
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அம்மா மாடல் ஆட்சியை 2026 இல் கொண்டு வருவோம் என்கிறார்.
ஸ்டாலின் தற்போது திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், என்று அரசியல் பயணத்தை தொடங்கி, பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அம்மா மாடல் ஆட்சியை கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் ஸ்டாலினும் சொல்வது போல் மாடல் ஆட்சியை தான் தமிழக மக்கள் விரும்புகிறார்களா?
மக்களாட்சியை மக்கள் விரும்பவில்லையா? இந்த விளம்பர மாடல் ஆட்சிகளை தான் மக்கள் விரும்புகிறார்களா? எனவே ,விளம்பர மாடல் ஆட்சி! உங்களுக்கான ஆட்சியாக இருக்குமே தவிர, மக்களுக்கான ஆட்சியையாக இருக்காது.
அதனால், ரெண்டு பேருமே மக்களாட்சியை கொடுத்தால் போதும் , தமிழக மக்களுக்கு உங்களுடைய மாடல் ஆட்சி தேவையில்லை.