
ராமதாஸ் எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதாவது திமுக கூட்டணியிலோ அல்லது அதிமுக கூட்டணியிலோ எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் ,20 தொகுதிகள் ,ஒரு ராஜ்ய சபா சீட் அதை ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதி தரணும் என்ற கோரிக்கையை வைத்துள்ளாராம்.

40 வருஷமா !இட ஒதுக்கீடு வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்த சமுதாயத்தை தான், இந்த ராமதாஸ் ஏமாற்ற முடியும். வேறு சமுதாயம் என்றால், எப்போதோ தூக்கி எறிந்து வெளியில் போட்டு இருப்பார்கள்.
ஏனென்றால், இங்கு தான் கட்சிக்காரர்கள், மாமன், மச்சான், பங்காளி, உறவு என்று ஓட்டுக்கு பிச்சைக்கார வேஷம் போட்டுக் கொண்டு ஏமாத்த முடியும். மற்ற சமுதாயத்தில் கேள்வி கேட்பார்கள். இங்கே நல்லா பேசினால், நன்றாக கைத்தட்டி நல்லவன் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். கோட்டர் பாட்டில், பிரியாணி, ரூ.1,000,500, கொடுத்தாலே போதும்.

இதையெல்லாம் தெரிந்து ஏமாற்றுகிற இவர்களுக்கு கொடியைப் பிடித்துக் கொண்டு, இருக்கிற தகுதியான ,விஷயம் தெரிந்த, தெளிவான வன்னியர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் தான் இந்த பாட்டாளி மக்கள் கட்சி. மேலும் தேர்தல் நேரத்தில் பங்காளி ,மாமன் ,மச்சான் ஜாதிக்காரன் என்று ஓடி வருவார்கள்.
பிறகு பதவி வந்துவிட்டால் ,அவன் பேரிலே சண்டைக்கு ஓடுவார்கள். இதற்கெல்லாம் யாரு ஏமாந்து கொண்டிருக்கிறான்? கூட்டத்தைப் பார்த்து வாக்களிப்பவன் முட்டாள். நன்றாக பேசுகின்ற பொய்களை கேட்டு வாக்களிப்பவன் அதைவிட முட்டாள்.

இப்படிதான் ராமதாஸ் 40 வருஷமாக இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வாங்கிக் தருவதாக ராமதாஸும், அவருடைய மகனும், அவங்க குடும்பத்தினரும் ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள். அதற்கும் ஓடுகிறது இந்த கூட்டம் ,இவர்கள் பதவிக்கு அலைந்துக் கொண்டு, வன்னியர்களை ஏலம் போட்டு ,அடமானம் வைக்கும் ஒரு கூட்டமாக ராமதாஸ் அவர்களோடு சேர்ந்தவர்களும், இந்த சமுதாயத்தில் ஜாதி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்த ஜாதி வியாபாரம் செய்யக்கூடிய இந்த கூட்டம், அரசியல் என்றால் தெரியாது. கட்சி என்றால் தெரியாது .ஆடு, மாடு சாப்பிட்டு, சாணி போடுவது போல் ,வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிற மக்களை தேர்வு செய்துதான் இவர்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஒரு கூட்டம் கொடி பிடிக்கவும் ,கோஷம் போடவும், வேண்டும் அதை வைத்து இவர்களை ஜாதி வியாபாரம் செய்ய வேண்டும். இதுதான் பாட்டாளி மக்கள் கட்சி .
இல்லையென்றால் ! சமுதாய நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி என்று சொல்லி பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்துவிட்டு, இன்று எனக்கு இருவது சீட்டு கொடு, ஒரு ராஜ்யசபா சீட்டு கொடு, அப்புறம் போட்டி எவ்வளவு கொடு? அதை எதுவும் சொல்லவில்லையே! அது எல்லாம் வாங்கி ரகசியமாக வைத்த பிறகு, அடுத்த தேர்தலில் எவ்வளவு வாங்கினார் ?என்பது வெளியிடுவார்கள் எதிர்க்கட்சிகள்.
இப்படி அரசியல் கட்சிகள் இவர்களுடைய சொந்த நலனுக்காக கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நோக்கமே தவறாகி விட்டது. இதையெல்லாம் எப்படி கட்சி என்று சொல்வது? என்ன செய்தார்கள்? ஜாதிக்கு என்ன செய்தார்கள்? சமூகத்திற்கு என்ன செய்தார்கள்? அதை சொல்லுங்கள் .

