இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந் கருத்து – தமிழக அரசுக்கு நோட்டீஸ் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலவசங்களால், பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்க எவ்வாறு நிதியாதாரம் கிடைக்கிறது? இது தவிர, இலவச மிதிவண்டி, லேப்டாப், இலவச உணவு, மற்றும் பெண்கள் உரிமை தொகை, இது பல போன்ற இலவசங்களை கொடுக்க எங்கிருந்து நிதியாதாரம் தமிழக அரசுக்கு கிடைக்கிறது? இது உச்ச நீதிமன்றம் சரியான கேள்வியை கேட்டுள்ளது.

மேலும் ,தமிழ்நாட்டின் கடன் சுமை 10 லட்சம் கோடிக்கு மேல் உள்ளதால், இதனை எதற்காக? இந்த இலவசங்களை கொடுக்கிறார்கள்? தவிர , இதனால் ,வேலை வாய்ப்பு உருவாக்குவதிலும், சமூக கட்டமைப்பு வளர்ச்சி உருவாக்குவதிலும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கிறது. இது ஒரு மிகப் பெரிய உண்மை.

மேலும்,இந்த இலவசத்தால் ,ஊழலும் அதிகரிக்கிறது. தகுதியற்ற ஆட்சி நிர்வாகம் எங்கே இருக்கிறதோ !அங்கே இலவசங்கள் கொடுக்கப்படுகிறது. இதுதான் உண்மை. கடந்த சில தினங்களுக்கு முன், மக்கள் அதிகராம் பத்திரிக்கை இணையதளத்தின் செய்தியில், இந்த இலவசங்கள் கொடுக்கப்படுவது குறித்து ,ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்படி ஒரு கேள்வியை கேட்டு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று.

இலவசத்தால், ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அது பாதிக்கிறது . எனவே, இலவசம் கொடுப்பதாக இருந்தால், அந்தந்த அரசியல் கட்சி நிதியிலிருந்து, இலவசத்தை கொடுக்க நீதிமன்றம் பரிந்துரை செய்ய வேண்டும். மக்களுடைய வரிப்பணத்தில் இலவசத்தை கொடுக்கக் கூடாது.

அதேபோல் தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் ஆணையத்திற்கும், உச்சநீதிமன்றம் ஒரு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். அதாவது தேர்தல் ஆணையம், இனி அரசியல் கட்சிகள் இலவசத்தை அறிவித்தால் அதற்கான நிதி ஆதாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கக் கூடாது என்ற உறுதி மொழியை ஒவ்வொரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கை முக்கியமாக, அது இடம்பெற வேண்டாம். மேலும்,நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கக்கூடிய இலவசங்களை அறிவிக்க கூடாது.

அப்படி அறிவித்தால், அந்த ,அந்த அரசியல் கட்சிகளே அதற்கான நிதி ஆதாரத்தை அவர்களுடைய கட்சியின் சொந்த நிதியிலிருந்து கொடுக்க வேண்டும். பல மாநிலங்கள் கடன் சுமையில் மூழ்கிக் கிடக்கிறது.

இது தவிர, விலைவாசி உயர்வு, வரி உயர்வு, அதிகப்படியாக மக்கள் தலையில் சுமத்துவதற்கு, முக்கிய காரணமே ,இந்த இலவசங்கள். ஆனால் இனியாவது அரசியல் கட்சிகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வீணடிக்கும் இலவசங்களை, தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *