மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

ஆன்மீகம் இந்தியா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram

(வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9344794091.)

கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் இருந்து நம்முடைய பஞ்சபூதங்களை சரிவர அமைச்சு, அதனுடைய பரிணாமங்களை, நம்முடைய வசதிக்கேற்ப, வாஸ்து சாஸ்திர அமைப்புல அவங்க பயன்படுத்தி இருக்காங்க.மேலும்,

 பல முனிவர்களும், சித்தர்களும், இது சம்பந்தமான குறிப்புகள் மூலம் நம்முடைய பழைய புராண விஷயங்களில் பார்க்க முடியும். இப்ப பார்த்தீங்கன்னா, பூமாதேவி, கங்கா தேவி ,அக்னி தேவன், வாயு பகவான், ஆகாய பகவான், பஞ்சபூத தெய்வங்களை, பரிணாம வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு உள்ளே எப்படி நாம் எந்தெந்த இடத்தில் அமைக்கிறது? அப்படிங்கிற அடிப்படை விஷயம் தான் வாஸ்து சாஸ்திரம்.

இதுல பூமி எங்க உயர்வா இருக்கணும்? எங்க தாழ்வாய் இருக்கணும்? என்கிற அப்படிங்கிற விஷயம். மேலும், நீர் நிலைகள் எந்தெந்த, இடத்தில் ஆழமான நீர் நிலைகள் உருவாக்கணும்? எந்தெந்த இடத்தில் உயர்வான நீர்நிலைகள் உருவாக்கணும்? எந்தெந்த இடத்தில் நீர்மட்டங்கள் வீட்டிலிருந்து வெளியே போகணும்? குறிப்பிட்ட இடத்திலிருந்து வெளியே போகணும். அதேபோல, அக்னி எந்த இடத்தில் அவங்க எரியனும்? எந்த இடத்தில் எறிய கூடாது? அப்படிங்கிறதும், காற்றோட்ட அமைப்புகள் எந்த இடத்தில நிலவு கதவுகளை வச்சு, அதன் அளவுகள், என்ன வீட்டுக்கு, தகுந்த மாதிரி ஜன்னல் அமைப்புகள் எப்படி, எந்தெந்த இடத்தில் வைக்கனும்? அந்த வாயு வெளிச்சம் இரண்டுமே பாத்துட்டீங்கள் அண்ணா ,

வீட்டுக்குள்ளே ஆக்கிரமித்து உள்ளே வரணும், போகணும், ஆகாய பகவான் பாத்துட்டீங்கன்னா, ஒரு காப்பவுண்டு க்குள்ளே கட்றோம், வீட்டையும் கற்றோம் ,இடையில எவ்வளவு ஸ்பேஸ் கொடுக்கலாம்? இந்த பிரபஞ்சத்திலே காஸ்மிக் எனர்ஜி எந்த இடத்தில் வந்து இறங்குது? இப்படி பல நுணுக்கங்களை வச்சு, இதையெல்லாம் பயன்படுத்திட்டு வரும் .

இன்னைக்கு அதிகபட்சமா எல்லோருமே வாஸ்து சாஸ்திரம் பற்றி தெரியறதுக்கு ஆசைப்படுறாங்க. அது பிரகாரம் வீடு, தொழிற்சாலை, கல்லூரி, பள்ளிகள் அனைத்து விஷயங்களிலும் வாஸ்துபடி பண்றதுக்கு மக்கள் முன் வந்துட்டு இருக்காங்க .அதைப்பற்றி மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும், அதிகப்படியான பேர் அதைப்பற்றி பேசுறதாலையும், அதைப்பற்றி அவர்னஸ் முழுக்க, முழுக்க டெவலப் ஆகிடுச்சு.

