2025 ஆம் ஆண்டுக்கான குடியரசு துணை தலைவர் தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு.

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952-ன் பிரிவு 4-ன் துணைப் பிரிவுகள் (4) மற்றும் (1) இன் கீழ், தேர்தல் ஆணையம் 07.08.2025 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் 2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், அதன் பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் மற்றும் வாக்களிப்பு தேதி ஆகியவற்றைக் இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மேலும்,

வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் / உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கும் இடம்: தேர்தல் அதிகாரி அலுவலகம், அறை எண். RS-28, முதல் தளம், நாடாளுமன்றம், புது தில்லி.தவிர,

வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் தேதி மற்றும் நேரம்: 21.08.2025 தேதிக்கு முன்னதாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (பொது விடுமுறை நாள் தவிர) எந்த நாளிலும். வேட்பு மனுக்களை கொடுக்கலாம். மேலும்,

அதற்கு பாதுகாப்பு வைப்புத்தொகை: ரூ. 15,000, தேர்தல் அதிகாரியிடம் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் அல்லது அரசு கருவூலத்தில் ரொக்கமாக டெபாசிட் செய்ய வேண்டும்.இது தவிர,

வேட்புமனுவுடன் தேவையான ஆவணங்கள்:

வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் வேட்பாளரின் பெயர் தொடர்பான பதிவின் சான்றளிக்கப்பட்ட நகல்.

பாதுகாப்பு வைப்புத்தொகை ரசீது.

வேட்புமனு படிவங்களை மேற்கூறிய நேரத்தில் மேற்கூறிய அலுவலகத்தில் இருந்து பெறலாம்.

வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் இடம்: அறை எண். F-100, சங்கோஷ்டி-2, முதல் தளம், நாடாளுமன்ற கட்டிடம், புது தில்லி.

வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி மற்றும் நேரம்: 22.08.2025 காலை 11 மணி.

தேர்தலில் போட்டி இருக்குமானால் 07.08.2025 தேதியிட்ட ஆணையத்தின் அறிவிப்புகளின்படி, புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், முதல் தளம், வசுதா, அறை எண். F-101-ல் 09.09.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *