ஜனவரி 06, 2025 • Makkal Adhikaram
சாதிய மோசடிகள் செய்து போலியான மதுரை சோழிய பிராமண சங்கம் அறக்கட்டளை உருவாக்கியுள்ளனர்.பிறகு திட்டம் தீட்டி திருமலைக்கொளுந்துபுரம் பிராமண மகாஜன அறக்கட்டளை சொத்து முழுவதும் அபகரித்து மிகப்பெரிய மோசடி செய்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலமும் போலியான டிரஸ்டுகள் மூலமும் கோயில் சொத்துக்களை நூதன முறையில் மோசடி செய்யும் கூட்டம் பற்றி இந்து சமய அறநிலையத் துறைக்கு உண்மை தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தான் மிகப்பெரிய கூட்டு சதி.
மேலும்,இதை வெளிக்கொண்டு வந்த சென்னை இந்து சமய அறநிலை துறை ஆணையராக இருந்த கௌரி சங்கர் 12 11 2003இல் உத்தரவு எண் எஸ் ஆர் எம் 4/2001, கோப்பை மறைத்து வைத்துக் கொண்டு இன்று வரை இருந்த ஆணையர்கள் மூலம் அதை வெளிவரக் கூடாது என்று அழுத்தம் கொடுத்து உள்ளடி அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல், மற்றும் அதிகாரிகள் யார் என்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். அவர்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளிக்கொண்டு வருவாரா?
அல்லது தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் ,கோயில் நலம் காக்கும் அமைப்புகள் ,ஆன்மீகவாதிகள், சமூக ஆர்வலர்கள் ,மடாதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இது பற்றி திமுக அரசுக்கு குரல் கொடுத்து ,கோயில் சொத்துக்களை பாதுகாப்பார்களா?மேலும்,
இந்த மண்ணின் வீரமும், அறமும் ,வாழ்க்கை கலாச்சாரமும் பாதுகாப்பது நமது இந்து சமய கோயில்கள் தான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு தங்களால் முடிந்த ஒரு குரலை எழுப்ப ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஹரிஹரன், மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கையை தமிழக மக்களுக்கு வைக்கின்றோம்.மேலும்,
இது பற்றி ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஹரிஹரன் இந்து சமய அறநிலைத்துறை செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளார். புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.மேலும்,
அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வட்டங்களில் அமைந்துள்ள திருமலை கொழுந்து புரம் பிராமண மகாஜன சங்கம் அறக்கட்டளை சொத்துக்கள் மோசடிகள் குறித்து ஒரு நபர் கமிஷன் விசாரணை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.