SIR வாக்காளர்கள் பதிவு மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்தல்! டிசம்பர் 4 வரை மட்டுமே – தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்டிநாயக் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

.தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் திருத்தம் மற்றும் பூர்த்தி செய்து புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் டிசம்பர் நாலு வரை மட்டுமே கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமை தேர்தல் அதிகாரி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டால் ,அதற்கான காரணம் குறித்து அந்தந்த வாக்குச்சாவடியில் அதற்கான விளக்கத்துடன் ஓட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ,அது என்னென்ன காரணங்களுக்காக என்று ! ஒருவர் வீடுகளில் இறந்தாலோ, வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள், இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்கள், வாக்காளர் படிவத்தை பெற்று செல்லாதவர்கள், அல்லது பூர்த்தி செய்து திருப்பி தராதவர்கள் ஆகிய ஐந்து காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்க வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், எஸ். ஐ .ஆர் படிவங்களை பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க டிசம்பர் 4ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி எஸ் ஐ ஆர் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியில் 68,470 பி எல் ஓ க்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட 83 ஆயிரத்து 256 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, அரசியல் கட்சிகள் சார்பில் பி எல் ஓ க்கள் 2, 45, 340 பேர் நியமிக்கப்பட்டு எஸ் ஐ ஆர் பணிக்கு உதவி வருகின்றனர்.மேலும்,

தமிழகத்தில் தான் இவ்வளவு பி எல் ஓ க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மேலும், 33 ஆயிரம் தன்னார்வலர்கள், உதவி செய்து வருகின்றனர். இதுவரை 6.16 கோடி படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 96 சதவீதம் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதில், 2.59 கோடி படிவங்கள், 40 சதவீதம் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும் 327 பி எல் வாக்கள் தங்கள் பணிகளை 100% நிறைவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் இரண்டு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் ,அச்சப்பட தேவையில்லை. மேலும் ,உரிய விவரங்கள் இல்லை என படிவத்தை கொடுக்காமல் இருந்துவிடக்கூடாது. உரிய காரணம் இன்றி தகுதியான வாக்காளர்கள் ஒருவரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *