
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஒரு சாதாரண நடிகரை வைத்து இயற்கை என்ற இறைவனின் திருவிளையாடலா? இது! மேலும்,50 ஆண்டுகால வியாபார ஊழல் அரசியலுக்கு ,மக்கள் சரியான தீர்ப்பை அதிமுக ,திமுகவுக்கு வழங்கி இருக்கிறார்கள்.
இப்போது புலம்புகின்ற திமுகவும்,இரண்டாக பிளவுப்பட்டுள்ள அதிமுக கட்சிகளின் கதறல்களும், இந்த மாற்றம் எப்படி வந்தது ?எதனால் வந்தது? என்று ஆராய தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல் சோசியல் மீடியாவால் ,மாற்றம் வந்து வட்டது.
மேலும்,திமுகவின் ஐ.டி .விங்க்கில் 200க்கும் மேற்பட்ட சோசியல் மீடியாக்கள் இருக்கிறது. அதேபோல், அதிமுகவில் இருக்கிறது. ஏன் அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க முடியாதா? இது தவிர,
திமுகவிடம் 70 சதவீத கார்ப்பரேட் மீடியாக்கள் இருக்கிறது. அவர்கள் என்ன விஜய்க்கு ஆதரவாக செய்தி போட்டார்களா? இல்லை, மக்களுக்கான உண்மையான செய்தியை போட்டார்களா? இல்லை நடுநிலையான செய்தியைப் போட்டார்களா?எல்லாம் திமுகவுக்கு ஆதரவாக போட்டு செய்திகள் தானே!

மேலும்,நடிகர் விஜய்! இப்போது, தமிழக முதல்வர்! இவரை வைத்து பாரம்பரியமிக்க அரசியல் கட்சிகளான அதிமுக, திமுகவை பரம் பொருள் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார் என்றால், இது கடவுளுடைய செயல் அன்றி, மனித செயலல்ல.
மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு பல இடங்களில் பூத் கமிட்டிக்கு ,கூட ஆள் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். அந்த இடத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது. தவிர,இவர்கள் பணம் கொடுத்து ,வீடு, வீடாக வீதி ,வீதியாக ஊர், ஊராக சென்று ஓட்டு கேட்டு, தோல்வி அடைந்திருக்கிறார்கள். இதுதான் திமுக, அதிமுகவை அவர்களை புலம்ப வைத்திருக்கிறது.மேலும்,

இது எதனால்? என்பதை இன்னும் திமுகவுக்கு புரியவில்லையா? இப்போதும் ஸ்டாலின் என்ன சொல்கிறார் என்றால், எல்லோரும் இந்த youtube ,இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக், வாட்ஸ் அப், பார்த்து சமூக வலைதளத்தில் வந்த செய்திகளை பார்த்து, மக்கள் ஏமாந்து வாக்களித்து விட்டார்கள் என்று சொல்வது முட்டாள் தனமானது. மக்கள் அரசியல் மாற்றம் தேவை என்றே வாக்களித்திருக்கிறார்கள். அதனால்தான், யார் வேட்பாளர் ?என்று கூட மக்கள் பார்க்கவில்லை.

மேலும்,சமூக வலைத்தளத்தில் வருகின்ற செய்திகளை மக்கள் யாரும் நூறு சதவீதம் நம்ப மாட்டார்கள். பெரும்பாலான மக்களுக்கு அது தெரியும் . தவிர ,சமூக வலைதளச் செய்திகளை, 100 சதவீதம் யாருமே நம்ப மாட்டார்கள். நாங்களும், அதுவே தான். அப்படி இருக்கும் போது ,ஸ்டாலின் சொல்வது, இதிலும் ஒரு பொய் தான்.இன்னும் புரியும் படி சொல்கிறேன். இணையதளத்தில் சமூகநலன் பத்திரிகைகள், மக்களிடம் நன்றாக இந்த உண்மைகளை கொண்டு போய் சேர்ந்து இருக்கிறது என்பது மட்டும் இதன் மூலம் தெரிய வரும் முக்கிய செய்தி.
ஏனென்றால் மக்கள் உண்மையைத் தேடுவதில் தான் சமூக வலைதளங்களை பார்க்கிறார்களே ஒழிய, பொய்யை தேடுவதற்கு, சமூக வலை,தளங்களை தேடவில்லை. மேலும் ,10 பேர் இந்த பக்கம், 10 பேர் அந்த பக்கம் ,50 பேர் வேறு ஒரு பக்கம், ஒரே செய்தியை பல்வேறு முகங்களாக சமூக வலைதள செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தால் ,அதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? என்ற குழப்பம் மக்களுக்கு வந்துவிடுகிறது .

