
திமுகவுக்கும், தெய்வீகத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு ஆட்சி. இது எப்போது வந்தாலும், அப்போதெல்லாம் இந்த திருக்கோயில்களை பக்தி நோக்கம் கொண்ட தெய்வீகத்தை ,பணம் நோக்கம் கொண்ட கோயில் ஆக மாற்றி விடுகிறார்கள்.

அதிலும், ஸ்டாலினுக்கு ஆட்சி நிர்வாகத்தை நடத்த தெரியவில்லை. எப்படியோ கருணாநிதியாவது கொள்ளை அடித்தாலும், ஆட்சி நிர்வாகத்தை மக்களுக்காக நடத்தி இருக்கிறார். அதை நான் பாராட்டுகிறேன். சொன்னதை 50 சதவீதமாவது செய்திருக்கிறார்.

ஆனால் ,சொன்னதை எல்லாம் போலியான ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியில் ! பிரதமர் மோடியின் திட்டங்களை எல்லாம் இவர்கள் செய்தது போல் அதில் ஸ்டிக்கரை ஒட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இது அரசியல் தெரிந்தவர்களுக்கு வேதனையான ஒன்று. தெரியாதவர்களை எப்படி வேண்டுமானாலும், ஏமாற்றலாம், தெரிந்தவர்களை ஏமாற்ற முடியாது.

மேலும், ஜெயலலிதா ஆட்சியில் கோயில்களில் இருந்த இணை ஆணையர்கள், தெய்வீகப் பணியை முக்கிய பணியாக செய்து வந்தார்கள். தவறு என்று ஜெயலலிதாவின் கவனத்திற்கு போனால், கடுமையாக நடவடிக்கை எடுத்து விடுவார்.

இங்கே சேகர்பாபு என்ற ஒரு ரவுடியை மந்திரியாக போட்டு இந்த இந்து அறநிலையத் துறையை குட்டி சுவராக்கி வைத்திருக்கிறார்கள்.

மேலும், திருத்தணி முருகன் கோயிலில் இவர்களுடைய கட்சியின் விஐபிகளுக்கு மட்டுமே முருகன் நேரடி தரிசனம். அந்த வகையில் சுவாமி மலையில் உள்ள முருகனுடைய தரிசனம் பரவாயில்லை.

ஆனால், திருத்தணியில் தற்போது வந்துள்ள அல்லி தர்பார் ஆட்சி போல் , இணை ஆணையர் ரமணி நடத்திக் கொண்டு வருகிறார். என்னவோ, இந்தம்மா திருத்தணி முருகன் கோயிலை பட்டா போட்டது போல், நடத்திக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் பக்தர்கள். கோயில்களுக்குள் ஐயர்கள் பக்தர்களிடம் ஆர்த்தி காட்டுவதற்கு கூட பணத்தைக் கேட்டு வாங்குகிறார்கள்.
மூலஸ்தானத்தில் இருக்கும் அந்த இடத்தை தவிர, மற்ற இடங்களில் தேங்காய் உடைத்த பையை கூட பணம் கொடுத்தால்தான் ,கையிலே தேங்காவை கொடுக்கிறார்கள். விருப்பப்பட்டு பக்தர்கள் தட்டிலே போட்டால் ,அதை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் .ஆனால், கேட்டே வாங்குகிறார்கள்.

அந்த அளவிற்கு இந்த அல்லி தர்பார் இணை ஆணையர் ரமணியின் கோயில் நிர்வாகம் மோசமாக உள்ளது. அதுமட்டுமல்ல, அந்த கோயில் நிர்வாகத்தில் பணியாற்றக்கூடிய கடைநிலை ஊழியர்களின் உறவினர்கள், கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யக்கூட ,இந்த அம்மாவின் அனுமதியில்லாமல் பார்க்க முடியாதாம். அந்த அளவுக்கு அல்லி தர்பார் ரமணியின் அட்டகாசம் திருத்தணி முருகன் கோயிலில் தாங்க முடியவில்லை என்கிறார்கள்.
நான் அப்போதெல்லாம் அடிக்கடி திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று வந்தேன். இந்த அவலங்களை பார்த்து இருந்திருந்தால் ,அப்போதே எழுதி இருப்பேன்.இது மக்கள் பார்வைக்கு போகட்டும். இது நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்றுதான் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால், இந்த ஆட்சியின் அவலங்கள் மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

நாம் வணங்கக்கூடிய தெய்வங்களுக்கு கூட ,இவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு பக்தி நெறி என்பது தெரியாத ஒன்று .பணம் மட்டும்தான் இவர்கள் பார்க்கக் கூடியவர்கள். அதனால்தான், ஸ்டாலின் ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இவரால் அதைத் தவிர ,வேறு எதுவும் செய்ய முடியாது .தகுதியும் இல்லை.
வருகின்ற தேர்தலில்! ஆன்மீக பக்தர்கள் நிச்சயம் ஸ்டாலினுக்கு முடிவு கட்டுவார்கள். திருத்தணி முருகன் கோயில் மட்டுமல்ல, பல கோயில்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.மேலும்,

எதுவுமே இங்கு ஒழுங்காக ஆன்மீகத்தின் அடிப்படையில் கோயில் நிர்வாகம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தான் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றேன். முருகனுக்கு திமுக கட்சி கொடி ஒன்றுதான் இவர்கள் கொடுக்கவில்லை. மீதி எல்லாம் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஒரு காலத்தில் திருத்தணியில் இணை ஆணையராக இருந்த முத்துசாமி, திருத்தணி முருகன் கோயிலுக்கு சிறப்பாக செய்த ஒரு அதிகாரி! அவரை போல், இனி ஒரு இணை ஆணையரை நான் திருத்தணி கோயிலில் பார்க்கவில்லை. அப்போது நான் ராஜ் டிவியில் நிருபராக பணியாற்றி வந்தேன். இப்போது ஒரு பத்திரிகை ஆசிரியராக பத்திரிக்கையாளனாக பணியாற்றி வருகிறோம் எங்களுக்கெல்லாம் அப்போது அவர் எந்த அளவுக்கு மரியாதை கொடுப்பார் என்பது அந்த தெய்வீகத்தின் ஆற்றல் அவரிடம் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால்,இணை ஆணையர் ரமணி 10 முறை ஃபோன் போட்டால் கூட, எடுக்கவில்லை. அந்த அளவுக்கு ஆணவமிக்கவராக இருந்து வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஸ்டாலின் ஆட்சியில் எல்லாமே தலை கீழாக தான் நடந்து கொண்டிருக்கிறது. என்னமோ நீங்கள் எல்லாம் எங்களுக்கு படி அளக்கிரா ஆட்சியாளர்கள் மாதிரி மக்களிடம் காட்டிக் கொண்டிருப்பது ,பேசிக் கொண்டிருப்பது, அரசியல் தெரியாத அடி முட்டாள்களிடம் இதையெல்லாம் காட்ட வேண்டும்.
உங்களுக்கெல்லாம் குருட்டு அதிர்ஷ்டம், ஆட்சிக்கு வந்து தமிழ்நாடே இன்று அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறது. உங்களுடைய சமூகப் பணி ,இந்த தேசப்பணி ,என்பது என்ன? என்பதை உங்கள் கட்சியினரையும் ,உங்களையும் நிலை நிறுத்திப் பார்த்தால், அரசியல் தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும்..

மேலும், உங்களுடைய ஆட்சியை உங்களுக்கும், உங்கள் கட்சிக்காரனுக்கு தான் இங்கே, சகலமும் ஆக்கிவிட்டார்கள்.உன்னுடைய கட்சிக்காரனுடைய தகுதி என்னன்னு கூட தெரியாத ஸ்டாலின் !பத்திரிக்கையாளர்களை நீங்கள் புறக்கணித்தால், நிச்சயம் உங்கள் ஆட்சியின் அவலத்தை மக்களிடம் கண்டிப்பாக சொல்லுவோம்.

மேலும்,உங்களுடைய ரவுடி தனம் ,உங்களுடைய திறமை, உங்களுடைய தகுதி, என்ன? என்பது எங்களைப் போன்ற தகுதியான பத்திரிகையாளர்களால் தான் சொல்ல முடியும். காசு வாங்கிக்கொண்டு கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று நீங்கள் அங்கீகரித்து இருக்கிறீர்கள். உங்கள் கட்சிக்கு ஜால்ரா போடுபவனை எல்லாம் பத்திரிகாரனாக அங்கீகரித்திருக்கிறீர்கள்.

இது எல்லாம் மத்திய அரசின் கவனத்திற்கு தினமும் கொண்டு சென்று கொண்டு தான் இருக்கிறோம். உங்களுக்கு மட்டும் கோயில்களில் மரியாதை !எங்களுக்கு எல்லாம் மரியாதை இல்லையா? உன்னுடைய கட்சிக்காரன் அவ்வளவு பெரிய தகுதி வாய்ந்தவனா? போன்ல மெறட்டுறவன் ,ரவுடிசம் பண்றவன், இவனுக்கெல்லாம் கோயிலில் மரியாதை !ஆனால் ,எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு மரியாதை இல்லையா? மேலும்,
உங்களுக்கும், உன் குடும்பத்தில் பரிகாரம் செய்வதற்கும் ,கோயில்கள் இருக்கிறது. எங்களுக்கெல்லாம் சாமி கும்பிடுவதற்கு கூட கோயில் இல்லையா? எப்படியும் பேசுற பேச்சு திறமையை எல்லாம் ,அரசியல் தெரியாதவனிடம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த திறமை எல்லாம் எங்களிடம் பலிக்காது. மேலும், திருத்தணி முருகன் உங்கள் ஆட்சிக்கு நிச்சயம் முடிவு கட்டுவான். இது தெய்வம் எடுத்த முடிவு. 2026 இல் நிச்சயம் திமுக ஆட்சிக்கு தெய்வம் முடிவு கட்டியே தீரும்.