தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் அதிக நடமாட்டமே ! உடுமலைப்பேட்டை,எஸ் .ஐ. சண்முகவேல் படுகொலை ! – காவல்துறைக்கே, பாதுகாப்பு இல்லையா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ் நாட்டில் போதை பொருட்களை கட்டுப் படுத்தாவிட்டால் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும்.

திமுக ஆட்சியில் ரவுடிகளின் ஆதிக்கம் நேரடியாக இல்லாவிட்டாலும், அது மறைமுகமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த நேரத்தில் அவர்கள் இந்த கொலையில் சம்பந்தப்படுவார்கள்? என்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும்,

காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவர்கள், தற்போது அவர்களை வெட்டி கொள்ளப்படும் போது ,ஸ்டாலின் ஆட்சி, நிர்வாகம் ,எதற்கும் தகுதியற்றது என்பது இந்த கொலை சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.

மேலும், எஸ். ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுத்தாலும் அல்லது வேலை வாய்ப்பு கொடுத்தாலும், காவல்துறையினர் உயிருக்கும் ,பொது மக்களின் உயிருக்கும், என்ன பாதுகாப்பு ? மேலும்,

தந்தை, மகன்கள் குடும்ப சண்டைகுள் ஒரு காவல்துறை அதிகாரி கொலை செய்யப்படுவது காவல்துறைக்கே பாதுகாப்பற்ற நிலை. இது காவல்துறைக்கு மட்டுமல்ல, ஸ்டாலின் ஆட்சிக்கும் கேவலமானது.தவிர,

காவல் துறையின் நிலைமை இந்த அளவுக்கு கொண்டு வந்த ஸ்டாலின் ஆட்சி, நிர்வாகம் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கப் போகிறது? என்பது தான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *