மார்ச் 16, 2025 • Makkal Adhikaram
மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெறும் ஊழல்! கணக்கு வழக்குகள் வெளிவராமல் சரி (adjustment audit) கட்டும் ஆடிட்டா ? டைரக்டர் ஜெனரல் ஆப் ஆடிட் (Director general of audit) அருண் சுந்தர் இதை வெளிக்கொண்டு வருவாரா?
.jpeg)
Director general of audit arun sunder dyalan .
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பு சங்கங்கள் 862 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் 145 பணியாளர் கூட்டுறவு சங்கங்களும் அடங்கும். மேலே குறிப்பிட்ட சங்கங்களில் லாபத்தில் இயங்கும் சங்கங்கள் தனது லாபத்தில் 5% ஐ கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியாக 3 சதவிகிதமும் கூட்டுறவு கல்வி நிதி இரண்டு சதவிகிதமும் சேர்த்து மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.மேலும்,

இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகையினை அந்தந்த மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் 10 சதவீதத்தை ஒன்றியத்துக்கு வைத்துக் கொண்டு, மீதமுள்ள 90 சதவீத தொகையினை மாநில கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு எத்தனை மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள்? இந்த முறையினை கடைபிடிக்கின்றன என்பதையும், அதனுடைய கணக்குகள் முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் கண்காணிக்கப்படுகின்றதா? டைரக்டர் ஜென்ரல் of ஆடிட் அருண் சுந்தர் இதுகுறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.மேலும்,

முக்கியமாக காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றியத்தில் தணிக்கையாளர்கள், ஒன்றிய மேலாளர்கள், சொல்லும்படி தான் பேலன்ஸ் ஷீட் போடுவதாக ஒரு பொய்யான வரவு செலவு கணக்குகள் காட்டப்பட்டு வருகின்றன. இது தவிர, வகுச்சர்களை தணிக்கையில் அப்ஜெக்ஷன் இல்லாமல் செய்யவும்,கூட்டுறவு தணிக்கை அலுவலர் குப்பன் கணிசமான தொகை பெற்றுக்கொண்டு, போலியான கணக்கு வழக்குகள் எழுதி ,அதை சரி செய்யும் வேலைதான், தற்போதைய கூட்டுறவு audit report என்று கூட்டுறவாளர்கள் பெரும்பாலானோர் குற்றச்சாட்டு.மேலும்,

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் நேர்மையான கூட்டுறவு அதிகாரியால் தணிக்கை செய்யப்படுமா? ஏற்கனவே தவறு நடந்துள்ள மூன்று வருட கணக்குகளை, மறு தணிக்கை செய்யப்படுமா? காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் பணம் இரண்டு கோடிக்கு ரூபாய் மேல் முறைகேடாக செலவு செய்த அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? என்பது கூட்டுறவாளர்கள் முக்கிய கேள்வி? மேலும்,
லாபத்தில் இயங்கும் சங்கங்களிடமிருந்து 5% லாப பங்கு பெற்று, அந்தந்த மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் இயங்கி வருகின்றன .ஆனால், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் தனது கணக்கில் நிலுவைத் தொகை கணிசமான அளவிற்கு குறைந்து செயல்பட்டு வருகிறது.இதற்கு என்ன காரணம் ?என்பதை இது பற்றி முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூட்டுறுவாளர்கள் தெரிவிக்கின்றனர் .இது தவிர,
ஒரு சில சங்கங்களில் இருந்து பெறப்படும் லாபப் பங்கு தொகையினை கணக்கிற்கு கொண்டு வரப்படவில்லை என்று கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மொத்த கூட்டுறவு சங்கங்களில் எத்தனை லாபத்தில் இயங்குகிறது? எத்தனை நட்டத்தில் இயங்குகிறது? இதில் லாபம் இயங்கும் சங்கங்கள் தனது பங்கினை செலுத்தி உள்ளதா? செலுத்திய கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளதா? என்பதை முழு ஆய்வு செய்ய வேண்டும்.மேலும்,
நட்டத்தில் ஏன் சங்கங்கள் செயல்படுகிறது? என்பதற்கான ஆய்வினை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று கூட்டுறவாளர்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது. தவிர,காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கடந்த மூன்று வருடங்களாக தணிக்கையாளர் குப்பன் கணக்குகளை சரிகட்டும் வேலையைத்தான் பார்த்து வருகிறார் என்று கூட்டுறவு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி கணக்குகளை

சரி கட்டி வந்த மேலாண்மை இயக்குனர் சத்திய நாராயணன் (தற்போது துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்று வேலூர் மொத்த விற்பனை மண்டகசாலை பொது மேலாளர்) இரண்டரை ஆண்டுகளும் அவரைத் தொடர்ந்து மேலாண்மை இயக்குனராக அமுதா (தற்போது திருத்தணி சரக்கத் துணைப் பதிவாளர்) ஆறு மாதங்களும், அவரைத் தொடர்ந்து கூட்டுறவு சார்பதிவாளர் பிரேம்குமார், சில மாதங்களாகவும் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து வருகின்றனர்.மேலும்,

இவர்கள் மூவரும் காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் ஜெய் ஸ்ரீக்கு உடந்தையாக இருந்து பல முறைகேடுகளில் ஈடுபட்டு 2 கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளையடித்து தவறான கணக்கு வழக்குகளை மேலாளர் முரளியின் உதவியுடன் எழுதி வருகின்றனர் .இதில் சிறப்பு என்னவென்றால் கூட்டுறவு சார்பதிவாளர் பிரேம்குமார் காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனராகவும், லாபத்தில் இயங்கும் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் மேலாண்மை இயக்குனர் ஆகவும் இருந்து கொண்டு, பிரேம்குமார் லாப பங்கு செலுத்துவதாக மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ இடம் செலுத்துவதாக தினசரி பத்திரிக்கையில் போட்டு இருவரும் கூட்டுறவுத் துறையில் சிறப்பாக பணிபுரிவதாக காட்டிக் கொண்டுள்ளனர்.

அதனால் தான், இந்த தினசரி பத்திரிகைகள் நாட்டில் ஊழலை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதி இருக்கிறேன் .உண்மை எது? என்று மக்களுக்கு தெரியாமல் இந்த போட்டோ சூட் காட்டுவதை இந்த பத்திரிகைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, என்பதை செய்தித் துறையும், பொதுமக்களும் புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

எதற்கு இப்படிப்பட்ட பத்திரிகைகள் தினசரி பல பொய்களை மக்களிடம் சொல்லி வருகிறார்கள்? அதற்கு தான் மக்களுடைய வரி பணமா? இவர்களுக்கு விளம்பரம் என்கின்ற பெயரில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.தினமணி பத்திரிகையில் இந்த லட்சணம். மேலும், இது போல் பல தினசரி பத்திரிகைகள் உண்மை என்னவென்று தெரியாமல், மக்களுக்கு மறைத்துக் கொண்டு, தங்களை பெரிய பத்திரிக்கையாக காட்டிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
இதற்கு பி.ஆர்.ஓக்கள் அரசின் விளம்பரங்கள் கொடுத்து, அதற்கு முப்பது சதவீத கமிஷன் வாங்குவது அதைவிட கேவலம் வேறொன்றுமில்லை என்று பத்திரிக்கை சமூகமே இன்று பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்தின் பேசு பொருளாகி உள்ளது. இந்த உண்மையாவது வாசகர்களுக்கும், கூட்டுறவாளர்களும், பொதுமக்களும், மத்திய- மாநில அரசின் செய்தித் துறையில் நடக்கும் மிக மோசமான ஊழல் நிர்வாகத்தை பற்றி இப்போதாவது புரிந்து இருக்குமா?
மேலும், இச்செய்தியின் பின்னணியாவது தினமணி பத்திரிக்கைக்கு தெரியுமா? மேலும், இது பற்றி பல்வேறு கருத்துக்களை கூட்டுறவு பணியாளர்களுக்குள் பேசுகின்ற தகவல் சில தினங்களுக்கு முன் மக்கள் அதிகாரத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி எதிரொலி தான் என்று தெரிவிக்கின்றனர்.

அதாவது மகளிர் தின கொண்டாட்டத்தில் கூட்டுறவு சார்பதிவாளர் பிரேம்குமார் முகத்தில் கேக் கினை தடவிய கேலி கூத்து ,ஜெய் ஸ்ரீ இணைப் பதிவாளரிடம் மகளிர் தின கொண்டாட்டத்தில், ஆண்களுக்கு என்ன வேலை?என்று கூட்டுறவு பணியாளர்கள் கேள்வி? அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இப்போது தினசரி பத்திரிகையில் இந்த போட்டோ போடப்பட்டுள்ளதா? என்பதுதான் கூட்டுறவு அலுவலக பணியாளர்களுக்குள் பேசுகின்ற ரகசிய பேச்சு .
மேலும், ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு சார்பதிவாளர் பிரேம்குமார் தனது முழு நேர பணியினை செய்யாமல், முழு நேரமும் கூட்டுறவு இணைப்பதிவாளர் உடன் சுற்றித் திரிவது கூட்டுறவு பணியாளர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது. மேலும், இது போன்ற பல கூட்டுறவு சங்கங்களில் எம். எஸ் .எம் .இ கடன்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என வற்புறுத்தி, அந்தந்த தொடக்க கூட்டுறவு சங்கங்களை தேவையற்ற தரமற்ற பொருட்களை ஜெய் ஸ்ரீ வாங்கி கொடுப்பதன் மூலம், பல சங்கங்களை நட்டத்தில் செயல்பட காரணமாக இருந்து வருகிறார் என கூட்டுறவாளர்கள் குற்றச்சாட்டு .
இதுகுறித்து டைரக்டர் ஆடிட் ஆப் ஜெனரல் அருண் சுந்தர் தயாளன் நேரடி தலையீட்டினால் மட்டுமே ,காஞ்சிபுரம் மண்டலத்தை ஜெய்ஸ்ரீ இடமிருந்து காப்பாற்ற முடியும் என கூட்டுறவு பணியாளர்களின் மனக்குமுறல் .மேலும், தற்போதய நேர்மையான அதிகாரி டைரக்டர் ஆடிட் ஆப் ஜெனரல் இப் பிரச்சனை அனைத்திற்கும், தீர்வு காண உடனடி நடவடிக்கை தேவை, என்று கூட்டுறவாளர்களின் முக்கிய கோரிக்கை.