 இப்ப நம்ம பிரபஞ்சன் வாஸ்து நம்மை எப்படி பார்க்கிறோம்? இதன் ஆரம்பம் எப்படி என்று பார்த்தீங்கன்னா? கிட்டத்தட்ட 1988 அந்த வருடத்திலிருந்து சில குறிப்புகளையும் உணர்ந்து, பல புத்தகங்களை எல்லாம் படித்து, வைப்ரேஷன்ஸ் ஒரு இடத்துக்கு போனா ,அந்த இடத்துல வைப்ரேஷன்ஸ் இருக்குன்னு உணர்ந்து ,காலங்கள் கடக்க, கடக்க சில ஆண்டுகளுக்கு முன்னாடி ஐயா சுவாமியினுடைய திருப்பேராற்றல் ,அவருடைய ஆசீர்வாதத்தினாலே, ஒரு இடத்திற்கு போனோம்னா, அந்த இடத்துல இறைவழிபாடு பண்ணி, அந்த இடத்துல முழுவதும் நம்ம கால் ஆற நடந்து, நம்ம பஞ்சபூத தெய்வங்கள் எந்தெந்த இடத்தில், எப்படி உட்கார்ந்து இருக்குன்னு பார்த்துட்டு,நம்முடைய ஐயா சுவாமி என்னுடைய அருட்பேராற்றலான இன்ஸ்டிடியூஷன் நமக்கு கிடைத்து, அந்த இன்ஸ்டிடியூஷன் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் சொல்லிட்டு வாரோம் .

கிட்டத்தட்ட இதை 1998 இல் இருந்து ஆரம்பிச்சாலும் கூட, நாம பல பேருக்கு போய் சேவை பண்ணிட்டு இருந்தோம். அதுக்கப்புறம் நேரம் காலம் பற்றாக்குறையினால, கொஞ்சம் நாள் இதை நிறுத்தி வைத்து, அப்புறம் பலர் இதனால பலனடைந்து அவங்க கேட்டு கொண்டதற்கு இணங்க ,பிரபஞ்சன் வாஸ்து என்ற அமைப்பை ஏற்படுத்தி, இதன் மூலமாக பல பேருக்கு வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்து, பிரபஞ்சன் வாஸ்து அவர்களுடைய வாழ்க்கையில் பயன்படனும். கடுகளகாவது அவர்கள் வாழ்க்கையில் பயன்படனும். அவங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தில் பங்கு எடுக்கணும். அவங்க வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளை தகர்த்தெறியனும். அந்த வாழ்க்கையில் ஏற்படக்கூடிய வெற்றியில் பங்கெடுத்துக்கணும்.

 கடுகளவுவது பிரபஞ்சன் வாஸ்து அவங்களுக்கு கூட நிக்குது, இதை பல பேரு அவங்க அனுபவிச்சு ,அவங்க நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர்கள் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் வெளிய சொல்லி,வீட்டினுடைய ட்ராயிங், இடத்தினுடைய அமைப்பு எப்படி இருக்குன்னு ?போய் பாத்துட்டு, அந்த இடத்துல வீடு எப்படி கட்டலாம்? தொழிற்சாலை எப்படி கட்டலாம்? இடத்தினுடைய அமைப்புக்கு தகுந்தபடி வாஸ்துவினுடைய பலத்தை ஏற்படுத்தி ,அவங்க செய்யக்கூடிய தொழிலாக இருக்கட்டும், அவங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நீண்ட கால தடைகளாக இருக்கட்டும், உடல் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்கள், உறவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், இதையெல்லாம் திருப்தியா இருக்கிற மாதிரி, நம்ம ஐயா சுவாமினுடைய திரு அருளால் பிரபஞ்சன் வாஸ்து மூலமாக அவர்களுக்கு வழிகாட்டிட்டு வரோம் .

இது மூலமாக பார்த்துட்டீங்கன்னா, இன்னைக்கு கேரளா ,ஆந்திரா ,தமிழ்நாடு, புதுச்சேரி,கர்நாடகா, இதுல அதிகமா போயிட்டு இருந்தோம். இப்போ இந்தியா பூரா கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க .பிரபஞ்சன் வாஸ்து மூலம் பயனடைந்தவர்கள், அவங்க உறவினர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தெரிவித்து ஸ்ரீலங்கா, மஸ்கட், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளுக்கும், ஆன்லைன் மூலமாக பண்ணிக்கிட்டு, முடிந்த அளவு நாம் நேரில் போய் வாஸ்து சாஸ்திரம் நாம பார்க்கிறோம்.மேலும்,

 கூடுமானவரைக்கும் நம்ம ப்ரெசென்ட் அங்க இருக்கணும் .அந்த இடத்தினுடைய அமைப்பை பொருத்தும், அங்கு கிடைக்கக்கூடிய வைப்ரேஷன்ஸ் ,இன்ஸ்டிடியூஷன் நமக்கு கிடைச்சு, நாம் கொடுக்கக்கூடிய வாக்கு பலவகையில் நன்மை அடையறோம் என்று பல பேர் சொல்லிக்கிட்டு இருக்காங்க .அதனால வாஸ்து மேல நம்பிக்கை இருக்கிறவங்களும், நம்பிக்கை இல்லாதவங்களும், சமுதாயத்தில் இருக்காங்க.

ஆதி காலத்தில் இருந்து பழங்கால பண்டைக்காலம் தொட்டு, சாஸ்திரங்கள் எல்லாம் உருவாகி இருக்கு, இப்ப கோயிலுக்கு போனீங்கன்னா எல்லா சிவன் கோயிலிலேயும் பார்த்திங்கண்ணா, எந்த ஒரு கோயிலுக்கு போனாலும் கோயில் வடக்கு பார்த்தா, அதனுடைய தீர்த்த குண்டம் கிழக்கு பார்த்திருக்கும். கிழக்கு பார்த்த கருவறை அமைஞ்சிருக்குன்னா, அதுக்கு வடக்கு பார்த்த தீர்த்தகுண்டம் அமைந்திருக்கும் .

இப்ப நம்ம சிவன் கோயில்ல எடுத்துட்டோம்னா, சிவனுக்கு முன்னாடி நந்தி தேவரை வச்சிருப்பாங்க ,அதேபோல தெற்கு பக்கம் தட்சிணாமூர்த்தி மேற்கு பக்கம் லிங்கோத் பவர் வச்சிருப்பாங்க ,எல்லா கோயிலையும் கன்னிமூல கணபதி கொண்டு வந்து வச்சிருப்பாங்க ,அதே போல துவாராக பாலகர்களையும் கொண்டு வந்து வச்சிருப்பாங்க ,இதெல்லாம் எப்படி வந்ததுன்னா? நம்முடைய முன்னோர்கள், சித்தர்கள், ரிஷிகள் கொடுத்தது தான் இந்த பாரம்பரத்தில் வந்ததை நாளடைவில் கால தத்துவங்கள் மாற்றி அதை முறையா, நாம செய்யணும். 

பொதுவா எல்லா புத்தகத்திலும் இருக்கிற மாதிரி ,கூகுள்ல இருக்கிற மாதிரி, வடகிழக்குல இது வைக்கணும் ,தென்கிழக்குல இது இருக்கணும், தென்மேற்குல எப்படி இருக்கணும்? வடமேற்குல இப்படி இருக்கணும்? அப்படிங்கறது அடிப்படையாக இருந்தாலும் கூட, அந்த அடிப்படையிலிருந்து நுணுக்கமான விஷயங்களை சரிவர செய்யும் போது தான், வாஸ்து பலன் ஏற்படுமே தவிர ,மற்றபடி முழு பலனை அடைய முடியாது. அதே போல இந்த நேரத்தில் முக்கியமான பதிவு செய்ய விரும்புகிறேன் .அதே போல முறையான வாஸ்து பார்த்துட்டு ,முறையா செய்யணும் .எல்லாம் புத்தகம், கூகுள்ல இருக்கிற மாதிரி, நாம் எந்த விதமான பணிகளை செய்யாமல் இருந்தால், வாஸ்து பலன் அளிக்காது .

யோகாசனம் காலையில் செஞ்சுட்டு ,சாயங்காலம் தேவையில்லாத உணவுகளை சாப்பிடும்போது ,அது பலன் அளிக்காது. சாஸ்திரங்களும், வான சாஸ்திரங்களும், நம் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய கருவியாக எடுத்துக்கணும். மனித குலம் சந்தோசமாக வாழ்வதற்கு, நம் முன்னோர்கள் கொடுத்த பொக்கிஷம். இதை சரியாக பயன்படுத்தினால் தான், இருக்கக்கூடிய இடையூறுகள் குறையும் .மகிழ்ச்சி பெருகும். அதனால வாஸ்து பார்க்கிறதுன்னா, அதை முழுமையாக பாருங்க, ஒரு சில இடத்துல நாங்க வாஸ்து பார்த்து வீடு கட்டி இருக்கும் என்று சொல்லுவாங்க, உங்க அனுபவ அறிவில நல்ல வாஸ்து நிபுணரை கூப்பிட்டு, உங்க வீடு வாஸ்துபடி கட்டி இருக்கான்னு? நீங்க செக் பண்ணிக்கணும்.

 ஏன்னா காம்பவுண்டு வால் வீட்டு காவல் தெய்வமாக, வீட்டினுடைய தந்தையாக, நாம் கருதனும். அப்படிங்கிறதெல்லாம் தந்தை வீட்டுக்கு காவல், தாய் வீட்டுக்கு காவல், இப்படி பல இடங்களில் ஒரு வீடுன்னா அவங்க , அவங்களுக்கு ஒரு பொசிஷன் இருக்கு ,அதை சரிவர அமைக்கும் போது, நாம் செய்யக்கூடிய செயல்கள் காலதாமதம் இன்றி, நம் எண்ணோட்டங்களுக்கு தகுந்த மாதிரி, நம் உழைப்பு எந்த அளவுக்கு கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு நம் வாழ்க்கை முன்னுக்கு வரும் என்பதை பதிவு செய்கிறேன்.

 காம்பவுண்ட் வால் அமைக்கிறதும் சரி ,அதுக்கு கேட் வைக்கிறதும் சரி, அதனால வீட்டுக்கு நிலவு கதவு வைக்கிறதும் சரி, அனைத்துக்கும் முறை இருக்கு ,கழிவுநீர் தொட்டி ,மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி ,எந்த இடத்தில அமைக்கிறது? மின்சாரம் எந்த இடத்தில் அமைக்கிறது ?இப்படி பல விஷயங்கள் இருக்கு ,ஒருமுறை வீடு கட்றோம், அந்த வீட்டுக்குள்ளே போகும்போது, நல்ல வெளிச்சம், காற்றோட்டம், ஐஸ்வர்யம் ,ஆனந்தம், தெளிவான நிலையை உணர முடியும்.

சில வீட்டுக்கு எல்லாம் போனா, சீக்கிரம் வெளியே வந்துவிடலாம் என்று இருக்கும். சில வீட்டுக்கு எல்லாம் போனா, ரொம்ப நேரம் இருக்கலாம் என்று இருக்கும். இந்த உணர்வுகளை நாம் அறிய முடிகிறதோ, அப்ப வாஸ்து சிறந்த முறையில் இருக்கக்கூடிய இடங்களை பார்த்தால், அந்த இடம் ஐஸ்வர்யமாக இருக்கும். அதனால ,உழைப்பு,எண்ணங்கள் ,பொருளாதாரம், நல்ல உறவுகள், கல்வி, மேம்பாடு, அனைத்தும் சிறப்பா இருக்கணும்னா, இந்த வாஸ்து சாஸ்திரம் என்கிற அமைப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் .

பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் தொடர்பு 

கொள்ள வேண்டிய கைபேசி எண் : 9344794091 .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *