
மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது.
அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது.

இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால்,

அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. தேசவிரோத சக்திகள் ஆக போராடிக் கொண்டிருக்கிறது. மனித விரோத சக்திகளாக போராடிக் கொண்டிருக்கிறது.

இயற்கைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. அதன் உச்சம் தான் நாடுகளுக்குள் சண்டை விஞ்ஞானத்தின் அணு ஆயுதங்கள், பல கொடி உயிரினங்கள் அழிந்துள்ளது. அதுமட்டுமல்ல, இயற்கையின் பேரழிவுகளான சுனாமி, புயல், பூகம்பம், போன்றவற்றின் மூலம் மனித உயிர்கள் அழிந்து உள்ளது.

இத்தனை போராட்டங்களுக்கும், இந்த விஞ்ஞானத்தின் உச்சகட்டம் தான் , இன்று வரை மக்கள் சொகுசு வாழ்க்கை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.அதில் எவ்வளவு பேர் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்கிறார்கள்? அதில் அவர்கள் நிம்மதியை, சந்தோஷத்தை இழந்தது தான், விஞ்ஞானத்தின் உச்சம்.

மேலும்,உழைப்பு குறைந்துவிட்டது. உழைக்காமலே எப்படி பணம் சம்பாதிப்பது? சமுதாயத்தை எப்படி ஏமாற்றுவது? எப்படிப்பட்ட பொய்யை சொன்னால் மக்கள் ஏமாறுவார்கள்? இப்படி வாழும் வாழ்க்கையில் நோய் அதிகரித்துள்ளது. நோயுடன் மனித வாழ்க்கை போராடுகிறது. மறுபுறம் மனித வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம், கேள்விக் குறியாகிறது. இதுதான் விஞ்ஞானம் .இந்த விஞ்ஞானம் பேராசையின் உச்சம் ஆகிவிட்டதால், அதன் பின் விளைவு!

இன்றைய மனித வாழ்க்கை போராட்டத்தின் ஒவ்வொரு நாளும், பணக்காரன் முதல் ஏழை வரை போராடிக் கொண்டிருக்கிறான். அந்த வாழ்க்கை ஒவ்வொரு நாளும் அவன் வேலைக்கு சென்று, வீட்டுக்கு திரும்பும் வரை, அந்தப் போராட்டம் வீட்டுக்கு திரும்பி வந்து சேர்ந்த பிறகு தான், ஒவ்வொரு நாளும் மனைவி ,மக்கள், குடும்பம் இதை பார்த்து சந்தோஷம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது. சென்னை, டெல்லி ,மும்பை, போன்ற நகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் அதிகமாகிவிட்டது.

மேலும், இன்றைய டூவீலர் வாழ்க்கையிலிருந்து கார் முதல் பஸ், ரயில்,ஆகாய விமானம் வரை போய் சேர்ந்த பிறகு தான், ஒவ்வொரு உயிருக்கும் ,ஒரு மரணத்தின் எல்லையில் இருந்து இன்று,மீண்டு வருவது போல், வாழ்க்கை. இது ஒரு புறம் என்றால்,

இன்றைய இளைஞர்கள்! செல்போன் இல்லாமல் அவர்களால் உயிர் வாழ முடியாது. இந்த செல்போனை நாலு நாள் அவர்களால், பிரிந்து வாழ முடியாது. நாலு நாள் பட்டினியாக கூட இருப்பார்களே ஒழிய, செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

மேலும் ,தாய் ,தந்தை, மனைவி, குழந்தைகளை கூட ,விட்டு இருப்பார்கள். ஆனால், செல்போனால் மட்டும் அவர்களால் பிரிந்து வாழ முடியாது. அந்த அளவுக்கு இன்றைய இளைய தலைமுறைகளிடம், இந்த செல்போன் விஞ்ஞானம் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.இது தவிர,

சினிமா ,டிவி, இவை அத்தனையும் உண்மைக்கு மாறான கருத்துக்களை சொல்லி ,அழிவுப் பாதையை அவர்களுக்கு வழி வகுத்து கொடுக்கிறது. இதனால், இளைஞர்கள் படித்தும், பட்டம் பெற்றும் ,தவறான பாதைக்கு செல்கிறார்கள். அதன் விளைவு!
உறவகளிடம் நெருக்கம் குறைந்துவிட்டது. உண்மை பேசுவது குறைந்துவிட்டது. போலியான பேச்சு, நாகரீகமான உடைகள் , போதை கலாச்சாரம், இன்றைய இளைய சமுதாயம் வாழ தெரியாமல், வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி போதைக்கு அடிமையாகி ,வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவு, கல்யாணமாகி குறுகிய காலத்தில் பிரியக் கூடிய சூழ் நிலைகள் உருவாகிறது .இதையெல்லாம் பார்க்கும் போது ,எவ்வளவு போலித்தனமான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விஞ்ஞான உலகத்தின் வளர்ச்சி!

