
தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும்,
இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு.

இப்படிப்பட்ட நிலையில் பிஜேபி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க நடவடிக்கை எடுக்குமா? அல்லது இதில் அரசியல் ஆதாயத்தை தேடிக் கொண்டு விட்டுவிடுவார்களா? என்பது தான் இப்போது பொது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் முக்கிய செய்தி.

தவிர இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள விவகாரம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது twitter பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார்.
அது என்னவென்றால் தன் குடும்பத்திற்காக ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அதாவது தன் குடும்ப சொந்தங்களை E D ரெய்டில் இருந்து காப்பாற்ற டெல்லி செல்கிறார் என்று கமெண்ட் அடித்துள்ளார்.

அது மட்டுமல்ல, பிஜேபியிடம் சரண்டர் ஆகி படுத்து விட்டார். இப்படிப்பட்ட திமுக ஆட்சியின் அவலங்கள், மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் போது, இதை மத்தியில் ஆளன பிஜேபி அரசசம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புவார்களா அல்லது விட்டுவிடுவார்களா என்பது தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தின் பரபரப்பு பேச்சு.