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள், காலக்கெடுவை தாண்டினாலும், அதையும் விற்பனை செய்து கொண்டு, மக்களுக்கு நோயை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நோயை வாங்கி சாப்பிட்டவர்கள், எங்கே போவார்கள்? மருத்துவமனைக்கு தான் போக வேண்டும். 

மருத்துவமனையா? அரசு மருத்துவமனை என்று பார்த்தால்! அங்கே மருந்து இருக்காது, டாக்டர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வர மாட்டார்கள் .சரியான சிகிச்சை இருக்காது. இதுதான் இன்றைய அரசு மருத்துவமனையின் நிலைமை. அதனால், நடுத்தர மக்கள் எங்கே செல்கிறார்கள் என்றால் கார்ப்பரேட் மருத்துவமனையை நோக்கி செல்கிறார்கள். 

கார்ப்பரேட் மருத்துவமனை அதைவிட கொடுமையான ஒரு மருத்துவமனைகள் அங்கே பணம் மட்டும்தான் அந்த மருத்துவமனையில் குறிக்கோள். நோயாளியின் உயிர் போனாலும், அவர்கள் பல லட்சங்களை இழந்து விட்டு தான் அந்த உடலை கொடுப்பார்கள். எப்படி எல்லாம் இந்த கார்ப்பரேட் மருத்துவமனைகள் மக்களிடம் டார்கெட் வைத்து பணத்தை பிடுங்குகிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு முக்கிய ஆதாரம். இவர் ஒரு சமூக ஆர்வலராக இருந்தால்தான் இதை மக்களிடம் தெரிவித்திருக்கிறார். 

இதை மாற்ற வேண்டுமென்றால், மந்திரிகள், உயர் அதிகாரிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இவர்களுடைய உயிர் உயர்ந்தது ஏழை நடுத்தர மக்களின் உயிர் தாழ்ந்தது என்று இன்று வரை அரசு மருத்துவமனையின் சிகிச்சை தனியார் மருத்துவமனையை விட அதிகமாக தரம் உயர்த்த வேண்டும்.

மேலும், நாட்டில் எவ்வளவு கேவலமான மருத்துவமனைகளாக இன்றைய கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருக்கிறது? அதைப்பற்றி துளி கூட இந்த மருத்துவ கவுன்சில் மூலம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது எத்தனை கோடி நாட்டில் ஊழல் செய்கிறீர்கள்? அதையெல்லாம் இந்த அரசு மருத்துவமனைகளில் செலவு செய்தால் முடியாதா? தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த முடியும். 

இன்று மக்கள் எவ்வளவு சுயநலவாதிகளாக இருக்கிறார்களோ ,அதைவிட ஆயிரம் மடங்கு சுயநலவாதிகளாக இன்றைய ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் இருக்கிறார்கள். இதையெல்லாம் பாராட்ட பத்திரிகை, தொலைக்காட்சிகள் இருக்கிறது என்றால்! அது எவ்வளவு சுயநலம் கொண்டது? என்பதை நீங்கள் சிந்தியுங்கள். 

இதற்கு அடுத்தது, போலி வழக்கறிஞர்கள் ,இவர்களுக்கு எந்த ஒரு சட்டமும் தெரியாது, ஆனால், வழக்கறிஞர்கள் என்று கோட்டு போட்டு, சுற்றிக் கொண்டிருப்பார்கள். நாட்டில் எப்படி எல்லாம் போலிகள் உருவெடுத்துள்ளது? பாருங்கள், இது !கலியுகத்தின் சிறப்பு அம்சமா? ஊருக்குள்ளே இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டால், காவல் நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து பெரும்பாலும் இவர்கள் மூலம் தான் நடக்கும். அதனால், மக்களின் வாழ்க்கை போராட்டம் எப்படி எல்லாம் இருக்கிறது? ஏமாந்தால், அவர்களுடைய வாழ்க்கையே சின்னாபின்னமாக மாறிவிடும். 

இதற்கடுத்தது ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், நிலத்தின் உரிமையாளரோ, பிளாட் உரிமையாளரோ,நேரடியாக காட்ட மாட்டான். இவனே அந்த நிலத்தின் உரிமையாளராக பேசிக் கொண்டிருப்பான். இது யார்? என்று பார்த்தால், பெரும்பாலும் அரசியல் கட்சி புரோக்கர்களாக தான் இருப்பார்கள். இந்த அரசியல் கட்சி புரோக்கர்கள், கார்ப்பரேட்  கம்பெனிகளையும் விட்டு வைப்பதில்லை. என் ஏரியாவுல நான்தான் ஸ்கிராப் எடுப்பேன். இதில் ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என்று போட்டி வேற, 

இது தவிர, மீட்டிங் போடணும், மாநாடு போடணும், என்று பல லட்சங்களில் இந்த கம்பெனி காரர்களிடம் வசூல் செய்வார்கள். இதையெல்லாம் இந்த கம்பெனி நடத்தக்கூடிய முதலாளிகள் பயந்து கொண்டு கொடுப்பார்கள். ஆனால், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரம் கேட்டால் கூட தயங்குகிறார்கள். எவ்வளவு சுயநலவாதிகள்? பாருங்கள்.

 மக்கள் ஏமாந்தால்! இவர்களிடம் வாழ்க்கையே தொலைத்து விடுவார்கள். மக்களின் அலட்சியம், ஆணவம், கர்வம், இவையெல்லாம் அவர்களிடமே சுற்றி, சுற்றி அடிக்கிறது. அரசியல் தேர்வு செய்யும் போது சிந்திப்பதில்லை. எதை வேண்டுமானாலும் வாங்கி சாப்பிட்டு விட்டு, நோய் வந்த பின் கத்துவதில் பிரயோஜனம் இல்லை.

அதற்காக கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சென்று பல லட்சங்களை இழப்பது வாழ்க்கையை தொலைப்பதற்கு சமம். இவையெல்லாம் போலி கௌரவத்தின் உச்சத்தில்! மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை எது ?பொய் எது ?என்பதை சிந்திக்க வேண்டிய காலத்தில், பொதுமக்களும், இளைய தலைமுறைகளும் இருக்கிறார்கள். சிந்திக்கவில்லை என்றால்! பல இடங்களில் ஏமாற்றப்படுவீர்கள்.

இப்போதாவது இந்த உண்மையை புரிந்து கொள்வீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *