
ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டது.

இது தண்டலம் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு ஸ்ரீபெரும்புதூர் வட்டார அலுவலகத்திலும் ,டோல்கேட்டிலும், இந்த கண் பரிசோதனை முகம் நடத்தப்பட்டது.

இதில் 250க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இது சாலை போக்குவரத்து ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.