
நாட்டில் தற்போதைய காற்று மாசு மிக கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி ,மனிதர்களுக்கும் ,உயிரினங்களுக்கும் ,உலக அளவில் கொரோனாவை விட கொடுமையாக இந்த காற்று மாசு உயிரிழப்பை ஏற்படுத்திய வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு காற்று மாசால் சுமார் 81 லட்சம் பேர் உலக அளவில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை விட அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்,இந்தியாவிலும் பல உயிர்கள் இந்த காற்று மாசால் கொல்லப்பட்டு வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். தவிர,

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு குறியீடு மிகவும் மோசமானதாக இருப்பதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இது இயற்கையின் சுற்றுச்சூழல் மாறுபட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்த இயற்கையின் சுற்றுச்சூழல் மாறுபட்டால் மனித வாழ்க்கையில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. ஒரு பக்கம் இதனால் பல்வேறு தொற்று நோய் ,இன்னொரு பக்கம் தாவரங்கள் அதனுடைய வளர்ச்சிக்கு மிகவும் பாதிப்பாக இருந்து வருகிறது.மேலும்,

இந்த காற்று மாசு எதனால் ஏற்படுகிறது? பெரும்பாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து ,காற்று மண்டலத்தை மாசுபடுத்துகிறது.
இது தவிர, மக்கள் பயன்படுத்தக்கூடிய கழிவு பொருட்களை ஏதாவது, ஒரு இடத்தில் கொட்டி மக்க செய்யாமல், கண்ட இடங்களில் அதை தீயிட்டு கொளுத்தி, அதனால் வருகின்ற நச்சு கழிவுகள் , காற்று மண்டலத்தை மாசுபடுத்துகிறது.
இத தவிர, தினமும் வாகனங்களில் இருந்து வெளியேறுகின்ற கரும் புகை, மற்றும் நகராட்சி ,பேரூராட்சி, ஊராட்சிகளில் வருகின்ற குப்பைக் கழிவுகள் தீயிட்டு கொளுத்தி, அதனால், வருகின்ற நச்சுப் புகை காற்று மண்டலத்தை மாசுபடுத்துகிறது.

இது தவிர , விவசாயிகள் பயிர்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் போது, அதன் நஞ்சு காற்றில் கலந்து காற்று மாசு ஏற்படுத்தப் படுகிறது. இப்படி பல்வேறு வழிகளில் இந்த நாம்,காற்று மாசுபடுத்தும் போது, மக்களுக்கு சுவாச கோளாறு பிரச்சனை ஏற்படுகிறது.
இதை தான் தற்போது நுரையீரல் தொற்று என்கிறார்கள். இப்போது கூட பல மனிதர்கள் அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மாஸ் அணிந்துதான் வெளியில் செல்கிறார்கள். கொரோணா காலத்தில் அணிந்தது போல, தற்போதும் அணிந்திருக்கிறார்கள். மேலும்,

இந்த நுரையீரல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு கொரோனா காலத்தில் மிக எளிதில் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதை மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது . எனவே, காற்று மாசு என்பது மனித உயிர்களுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் இந்த காற்று மாசு எதிரானது தான். ஏன்? தாவர வகைகளுக்கு கூட இந்த காற்று மாசு எதிரானது தான்.
இதை மனிதர்கள் அலட்சியமாக நினைப்பதன் விளைவு தான் இந்த காற்று மாசுக்கு முக்கிய காரணம். மேலும் ,இதற்காக மாசு கட்டுப்பாடு வாரியம் மத்திய, மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இது பற்றி அதிக கவனம் செலுத்துவதில்லை.

தினந்தோறும் அல்லது மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும், இருக்கக்கூடிய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அறிக்கையை அனுப்புகிறார்கள். அந்த அறிக்கை எந்த அளவுக்கு உண்மையானது? என்பது தான் தற்போதைய காற்று மாசுபாட்டின் முக்கிய காரணமாக உள்ளது? மேலும்,
பல்வேறு கம்பெனிகளில் இருந்து வெளிவரும் நச்சு புகைகள் காற்று மண்டலத்தை மாசு அடைய செய்கிறது. அதற்கான என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்பதுதான் இன்று வரை கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் ,எந்தெந்த தொழிற்சாலைகளில் இருந்து ஒரு நாளைக்கு எவ்வளவு பர்சன்டேஜ் [%]இந்த நச்சு கழிவுகள் காற்றுடன் கலக்கின்றன? இது பற்றிய விவரத்தை எந்த ஒரு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை.
ஆய்வு செய்து இருந்தால் அதற்கான ரெமிடியை அந்த தொழிற்சாலை நிர்வாகம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த புள்ளி விவரத்தை சரியாக காட்டாமல் இருட்டடிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். இது காற்று மண்டலத்தை வெகுவாக பாதித்து வருகிறது. மேலும்,
தமிழ்நாட்டில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருந்தாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கிறார்களா? இது பற்றி மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு நடத்துமா?