
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இறைவன். அந்த மாற்றம் இறைவனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .அந்த தீர்ப்பு பற்றி இரண்டு அரசியல் கட்சிகளும், புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ காந்தி, ஒரு கோடி, 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டினால் ,இந்த ஆட்சி என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார். இது தவிர,வேறு சிலர் முதல்வர் விஜய் சொன்னது போல், ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என்று மக்களை திட்டுகிறார்கள்.

இதே மக்கள் தான் கடந்த ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டு, தேர்ந்தெடுத்து 5 வருடம் ஆட்சி செய்தார்கள். முதல்வர் விஜய் சொன்னது போல் மக்களின் தீர்ப்பை மதிக்காதவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் ,எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அது உண்மைதான்.

இதைவிட ஒரு உண்மை இருக்கிறது அது என்ன உண்மை தெரியுமா? இந்த ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, இயற்கை வளத்தை சுரண்டினார்களே! மலை, ஆறு ,குளம், குட்டை எல்லாம் அழித்த பாவிகள் ,இவர்களுக்கு ஓட்டு போட்டு, தேர்வு செய்த மக்கள் இயற்கை பேரிடரை அனுபவிக்க வேண்டுமா?

இவர்களுக்கு போட்ட ஓட்டினால் தான், இன்று தமிழகத்திற்கு இயற்கை பேரிடர் வருவதற்கு வாய்ப்பு. இல்லை என்றால் இதுவரையில் 60 ஆண்டு காலத்திற்கு முன், தமிழ்நாட்டில் எந்த ஒரு புயலோ ,சுனாமியோ ,பூகம்பமா, வெள்ளமோ, எதுவுமே வந்ததில்லை.
இதுவாவது இந்த தீய சக்திகளுக்கு இந்த உண்மை புரியுமா? 2000 லிருந்து இந்த பேரிடர்கள் தமிழ்நாட்டில் தொடர்கதையாக வந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் செய்த பாவங்கள், தமிழ்நாட்டை இயற்கை தண்டிக்கிறது என்பதை வாக்களித்த மக்களும், இரண்டு அரசியல் கட்சியினரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இதில் ஒரு பக்கம் ஆன்மீகமும் இருக்கிறது. இன்னொரு பக்கம் விஞ்ஞானமும் இருக்கிறது. விஞ்ஞானத்தின் பக்கத்தில், மலைகளை அழித்து, ஆறுகளில் ஆற்று மணலை சுரண்டி, இயற்கையை அழித்த கூட்டத்திற்கு இறைவன் கொடுக்கின்ற தண்டனை நிச்சயம் மிகப்பெரியதாக தான் இருக்கும் சட்டத்தை ஏமாற்ற முடியும்.

இயற்கையும் கடவுளையும் ஏமாற்ற முடியுமா? இந்த பாவ கூட்டத்திற்கு போட்ட ஓட்டு மக்கள், எப்படி எல்லாம் இயற்கை பேரிடரால் அழுகிறார்கள் ? கொடுமைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள் ?என்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இவர்களை நல்லவர்கள் என்று பாராட்டி எழுதிக் கொண்டிருந்த பத்திரிகைகளையும் ,பார்க்கத்தான் போகிறோம்.

இயற்கையின் தண்டனையிலிருந்து ,ஒருவரும் தப்ப முடியாது. இயற்கையை மனிதன் அழித்தால்! மனிதனை இயற்கையை அழித்து விடும். இதைத் தொடர்ந்து சிறப்பு கட்டுரையாக மக்கள் அதிகாரத்தில் வெளிவந்து கொண்டு தான் இருக்கும். எமது வாசகர்களுக்கு இது புதியதல்ல.
