தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணி கட்சிகள் குழப்பத்தில்! யாரை ஆதரித்தால் தனக்கு லாபம்?

மக்களைவிட இவர்கள் உடைய லாபம் தான் முக்கியமா? மேலும்,
அதிமுக பாஜக கூட்டணியிலும் குழப்பம் அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பிஜேபி கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதிமுக அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி என்கிறார்கள். அதேபோல்,

திமுக கூட்டணி அரசியல் கட்சிகளிலும் குழப்பம். இந்தக் குழப்பத்திற்கு என்ன முக்கிய காரணம் என்றால்! எந்த கூட்டணி கட்சி பக்கம் போனால்? தனக்கு அதிகமான லாபம் கிடைக்கும்?இதுதான் ஒவ்வொரு கூட்டணி அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கம். பிரேமலதா அதிமுக பக்கம் போகலாமா?திமுக பக்கம் போகலாமா?விஜய் பக்கம் போகலாமா? எது நமக்கு லாபம் தரும் கூட்டணி.

இதில், திமுக கூட்டணியில் குழப்பத்தில் திருமாவளவன், மதிமுக,வைகோ, கம்யூனிஸ்டுகள் இப்படி என்றால், அதிமுகவில், பாமக, மகன் பிள்ளை அரசியல்! மிகப்பெரிய குழப்பம்.

அப்பா திமுக பக்கம்,பையன் அதிமுக பக்கம்,இதில் யார்? எந்த பக்கம்?போவார்கள் என்பது தெரியவில்லை. இது தவிர, யார் எந்த கூட்டணியில் அதிக சீட்டுகள்? பணம் கொடுப்பார்கள்?இதற்காக இப்போது இருந்தே, இந்த மைக் பாட்டுகளை பாடி கொண்டிருக்கிறார்கள். இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்.

தெரியாதவர்களுக்கு சற்று விவரமாக தான் சொல்ல வேண்டும்.அதாவது தொலைக்காட்சி மைகளில் அரசியல் புதிர்களை போட்டு,பேசிக்கொண்டு இருக்கிற கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது போல், பேசி வருவது தான் தற்போதைய அரசியல்.
இவர்கள் இந்த தேர்தலில் இவர்களுடைய லட்சணம் தெரியத்தான் போகிறது. அதாவது கூட்டணி கட்சிகள் அதிக அளவில் இந்த தேர்தலில் ஜெயிப்பது மிக, மிகக் கடினம். இவர்களுடைய வேட்பாளர்கள் மிகுந்த அரசியல் செல்வாக்கு இல்லாமல், ஒரு தொகுதி கூட ஜெயிப்பது மிக,மிகக் கடினம். போன முறை திமுகவுக்கு வாக்களிப்பது போல் அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கும்,மக்கள் வாக்களித்து விட்டார்கள்.

மேலும் திருமாவளவன் மதச்சார்பின்மை என்ற ஒரு போலியான கருத்தை இந்த கூட்டணிக்குள் பேசி வருகிறார்கள். நாட்டில் யாருமே மதச்சார்பின்மை கிடையாது. எல்லோரும் ஏதோ ஒரு மதத்தில் பிறந்திருக்கிறார்கள். பிறகு எப்படி உங்கள் அரசியலுக்கு மட்டும் மதச்சார்பின்மை வருகிறது?
அரசியல்வாதிகளுக்கு மட்டும் மதச்சார்பின்மையா? ஆனால்,,சாமானிய மக்கள் மதத்தை பின்பற்றி வருகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால்? மக்கள் அனைவரும் ஏதோ ஒரு மதத்தில் இருக்கிறார்கள்.

நாங்கள் மட்டும் எல்லா மதத்திற்கும் வேண்டப்பட்டவர்களாக இருக்கிறோம். அந்த வேண்டுதல் உங்கள் வாக்கு மட்டும் தான்.
அதுதான் மதச்சார்பின்மையா? இது போலியான மதச் சார்பின்மை. மேலும், நீங்கள் எந்த சார்பின்மை? அல்லது சாராத இன்மை? எதுவாக இருந்தாலும், மக்கள் ஒவ்வொருவரின் நேர்மையான அரசியல் தான் 2026 தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க போகிற அரசியல் களமாக இருக்கப் போகிறது. எனவே,
இந்த தடவை கூட்டணி கட்சிகள் திமுகவை வைத்து ஜெயிப்பார்களா? அதேபோல், அதிமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவை வைத்து ஜெயிப்பார்களா? என்பது மிக மிக கஷ்டமான நிலைமை.

ஏன் என்றால் தலைமையே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும்போது, வாலின் நிலைமை எப்படி இருக்கும்? அதனால் இந்த தேர்தல்! அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டும் தேர்தலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.