சில தினங்களுக்கு முன், மாவட்ட சமூக நல அலுவலகங்களை பார்த்தபோது, அங்கே இந்த குடும்பப் பிரச்சனை விவகாரம்? எந்த அளவுக்கு கூட்டம்? அங்கு கூடியிருந்ததை பார்த்து தெரிந்து கொண்டேன்.மேலும்,

பணம் இருக்கிறது,வாழ்க்கை சந்தோஷமாக வாழ முடியவில்லை. கார் இருக்கிறது,பங்களா இருக்கிறது. நிம்மதி இல்லை. அதிகாரம் இருக்கிறது. பதவி இருக்கிறது .சந்தோஷம் இல்லை. இதுதான், இன்றைய விஞ்ஞான உலக வாழ்க்கையின் நிலைமை.
அது மட்டுமல்ல,இன்றைய அரசியல் விஞ்ஞான வளர்ச்சியில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள், உருவாகி, மக்களை பிரிவினை படுத்துகிறது. பிரிவினைப் படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களை வைத்து அரசியல், அதிகாரம் கிடைக்க போராடுகிறது. அந்த அதிகாரம், ஆட்சி எல்லாம் மக்களுக்கு உண்மையான விசுவாசமாக உழைக்க தகுதி இல்லாமல், மக்களை ஏமாற்றும் அரசியலாக மாறிவிட்டது. இதன் விளைவு!ஊழல்கள் தான் அதிகரித்துள்ளது. இதுவும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் எதிரானது.

மேலும்,மனித வாழ்க்கையின் பேராசை !விஞ்ஞான வளர்ச்சி! அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. ஊழலுக்கு பின்னால், வன்முறையாளர்கள் அரசியல் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

அவர்களால், சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் ,தேச விரோத சக்தியாக இருக்கக் கூடியவர்கள், இவர்களும் அரசியல் கட்சி நடத்துகிறார்கள். சமூகப் போராளி என்று சொல்லிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியலையும் , தமிழ்நாட்டில் பார்க்க முடிகிறது.

மேலும்,பத்திரிக்கை, சமூக ஊடகம், தொலைக்காட்சி ,என்றெல்லாம் பல பிரிவுகளாக இருந்தாலும், இந்த ஊடகங்களில் ,இந்த விஞ்ஞானத்தின் வளர்ச்சி ,அங்கே சுயநலமாகிவிட்டது.யார் ?பணம் அதிகமாக கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு பின்னால் பத்திரிகையின் சுதந்திரம் விலை போய்க் கொண்டிருக்கிறது. பணத்திற்காக மனிதன் மனசாட்சி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பேசிக் கொண்டிருக்கிறான். இது அத்தனையும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி.மேலும்,

ஒரு மனிதன் சமூகத்தை ஏமாற்றி ,சட்டத்தை ஏமாற்றி ,பதவி அதிகாரத்தின் மூலம் பல கோடிகளை சம்பாதித்தால், அதுதான் திறமை என்று, எல்லோரும் அதையே அரசியல் கட்சியின் பின்புலத்தில் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அதற்கு சட்டம், ஆமை வேகத்தில், இதையெல்லாம் உடனடியாக தண்டிக்காமல், போய்க்கொண்டிருக்கிறது.

மேலும், கம்ப்யூட்டர்கள் வந்திருக்கின்ற காலத்திலும், எவ்வளவு மோசடிகள் அரங்கேறுகிறது? எவ்வளவு ஊழல்கள்? படித்த சமுதாயம், அதை செய்து கொண்டிருக்கிறது?

இதைவிட கொடுமை !சில தினங்களுக்கு முன் படித்த டாக்டர்கள், குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகளாக செயல்பட்டு, கைதாகி இருக்கிறார்கள்.
இப்படி எல்லாம் மனித குலம் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, மதவாதம் ,பிரிவினை வாதம் ,இந்த விஞ்ஞான உலகத்தை ஆட்டிப் படித்துக் கொண்டு ,அமைதி இல்லாமல், சந்தோஷம் இல்லாமல், நிம்மதி இல்லாமல், வாழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தனைக்கும் பின்னால் , இன்றைய விஞ்ஞானத்தின் பின் விளைவு, மனித வாழ்க்கைக்கு ஆபத்தானது. இதுதான் அதன் முடிவு.

மேலும், 50 ஆண்டுகளுக்கு முன் மனித வாழ்க்கை மாட்டு வண்டியில், குதிரை வண்டியில், பயணங்கள் செய்தான் .அப்போது விஞ்ஞானம் வளர்ச்சி இல்லை. மனித வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தான். விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மனித வாழ்க்கை பேராசையின் உச்சமாக போராடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இன்று கார், பைக் ,பஸ், ரயில் விமானம், என்று பயணிக்கிறான். மிகவும் பரபரப்பாக அவனுடைய வேகம் இருந்து கொண்டிருக்கிறது.
இப்படி ஒவ்வொரு நிலையிலும், மனித வாழ்க்கை போராட்டத்தின் உச்சமாகத்தான் இருக்கிறது இன்றைய விஞ்ஞான உலகின் உச்சம் .