
அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இந்த மக்களுக்கு நடிக்க தெரியாது. நடிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நடிப்பே வாழ்க்கையாக இருப்பதால், இவர்கள் அம்பேத்கரை வைத்து அரசியலில் நடித்துப் பார்க்கிறார்கள். இருவருடைய நடிப்பும் அம்பேத்கர் ஏற்றுக்கொள்வாரா?

சட்டங்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அம்பேத்கரை வைத்து பழங்குடியின மக்களையும், தலித் சமூகத்தையும் குறி வைத்து நடத்தப்படும் அரசியல் இது !எதிர்க்கட்சிகள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.மூத்த தலைவர் அல்லி அர்ஜுனா கார்க்கே அமித்ஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அம்பேத்கரை அவமதித்து விட்டார். சட்டத்தை மதிக்கவில்லை, இது போன்ற பல குற்றச்சாட்டுகளை வைத்து அமித்ஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மற்றொரு பக்கம் திமுக, விடுதலை சிறுத்தைகள் நேற்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி முழக்கங்களை வெளியிட்டனர். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டு, ராகுல் காந்தி தலைமையில் வெளியில் போராட்டம் நடத்தினார்கள். பாஜக எம் பி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் வைத்து இவ்வளவு பெரிய அரசியல் செய்ய எதிர்க்கட்சிகளின் செயலை அம்பேத்கரே அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

ஒரு சட்டம் படித்தவர் .ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். அவரை வைத்து மக்களை ஏமாற்ற நாடக அரசியலை ஒருபோதும் அம்பேத்கர் அதை விரும்ப மாட்டார். இது அம்பேத்கரைப் பற்றி படித்தவர்களுக்கு இந்த உண்மை புரியும்.ஆனால், எதிர்க்கட்சிகள் அம்பேத்கரின் கொள்கைகள், அம்பேத்கரின் நோக்கங்கள், கேவலமான நிலைக்கு கொண்டு வந்து, ஜாதி அரசியல் செய்ய பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஒடுக்கப்பட்ட மலைவாழ் மற்றும் தலித் சமூகத்தை உழைத்து முன்னேற தான் அவர் வழிகாட்டியாக இருந்தாரே ஒழிய, அம்பேத்கரை வைத்து அரசியல் செய்து பிழைப்பு நடத்தவோ அல்லது அரசியலில் கொள்ளை அடிக்கவோ, சட்டத்தை ஏமாற்றி மற்ற சமூகத்தை அவ மதிக்கவோ, அவர் சொல்லவில்லை. அவருடைய சட்டங்கள் அவர் காலத்தில், வாழ்ந்த மக்களுக்கு தான் அது பொருந்தும்.

இதை தலித் சமூகத்தில், விஷயம் தெரிந்த மற்றும் படித்தவர்கள் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் இதைப் பற்றி, இந்த உண்மையை பேசும்போது புரிந்து கொண்டு, இவர்கள் அம்பேத்கரை வைத்து, அரசியல் செய்து, அரசியலில் கொள்ளையடிக்க அம்பேத்கர் சட்டம் போடவில்லை. அம்பேத்கர் கொண்டு வந்தது அன்றைய நிலைமையில் இந்த மக்களுக்கு ஒருவேளை உணவு கூட அவர்களுக்கு கஷ்டமான நிலைமை. அதைப் பார்த்து தான் இந்த மக்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்து கொண்டு வந்த சட்டம் .
இன்று அது ஊழல் செய்வதற்கும், அரசியல் செய்வதற்கும் ,அரசியலில் கொள்ளை அடிப்பதற்கும் பயன்படுகிறது என்றால், அதை அம்பேத்கர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். மேலும், ஜாதி என்பது உழைக்காமலே பேயரை சொல்லி, பிழைப்பு நடத்த, அரசியல்வாதிகள், ஊரை ஏமாற்றும் கூட்டம் ,பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இது கீழ் மட்டத்தில் என்றால், மேல் மட்டத்தில், உண்மை புரியாத இந்த சமூகங்களிடம் எளிதில் நாம் நல்லவர்களாக வேஷம் போட்டு, பிஜேபி தலித்துக்களுக்கு எதிரானவர்கள். அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிராக எதிரானவர்கள், ஏன்? சொல்லப்போனால் அம்பேத்கருக்கு விரோதி என்று கூட சொல்லி விடுவார்கள்.

எதிர்க்கட்சிகள் இப்படிப்பட்ட கேவலமான அரசியல் பிழைப்பு நடத்துவதை விட, கூட்டி கொடுக்கும் வேலைகளை இவர்கள் பார்க்கலாம். அரசியல் தெரியாத மக்களிடம் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்ய, அம்பேத்கர் சட்டத்தை எழுதி வைத்து விட்டு போனாரா? சட்டத்தை படித்தவர்களுக்கு உண்மை புரியும் . அம்பேத்கரின் சட்டங்கள் ,என் காலத்திற்குப் பிறகு தேவைப்பட்டால், சட்டத்தில் மாற்றம் கொண்டு வரலாம்.இதை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அப்போது பலமுறை சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது.

அம்பேத்கர் உயிரோடு இருந்த காலத்தில் நேரு மதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை. இப்போது ஓட்டுக்காக அம்பேத்கரை வைத்து அரசியல் லாபம் சம்பாதிக்க, வேஷம் போட்டு, இந்த சமூகங்களை ஏமாற்ற பார்க்கிறார்களா? நாட்டில் போலி அரசியலின் உச்சக்கட்டம் தான் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் டராமா அரசியல் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொண்டால்! எந்த சமூகத்தையும் எதிர்க்கட்சிகள் ஏமாற்ற முடியாது.
அதனால், தலித் சமூகத்தில் உள்ள அரசியல் கட்சி பேச்சாளர்கள், தங்கள் சுய லாபங்களுக்காக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை என்ன என்பதை இந்த சமூகம் படிக்க வேண்டிய கால கட்டத்தில் கொண்டு போய் அதை நிறுத்தி உள்ளது .

அதற்குக் காரணம், வெளி வேஷங்கள் இந்த மக்களிடம் எடுபடும் என்றுதான் எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை வைத்து, அரசியல் செய்து, எந்த அளவுக்கு இந்த மக்களை ஏமாற்ற முடியும்? என்பது தான் இவர்களுடைய அரசியல் திட்டம்.இந்த நடிப்பு அரசியல், பொய் சில காலம் உண்மை போல நடித்தாலும், அது நிலைத்து நிற்க முடியாது.
அதனால், அரசியல் வேஷங்கள் பற்றி மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது . இங்கே ஒரு தேவையில்லாத சர்ச்சை எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை வைத்து பெரிய அரசியல் லாபம் சம்பாதிக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பில் மண்ணை தான் கவ்வப் போகிறார்கள் என்பது உறுதி.