மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதி வாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பா? அல்லது இந்தியாவில் எந்த இடத்தில் இவர்களுடைய பிறப்பு என்பதை தீர்மானிப்பதற்கா? எதற்கு?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மே 06, 2025 • Makkal Adhikaram

 மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசர தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம்  இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு? என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அடுத்தது ஒவ்வொரு ஜாதியிலும், எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்ற புள்ளி விவரத்தில், அந்த சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்புகலிலும், அவர்களுக்கு கொடுக்க முடியும். 

அடுத்தது ஒருவருடைய பிறப்பு இந்தியாவில் எந்த மாநிலத்தில்? எந்த மாவட்டத்தில்? எந்த வட்டத்தில்? எந்த ஊரில்? என்பதை துல்லியமாக கணக்கெடுக்க தான் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இது நாட்டில் அவசியம் தேவையான ஒன்று. ஏனென்றால் பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்கு வந்துள்ள லட்சக்கணக்கானோர் இங்கு ஆதார், குடும்ப அட்டை ,வாக்காளர் அட்டை, போன்ற போலி  ஆவணங்கள் வைத்துக்கொண்டு, இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அதுமட்டுமல்ல, இவர்கள் பாகிஸ்தான் பெண்களை கல்யாணம் செய்து கொண்டு அவர்கள் இங்கே வருவதும், இங்குள்ள முஸ்லிம் ஆண்கள் பாகிஸ்தான் பெண்களை கல்யாணம்  செய்து கொண்டு, அங்கிருந்து இங்கு வருவதும் ,இது போன்ற உள்ளடி வேலைகள் ரகசியமாக நடந்து கொண்டிருந்தது.மேலும், 

அதேபோல் பங்களாதேஷ் நாட்டிலிருந்து வந்தவர்கள், இதே போல் ஆதார்,  குடும்ப அட்டை ,வாக்காளர் அட்டை, வைத்துக்கொண்டு, இங்கேயே போலி ஆவணங்கள் தயாரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இது போலியா? அசலா? என்பதை விட, இவர்களுக்கு துணை நிற்கக்கூடிய அரசியல் கட்சிகள், என் ஜி ஓ அமைப்புகள், முஸ்லிம் மத அமைப்புகள், இவர்கள் எல்லாம் பக்க பலமாக இருப்பதால், இந்த வேலைகளுக்கு அரசு அதிகாரிகள் இதற்கு துணை போயிருக்கிறார்கள். 

இது இந்திய நாட்டை பலவீனப்படுத்தும் மறைமுக வேலை. இந்துக்கள்  இந்தியாவை விட்டு,இந்த மக்கள் வேறு எந்த நாட்டிலும் போய் வாழ முடியாது. ஆனால், எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும், இந்தியாவில் வந்து குடியேறி, சுதந்திரமாக வாழலாம். மேலும், இந்துக்களுக்கு என்று ஒரு நாடு என்றால்! அது இந்தியா தான். வேறு எந்த நாட்டிலும் இந்துக்கள் அதிகமாக வாழக்கூடிய நாடு இல்லை. ஆனால்,

முஸ்லிம்களுக்கு பல நாடுகள் இருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு பல நாடுகள் இருக்கிறது .ஆனால், இந்துக்களுக்கு என்று இந்தியாவை விட்டால், வேறு நாடு கிடையாது. அதனால், இங்கே ஜாதி வேற்றுமைகளை ஒரு பக்கம் தள்ளிவிட்டு, இந்துக்கள் என்ற ஒரு நிலைப்பாட்டை பின்பற்றி வாழ்ந்தால் தான், நாட்டில் இந்த பிரிவினை சக்திகள் இடம் இருந்து ,இந்தியாவை காப்பாற்ற முடியும். என்பதை உணர்ந்துதான், பிரதமர் நரேந்திர மோடி இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதை இந்துக்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *