
ஏமாந்த சமுதாயத்தின் மேல் ஏறி நிற்கும் டாக்டர் ராமதாஸ் & கோ . 40 ஆண்டுகளுக்கு முன் ,வன்னியர் சங்கம் கிராமங்களில் உருவானது. அது வன்னியர்களிடையே மிகுந்த தாக்கத்தையும் ,எழுச்சியும் ஏற்படுத்தி இருந்தது.
அப்போதும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு தான், இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ ,அந்த நோக்கத்தை முதலில் ஆரம்பித்தவர்கள், பேசிக்கொண்டு இருந்தார்கள்.

பிறகு ,இடையில் வந்து சொருகிய டாக்டர் ராமதாஸ், பொறுப்பேற்ற பிறகு சங்கம் கட்சியாக மாறுகிறது. அப்போது இந்த வன்னிய சமுதாயத்திடம், ஜாதி வெறியை அதிகமாக பேசிப், பேசி ,ஒரு கூட்டத்தை ராமதாஸ் உருவாக்கி விட்டார்.
அதாவது இது ஆண்ட கட்சி ,ஆண்ட பரம்பரை, இதையெல்லாம் சொன்னவுடன் படிக்காத இளைஞர்கள் ஓ அப்படியா? என்று பூரித்து போனார்கள். முதன் முறையாக ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து (அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி) சுமார் 25 எம்எல்ஏக்கள் வெற்றி பெறுகிறார்கள். அப்போது ஜெயலலிதா ராமதாஸை கூப்பிட்டு உங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

ராமதாஸ் சமுதாயத்திற்கு எதுவும் வேண்டாம். எங்களுக்கு மந்திரி பதவியும் ,பணமும் கொடுங்கள். அது போதும் என்றார். அப்போதே இந்த சமுதாயத்தை அடகு வைக்க ஆரம்பித்து விட்டார் ராமதாஸ்.

இப்படி தொடர்ந்து அதிமுக விடவும், திமுக விடமும், சமுதாயத்தை அடகு வைத்து பணப் பெட்டியும் ,பதவியும் பெற ஆரம்பித்த விட்டு, வன்னியர்களின் முன்னேற்றத்திற்கு இவரே மிகப்பெரிய அழிக்கக்கூடிய ஒரு நயவஞ்சக ஆயுதமாக ஆக மாறிவிட்டார்.

மேலும்,இட ஒதுக்கீட்டை வெளியில் பேசுவார். ஆனால், அதை செயல்படுத்த மாட்டார். எங்கே அதை பேச வேண்டுமோ, அங்கே தனக்காக, தன் குடும்பத்திற்காக, பேசிக் கொள்வார் .சமுதாயத்திற்காக பேசக்கூடியவர் ,ராமதாஸ் அல்ல, என்பது எங்களைப் போன்றோருக்கு நன்றி தெரியும்.
கடவுள் ராமதாசுக்கு கொடுத்த அதிர்ஷ்ட்டத்தால், அந்த சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறார். தற்போது,அவர்கள் குடும்பமும் சேர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இந்த சமுதாயத்தை நன்றி கெட்ட ,சமுதாயமாக ராமதாஸ் மாற்றி இருக்கிறார். அதை சமுதாயம் அனுபவிக்கிறது . இவர்களை வைத்து சமுதாயத்தை அழிக்க வேண்டும் என்று ராமதாஸ் மற்றும் அவர்களது குடும்பம் நினைத்தால் நிச்சயம் அது நடக்காது. மேலும், இவர்கள்,

வன்னியர் சமுதாயத்திற்குள் , பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை வைத்து ,பிளவு ஏற்படுத்தி ,அவர்களுக்குள்ளே கட்டப்பஞ்சாயத்து ரவுடிசத்தை , சமூகத்திற்கு உள்ளே, வெறுப்பையும், பகையையும், வளர்த்த ஒரு நயவஞ்சகர் தான் ராமதாஸ். அதாவது இந்த கட்சி என்ற ஒரு அமைப்பை வைத்து,வன்னியர் சமுதாயத்திற்குள் ,ஜாதியை ஏமாற்றி வளர வேண்டும்.
ஜாதியை அழித்து வளர வேண்டும். எந்த நோக்கத்திற்காக இந்த ஜாதி கட்சி ஆரம்பிக்கப்பட்டது ?என்ற காரணம் கூட தெரியாத, இந்த கூட்டம் வன்னிய சமுதாயத்தால் சிறிது, சிறிது ,சிறிதாக தூக்கி எறியப்பட்டுள்ளது.

இன்று இவர்கள் இந்த சமுதாயத்தை அழிக்க வந்தவர்கள் என்று சி .ஆர். ராஜன் தெரிவிக்கிறார். அது மிகப்பெரிய உண்மை. ஏனென்றால் இவர்கள் பதவிக்கு இனி வர முடியாது. எப்படியோ பணம் கொடுத்து அன்புமணி மனைவி ஜெயித்துவிட்டார்.
இது தவிர,இன்னும் விழுப்புரம் ,கடலூர், சிவகங்கை, உட்பட ஒரு ஐந்து மாவட்டங்களில் இந்த பாட்டாளி மக்கள் கட்சி என்ற ஒரு பிம்பத்தில் செதுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில்,சி.ஆர். ராஜன் ஆரம்பத்தில் ராமதாசை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். அதேபோல், சி. என். ராமமூர்த்தி பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து இவர்களை தூக்கிப்பிடித்து உயர்த்தி அவர்களில் அவரும் ஒருவர். அதேபோல் பு.த. அருள்மொழி, பு.தா. இளங்கோவன், பலர் பேர் உண்மையாக சமுதாயத்திற்கு பாடுபட்டவர்கள் எல்லாம் ஒதுங்கி விட்டார்கள் .

காரணம் ,இவர்களிடம் சமுதாய நோக்கமில்லை. இந்த சமுதாயத்தை ராமதாஸ் நன்கு படித்துக் கொண்டார். இந்த முட்டாள்களுக்கு என்ன சொன்னால்? எப்படி சொன்னால்? இவர்கள் கைதட்டுவார்கள்? என்பது ராமதாஸுக்கு நன்றாக தெரியும். அந்தக் கூட்டத்தை வைத்து படித்தவன், தகுதியானவன் ,இந்த சமூகத்தில் நல்லவர்கள், நேர்மையானவர்கள், இவர்களை எல்லாம் அவர்கள் ஒடுக்கப் பார்க்கிறார்கள்.
குறிப்பாக சொன்ன போனால் ரவுடிசத்தை ஜாதிக்கு எதிராகவே மோத விட்ட ஒரு குள்ளநரி தந்திரசாலி ராமதாஸ் . அதனால் தான் அன்று இட ஒதுக்கீடுக்காக போராடிய ராமதாஸ் மற்றும் அவரது குடும்பம் இன்று 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,கடந்த காலத்தில் இந்த சமுதாயத்திற்கு 10.5 % கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து, அதைக் கொண்டு வந்தார். இன்று அதனால் தான், வட மாவட்டத்தில் அதிமுக அதிகப்படியான இடங்களை வென்றது. இன்னும் கூட வென்றுயிருக்கும் .

தவிர,எடப்பாடி பழனிசாமி தகுதியான ஆட்களை எம் .எல் .ஏ வேட்பாளர்களாக நியமனம் செய்திருந்தால், கூடுதலாக இன்னும் இருபது சீட் ஆவது கிடைத்திருக்கும்.
மேலும், இப்போது ராமதாஸ் அண்ட் கோ இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடை விட்டு, விட்டு ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு கூட சேர்ந்து பாட்டு பாடி கொண்டிருக்கிறார்கள். சௌமியா அன்புமணியும், & அன்புமணி கோ வும், சட்டமன்றத்திலே இதைப் பற்றி பேசாமல், எந்த சமூகம் இதை எதிர்த்ததோ ,அவர்களோடு கூட்டு சேர்ந்து, இதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையாக போராடிய இவர்கள் வேதனையில் மக்களுக்கு உண்மை தெரிய வரட்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி என்றால் !எல்லா இட ஒதுக்கீட்டையும் கேன்சல் செய்யுங்கள். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பின், அந்த இட ஒதுக்கீடு அமல்படுத்துங்கள். முதல்வர் ஜோசப் விஜய்! ஒரு ஜாதிக்கு ஒரு இட ஒதுக்கீடு, இன்னொரு ஜாதிக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றால்! அது என்ன நியாயம்? ஜாதிவாரி கணக்கு எடுப்புக்கு பின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்.

மேலும், வன்னியர்களின் இட ஒதுக்கீட்டில் 10.5% ,நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு தவறானதா? எதற்காக அந்த தீர்ப்பு கொடுத்தார்கள்? திமுக என்ற தீய சக்தி, இந்த நாட்டில் யாரையும் வாழ வைக்காது. அது ஒன்று மட்டும் தான் வாழும். மற்றவர்கள் வாழக்கூடாது. அதை தான் திமுகவில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ,சரியான தரவுகளை கொடுக்காமல், அதற்கு எதிராகவே இன்னொரு வழக்கை போட்டு ,வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக சதி செய்தார்கள்.

அதன் விளைவு இன்று துரைமுருகன் உள்பட சமுதாயம் வீட்டிற்கு அனுப்பியது. இதை பார்க்கும்போது,உண்மையிலே வன்னியர் சமுதாயம் ஓரளவுக்கு விழிப்புணர்வு கொண்டுள்ளது என்று தான் நினைக்கிறேன்.
அதேபோல் ,இந்த ராமதாஸ் அண்ட் கோ பற்றி எல்லோரும் நன்றாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். அது படிக்காத இருக்கும் வரை, எல்லோரும் ராமதாஸ் குடும்பத்திடம் ஏமாளிகள் தான். மேலும் ,இப்போது பிரிந்து வந்து கதறிக் கொண்டிருப்பவர்கள் ,எல்லோரும் ராமதாஸ் அண்ட் கோ வில் இருந்து வெளியே வந்தவர்கள் தான் இன்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களும் அங்கிருந்து ஏமாந்து தான் வந்திருக்கிறார்கள்.
இப்போது யார் அங்கே இருக்கிறார்கள்? என்றால், எதற்கும் ஒரு உதவாத கூட்டம் ஒன்று இருக்கிறது. குடிகாரர்கள், வெத்து வெட்டுகள், சமுதாயத்தை அழித்து வாழ நினைப்பவர்கள் அவர்கள்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அது என்ன நினைக்கிறது என்றால்? இந்த ஆள் போட்டோவை திருமண விழாக்களில் வைத்து, இவர்கள் பையன் அல்லது பெண் இவர்களால் அவர்களுக்கு ஏதோ பெரிய மரியாதை சமூகத்தில் வந்து விடுவது போல், இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் .இதை நான் ஆய்வு செய்து பார்த்த ஒரு விஷயம்.
மேலும்,இந்த சமுதாயத்தில் அப்படியெல்லாம் ராமதாஸை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கு முட்டாள்கள் அல்ல. இதிலே பல அறிவாளிகள் இருக்கிறார்கள். திறமைசாலி இருக்கிறார்கள் .தகுதியானவர்கள் இருக்கிறார்கள் .அதனால், அப்படி ஒன்றும் யாரும் கொண்டாட மாட்டார்கள்.
முட்டாள்கள் கூட்டம் தான் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் ஏதோ உறவு என்று வாக்களித்தவர்கள் கூட, இனிமேல் இதற்கு வாக்களிக்க மாட்டார்கள். இதற்கு உதாரணம் ,சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை இந்த ஆறு மாவட்டங்களை எடுத்துப் பாருங்கள் . டெபாசிட் கூட வாங்காது.
ஏனென்றால் இங்கே ஓரளவுக்கு படித்த சமுதாயம் .படித்துக் கொண்டிருக்கிற சமுதாயம். உழைத்து தான் முன்னேறி வருகிறார்கள். அதனால், தமிழக முதல்வர் விஜய் 10 .5 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக அரசு செய்த மோசடி வேலையை நீங்கள் பார்க்காமல், இந்த சமுதாயத்திற்கு நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தது ?அதற்கான தரவுகளை நீதிமன்றத்தில் கொடுத்து, இவர்களுக்கு 10.5 சதவீதத்தை பெற்று தர வேண்டும் என்பதுதான் வன்னியர் சமூகத்தின் முக்கிய கோரிக்கை.

மேலும், ராமதாஸ் அண்ட் கோ வன்னியர் சமுதாயத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு ஆதரவாக துதி பாடிக் கொண்டிருந்தால் ,நிச்சயம் சமுதாயம் உங்களை மன்னிக்காது .இந்த நாலு சீட்டு கூட இனி வாங்க மாட்டீர்கள். எனவே,உண்மையை வன்னியர் சமுதாயம் படிக்காத வரை நீங்கள் ஏமாளிகள் தான்.
