சாலை விபத்தில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் விபத்து இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு 20 பேர் என்ன புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல,

மேலும் , சாலைகளில் விபத்து ஏற்பட்ட போது, அதைப் பார்க்க நெஞ்சம் பதைக்கிறது. ஒவ்வொரு உயிரும் சாலை விபத்துகளில், மரண அவஸ்தைகளை பார்க்கும் போது, பார்ப்பவர்கள் என்ன செய்வது? தெரியாமல், வேதனைப் படுகிறார்கள். தவிர,

எப்படி காப்பாற்றுவது? அதுதான் அந்த நேரத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி! ஆபத்துக் காலத்தில் ஒருவருக்கு செய்யும் உதவி வேலை மதிப்பற்றது. அதனால், இதை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை. மேலும்,

ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசும் இது எதனால்? இவ்வாறு நடக்கிறது? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சாலை விபத்துக்கு முக்கிய காரணம் போக்குவரத்து விதிமுறைகள் மட்டுமல்ல, வேகமும் மிக முக்கியமானது.

குறிப்பாக,இன்றைய ரேஸ் பைக்குகள் அத்தனையும் தடை செய்யப்பட வேண்டும். இளைஞர்கள் இந்த ரேஸ் பைக்குகளை ஓட்டும்போது, வேகமாக எதிரில் வருபவர்களை பற்றி துளி கூட கவலைப்படாமல் ஓட்டுவது,

அடுத்தது தேவையற்ற இடங்களில் எல்லாம் ஸ்பீட் பிரேக் போட்டு வைத்திருக்கிறார்கள். அதுவும் தெரியாமல் வந்துவிட்டால், நிச்சயம் அங்கே விபத்து ஏற்படுகிறது. இதையெல்லாம் உடனடியாக அகற்ற வேண்டும்.

இது தவிர, போதை பொருளை பயன்படுத்திக் கொண்டு ,டூவீலரில் பயணிப்பவர்கள், மது அருந்திவிட்டு கார் ஓட்டுபவர்கள் ,டூவீலர் ஓட்டுபவர்கள் ,இதனாலும் விவகாரத்துக்கள் ஏற்படுகிறது.

எதிரே வருபவர்கள் சரியாக வந்தாலும் ,இவர்களால் சரியாக வண்டியை ஓட்ட முடிவதில்லை. இது தவிர, டிரைவிங் லைசன்ஸ் கொடுப்பதில், அங்கே வண்டி ஓட்டும் போது ,அவர்களுக்கு கடுமையான சோதனை செய்து பிறகு தான் ,லைசன்ஸ் கொடுக்கப்பட வேண்டும்.

தவறான முறையில் சோதனைகளை செய்யாமல் கொடுக்கப்படும் லைசன்ஸ் அவர்கள் வண்டி ஓட்டும் போது,எப்படி வேண்டுமானாலும் ,எந்த பக்கம் வேண்டுமானாலும், பூந்து வருகிறார்கள். எந்தப் பக்கம் வர வேண்டும்? எந்தப் பக்கம் போக கூடாது? என்ற எந்த விதிமுறையும் இல்லாமல், ஓட்டுகிறார்கள். மேலும்,

சவுண்டு கொடுத்துக்கொண்டு ஓட்டுகின்ற ரேஸ் பைக் இளைஞர்களுக்கு உடனடியாக பைன் போட வேண்டும். இது தவிர, தேவையற்ற இடங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவது, இதனால் டூவீலர்களில் செல்பவர்களுக்கு, எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.

மேலும்,தேவையில்லாமல், ஒரு வாகனத்தை முந்துவது, அதன் பாதையில் அது செல்லாமல், குறுக்கீடு செய்வது, இதுபோன்ற முறையற்ற வாகன ஓட்டிகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. அப்படி ஓட்டுபவர்கள் மீது சாலை பக்குவரத்து அதிகாரிகள், ஆய்வு செய்து அதற்கு உடனடியாக ஸ்பாட் பைன் போட வேண்டும்.

மேலும்,சாலை போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடித்து, வாகன ஓட்டிகள் ஓட்ட வேண்டியது அவசியம் .எந்தெந்த இடத்தில் எவ்வளவு கிலோமீட்டர் வேகம் செல்ல வேண்டும்? அதை மீறி வேகம் ஓட்டினால் ஆங்காங்கே ரகசிய கேமராக்கள் வைத்து , விதிமுறைகளை மீறும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு ஃபைன் போட வேண்டும்.

அதனால், மத்திய, மாநில அரசு! ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய போக்குவரத்து விதிமுறைகளை ஆய்வு செய்து, எந்தெந்த பகுதியில், எந்தெந்த வேகத் தடை தேவையில்லாமல் இருக்கிறது ?என்பதை உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு உடனடியாக பைன் போட வேண்டும். இந்த விதிமுறைகளை கொண்டு வந்தாலே கூடுமானவரையில் சாலை விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *