
நாட்டில் திமுக ஆட்சியில் எந்த நிர்வாகமும் மக்கள் நலனுக்காக இல்லை. அது கோயிலில் கூட வா? திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வர முடிவு செய்தோம்.

அங்கே, பணியில் இருந்த ஒருவர் நாங்கள் இரண்டு மணிக்கு தான் பாஸ் தருவோம் என்றார். சரி இரண்டு மணிக்கு சென்று நான் பத்திரிக்கையாளர் என்பதை அவரிடம் சொன்னேன். அதற்கான அடையாள அட்டை மக்கள் அதிகாரத்தின் புத்தகம் எல்லாம் கொடுக்கப்பட்டது. சரி என்று பாஸ் கொடுத்தார். அந்த பாஸ் ஒவ்வொருவருக்கும், ஒரு மாதிரியான பாஸாக இருக்கிறது.
அதில் கூட ,வேண்டியவர்களுக்கு ஒரு பாஸ், வேண்டாதவர்களுக்கு ஒரு பாஸ்,இப்படி தரம் பிரித்து கொடுக்கிறார்கள். இதுதான் இப்படி என்று உள்ளே போய் சாமி கும்பிடும் போது,கொஞ்சம் உள்ளே சென்று சரி பக்கத்தில் நின்று சாமி கும்பிடலாம் என்று சென்றேன்.
அந்த வழியில் இறங்கிவிட்ட பிறகு, மீண்டும் அந்த வழியில் ஏற்ற மாட்டாராம் ஒரு செக்யூரிட்டி. இப்படிப்பட்ட செக்யூரிட்டிகள், பக்தர்களுக்கு எப்படி பணிவான சேவையை செய்வார்கள்? ஒரு கோயிலுக்கு வரும் பக்தர்கள் அமைதியைத் தேடி, நிம்மதியைத் தேடி, சாமி கும்பிடுவதற்கு வருகிறார்கள்.
ஆனால், இவர்கள் இறை சக்தியே இவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பது போல், இந்த பக்கம் வராதே, அங்க நிக்காதே, இங்கே உட்காராதே, இவ்வளவு ஆணவப் பேச்சு? இந்த செக்யூரிட்டிகளுக்கு யார் கொடுத்தது? அங்கே எல்லோரும் ஒரே மாதிரியாக ஐயர்களும், செக்யூரிட்டிகளும், பணியாளர்களும், பெரியபாளையத்தம்மன் கோயிலில், பக்தர்களின் சேவைக்காக, இவர்கள் இருப்பதாக தெரியவில்லை.

கோயிலை இவர்களது போல் நினைத்து கர்வத்துடன் பேசுகிறார்கள். இந்த நிலைமை எங்களைப் போன்ற ஒரு பத்திரிகையாளர்களுக்கே இப்படி இருக்கிறது என்றால், சாதாரண பக்தர்களின் நிலைமை என்ன? இது பற்றி இந்த சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா? என்பதுதான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையும் சார்பில் பக்தர்களின் நலனுக்காக, ஆசிரியர் இச்செய்தியின் வாயிலாக தெரிவிக்கின்ற புகார்.
மேலும்,ஒரு கோயில் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை ஆந்திராவில் சென்று இவர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களை எவ்வாறு மதிக்க வேண்டும்? பணியாளர்கள், செக்யூரிட்டிகள், பக்தர்களிடம் எப்படி கனிவாக பேச வேண்டும்? என்பது தெரியாமல், இந்து சமய அறநிலையத்துறை இந்துக்களின் கோயிலை நிர்வாகிக்க தகுதி இல்லை.

தவிர, ஒரு தெய்வத்தின் சன்னதியில் இப்படிப்பட்ட கேவலமான செக்யூரிட்டிகளை போட்டு, அந்த தெய்வத்திற்கே அவமரியாதை செய்வது போல் பேசுகிறார்கள். தெய்வத்தின் சன்னதியில் வழி தெரியாமல் இறங்கி வந்து விட்டால் கூட, என்ன மாதிரியான பேச்சு? கொண்டு வழி விடாமல் தடுப்பதுவா?
அந்த இடத்தில் நான் யாரையாவது தள்ளி இருந்தாலோ அல்லது தள்ளிவிட்டு சாமியை கும்பிட்டாலோ இல்லை பக்தர்களுக்கு ஏதாவது இடையூறு செய்திருந்தாலோ அதற்கெல்லாம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சாமி கும்பிட 2 நிமிஷத்திற்கு அங்கே என்ன குறைந்து விடப் போகிறது? இவர்களுடைய சொத்தா? கோயில்? இது பற்றி மேலும் விரிவாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து என்னுடைய புகார் மனுவை தரலாம் என்று இருக்கிறேன். இப்படிப்பட்ட செக்யூரிட்டிகளை எப்படி கோயில் நிர்வாகம் வைத்துக் கொண்டிருக்கிறது?
இது தெய்வத்திற்கே பொறுக்காத வேலை. என்ன செய்தாலும், திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், என்ற தைரியத்தில் இப்படிப்பட்ட செக்யூரிட்டிகள் இருந்து வருகிறார்களா?தெய்வம் நின்று கொள்ளும்.