பிறகு நீ கட்சி என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தல் என்று வந்தால் ஜாதி என்று பேசிக்கொண்டு, கூட்டணி கட்சிகளுடன் அரசியல் சீட் மற்றும் பணம் வியாபாரம் செய்து கொண்டு, உங்களுடைய அரசியல் வியாபாரத்திற்கு, இந்த சமுதாயத்தில் வன்னியர்கள் வேலை வெட்டி எல்லாம் விட்டுவிட்டு மணிக்கணக்காக வந்து ஓட்டு போட வேண்டுமா?
இதை எல்லாம் தெரியாத இந்த ஆடு ,மாடு கூட்டம் கூப்பிட்டால், பஸ்ஸில் ஏறி ஓடிக் கொண்டிருக்கிறது. இவர்களை வைத்து ராமதாஸ் நன்றாக இந்த கூட்டத்தைக் காட்டி என்னிடத்தில் இவ்வளவு கூட்டம் இருக்கிறது.

இவ்வளவு பணம் கொடு, இவ்வளவு சீட்டு கொடு என்று இந்த தலைகளை வைத்து, இவர்கள் குடும்பம் அரசியல் வியாபாரம் நடத்துகிறது. எவ்வளவு கேவலமான வேலை. உழைத்துப் பிழைத்து கௌரவமாக வாழ்ந்த ஒரு சமுதாயம், இவ்வளவு கேவலமாக உங்களை ஆக்கி இருக்கிறான் இந்த ராமதாஸ். .
இனியாவது உங்களுடைய பிள்ளைகள் இது பற்றி சிந்திக்கட்டும், அவர்கள் ஓரளவுக்கு படித்திருப்பார்கள் .அவர்களுக்கு இந்த உண்மை புரியும். ஆடு ,மாடு கூட்டங்களாக வாழாதீர்கள். மனிதர்களாக வாழுங்கள். ராமதாஸின் பொய்களை நம்பி வாழ்க்கை நடத்தாதீர்கள். உங்கள் உழைப்பை நம்பி வாழ்க்கை நடத்துங்கள்.

இந்த கட்சிக்காரன் சொல்லுகின்ற பொய்களை நம்பி கனவு காணாதீர்கள். உங்களுடைய உழைப்பை நம்பி கனவு கண்டு வாழுங்கள். இதில் வேறு அப்பன் , பிள்ளை கட்சித் தகராறில் பாதி பேர் இந்த பக்கமும், பாதி பேர் அந்த பக்கமும் சண்டை போட்டுக் கொண்டு கட்சி என்று சமுதாயத்தை ஏமாற்றுகிறார்கள். சமுதாயம் தொடர்ந்து ஏமாறுமா? உங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு ஆளாளுக்கு ஒரு அரசியல் கட்சி நாட்டில் இருக்கும் தேவையா?

எப்போது நாட்டில் !இந்த அரசியல் கட்சிகள் அதிகமானதோ, அதுவும் ஜாதி கட்சிகள் ,அப்போதே சொந்த பந்தம் என்ற உறவுகள் பிரிந்து விட்டது. ஒரு பக்கம் அரசியல் கட்சிகளால் பிரிந்து விட்டது. இன்னொரு பக்கம் இந்த சொத்து மதிப்பு அதிகமானதால், சொந்த பந்தங்கள் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

வறுமை இருந்தாலும் அப்போது வாழ்க்கை சந்தோஷமானதாக இருந்தது. ஆனால்! இப்போது எப்படி ஜாதியை ஏமாற்றுவது ?எப்படி மக்களை ஏமாற்றுவது ?எதை சொன்னால் மக்களை ஏமாற்ற முடியும் ?அதற்கு எந்தெந்த ஊடகங்கள்? எந்தெந்த பத்திரிகைகள்? எந்தெந்த தொலைக்காட்சிகள்? தகுதியானது?

இப்படி தேர்வு செய்து ஒவ்வொன்றையும், பட்டியல் போட்டு கிரிமினலாக வேலை பார்க்கும் வேலை தான், இன்றைய அரசியல் கட்சிகளின் வேலை. அரசியல் கட்சிகளின் நோக்கம் பொதுநலம் என்பது துளிகூட இல்லை.
அதனால் ,மக்கள் அரசியல் விழிப்புணர்வு இல்லாவிட்டால்! உங்களை அடிமையாக்கி விடுவார்கள். விழித்துக் கொண்டால், இவர்களிடம் பிழைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் உங்களை ஆடு, மாடுகளை போல் சந்தையில் அரசியல் வியாபாரம் நடத்துவார்கள். இனியாவது மக்கள் விழித்துக் கொள்வார்களா?