அது மட்டுமல்ல ,இன்று அரசியல்வாதிகள் முதல் ஆன்மீகவாதிகள் வரை மக்களை ஏமாற்ற இந்த சோசியல் மீடியா வைத்து ஜாதகம் பார்க்க, போலியான பக்தி மார்க்கம் என்று எல்லாவற்றையும் பரப்பிக் கொண்டு, குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்க அது ஒரு எளிய வழியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது எல்லாம், எங்களைப் போன்ற பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள் அதிலும், அனுபவமுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு இது புரிந்த உண்மை.அதை கண்டுபிடித்து விடுவார்கள். அப்படிதான் பல youtuber கள் , ஒரு சில உண்மைகளையும், உண்மைக்கு மாறான செய்திகளையும் ,மக்களிடம் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். தவிர ,அப்படிப்பட்ட பொய்களை அவ்வளவு எளிதில் பாமர மக்கள் அதை கண்டுபிடிக்க முடியாது. பொய்யும் ,உண்மை போல தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.

மேலும், ஸ்டாலின் எந்த சமூக நலன் பத்திரிகைகளை அழிக்க நினைத்தாரோ, அதே பத்திரிகைகள் தான், இன்று மக்களிடம் உண்மையை கொண்டு போய் சேர்த்துள்ளது . இதை மறுக்க முடியாது. இந்த பத்திரிகைகளுக்கு செய்தித் துறையில் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். அதை ஒரு பத்திரிக்கையாகவே நினைக்க மாட்டார்கள்.
இன்று அதுதான் சரியான பாடம் புகட்டி இருக்கிறது. மக்கள் அதிகாரம் அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதுபோல் எத்தனை என்று தமிழ்நாட்டில் அதன் புள்ளி விவரங்கள் எனக்கு இன்னும் சரியாக தெரியவில்லை. கடமைக்கும் கணக்கும் பத்திரிகை என்று மக்களிடம் ஏமாற்றுக் கூட்டம் தானும் பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் ,உண்மையை சொல்வதற்கு தகுதியான ஒரு சில பத்திரிகைகள் ,மக்களிடம் இந்த ஊழல்கள் தொடர்ந்து போய் சேர்த்துக் கொண்டே இருந்தோம். அதனுடைய விளைவு, இன்று, திமுக ,அதிமுகவுக்கு ஒரு மாற்றான சக்தியாக தமிழக வெற்றி கழகத்தை கடவுள் என்ற கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி கொண்டு போய் சேர்த்துள்ளது.அதற்கு நாங்கள் எல்லாம் ஒரு கருவி தான்.

மேலும்,ஒவ்வொரு வேட்பாளரும் அதிமுக, திமுகவில் கிட்டத்தட்ட இந்த தேர்தல் நேரத்தில் தேர்தல் முடியும் வரை பேக்கேஜ் நியூஸ் போட கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல், இந்த கார்ப்பரேட் மீடியாக்களுக்கு எந்தவித பில்லும் கொடுக்காமல், அந்தந்த செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் மூலம் இந்த பணத்தை கொடுத்து இருக்கிறார்கள் .அப்படி ஆதரவான செய்திகள் போட்டும் ,இந்த வேட்பாளர்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள் .அது எங்களைக் போன்ற சமூகநலன் பத்திரிகைகளுக்கு ஒரு வெற்றி தான்.

ஏனென்றால் நாங்கள் உண்மையைத் தான் எழுதிக் கொண்டிருந்தோம்,உண்மைதான் எங்களுடைய இணையதள பத்திரிக்கையில் செய்திகளாக போட்டுக் கொண்டிருந்தோம். இது வாசகர்களுக்கும் தெரிந்த உண்மை தான்.
