
பிஜேபியை பற்றி, தமிழ்நாட்டில் இப்போது தான் அந்த கட்சியின் நிர்வாகிகளின் உண்மை நிலை என்ன? என்பதை பிஜேபியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிஜேபி தமிழ்நாட்டில் ஏன்? இன்னும் மத்தியில் எதிர்பார்க்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் வளரவில்லை என்பதுதான் இவருடைய முக்கிய கேள்வி? இதற்கு காரணமாக அவர் சொல்வது, நிர்வாகிகள் கட்சி சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தாமல், ஊடகங்களில் பேட்டியும், இவர்களுடைய சொந்த செயல்பாடுகளையும், விளம்பரப்படுத்திக் கொண்டு, இதுதான் அரசியல் என்று, பேசிக் கொண்டு வருகிறார்கள். உண்மை நிலை இதுதான்.

இதைவிட பி .எல் .சந்தோஷ் இந்த கட்சிக்கு ஒரு உண்மையை தெரிவிக்கிறேன். மாநில நிர்வாகி முதல் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் வரை சாதாரண பாமர மக்கள் போன் செய்தால் எடுப்பதில்லை. அது என்ன என்று கூட கேட்பதில்லை. இப்படி இருந்தால், தமிழ்நாட்டில் இந்த கட்சி எப்படி வளரும்?
அடுத்தது, கார்ப்பரேட் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள் ,இந்த நிர்வாகிகளை சாதாரண பாமர மக்கள் அணுகுவது, அவர்களிடம் அரசியல் சம்பந்தமான உதவிகளை எதிர்பார்ப்பது, இது எல்லாம் எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஏன்? நானே பலமுறை கமலா ஆலயத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையை மாத, மாதம் கொடுத்து வருகிறேன். தலைமை நிர்வாகிகளிடம் எளிமை இல்லை.

தலைவரிடம் ஐந்து நிமிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டால் கூட, தலைவர் பிசி என்கிறார்கள். கூட இருப்பவர்களே இப்படி பிசி ,பிசி, என்றால், அதற்கு இந்த வேலைக்கு வரக்கூடாது. உங்களுடைய சொந்த வேலையை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எதற்கு அரசியலுக்கு வருகிறீர்கள்?

மக்களுக்கும் , சமூகத்திற்கும் உதவி செய்யத் தான் அரசியல் கட்சி! உங்களுடைய சொந்த பணியை ஆற்றுவதற்கு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும்,நான் பத்திரிகை சம்பந்தமாக பலமுறை அண்ணாமலை இருக்கும்போதும் சரி, அதற்கு பிறகு நைனார் நாகேந்திரன் வந்த பிறகும் இது சம்பந்தமாக பேச வேண்டும் என்று தெரிவித்ததற்கு என்னுடைய மனு மட்டும் வாங்கி, அதை நண்பர் மாரியப்பன் சார் கையெழுத்து வாங்கி ,சம்பந்தப்பட்ட துறை மந்திரிக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவ்வளவுதான், இன்னும் வேலை நடக்கவில்லை.
இதுவே நேரில் நான் சந்தித்து தலைவரிடம் பேசி இருந்தால், இதற்கான தீர்வு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு பத்திரிகை நடத்துபவர்களுக்கே, பெரிய பத்திரிக்கை என்றால்! அதற்கு ஒரு மரியாதை, சிறிய பத்திரிகை என்றால், அதற்கு ஒரு மரியாதை! ஏழை என்றால் ,அவனுக்கு ஒரு மரியாதை! பணக்காரர் என்றால் அவனுக்கு ஒரு மரியாதை! இதுவா அரசியல் கட்சி? இந்த நிலைமை. பாமர மக்களுக்கு எப்படி இருக்கும்?

மேலும்,மோடி இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர். அவரைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பிஜேபி கட்சியினர் பொது நலத்துடன் பணியாற்றியிருந்தால், இந்நேரம் தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சியைப் பிடித்திருக்கும். பொதுநலத்திற்கும் சுயநலத்திற்கும் அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம், அரசியல் என்றால்! அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பத்திரிகை என்றால், இவர்களை விளம்பரப்படுத்துவது பத்திரிகை அல்ல .உங்களுடைய செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வது தான் பத்திரிக்கை.மேலும், மக்களுக்கு எது உண்மை? எது பொய் ?எது நல்லது ? எது கெட்டது ?என்பதை சொல்வது தான் பத்திரிக்கை.
உங்களை பாராட்ட கட்சி பத்திரிகைகள் இருக்கிறது. நீங்கள் வந்தால், போனால், அதை விளம்பரப்படுத்தி ,அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அது பிரதமராக இருந்தாலும், அவ்வளவுதான். ஆனால் ,அவர் சொல்லக்கூடிய கருத்துக்கள், நாட்டு மக்களுக்கு முக்கியத்துவமானது என்றால், நிச்சயம் மக்கள் அதிகாரம் அதை வெளியிடும். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

இதைவிட ஒரு நல்ல விஷயம் தமிழக பாஜகவில் நடந்துள்ளது .அதை நான் மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும் வரவேற்கிறேன். இந்த கட்சியில் எப்போதோ தூக்கி எறிய வேண்டிய ஒரு நபர் கேசவ விநாயகம், அவரை இப்போது தான் களை யெடுத்திருக்கிறார்கள் .இது ஒரு நல்ல சம்பவம் தான். மேலும்,
அரசியல் கட்சிகளில், அதுவும் தமிழ்நாட்டில் வரக்கூடிய பாமர மக்களுக்கு என்ன உதவி ?என்று கூட கேட்டு ,அவர்களுக்கு செய்யக்கூடிய தகுதி இல்லாத ஒரு நபர், இந்த கேசவ விநாயகம், தவிர ,போலி அரசியல் நிர்வாகிகளை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் பிஜேபி எந்த காலத்திலும் வளர முடியாது.
மக்களை நோக்கி அரசியல் இருக்க வேண்டுமே ஒழிய, இவர்களை நோக்கி அரசியல் இருந்தால், அது கட்சி வளராது .இவர்கள்தான் வளர்த்துக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பிஜேபி அண்ணாமலையால் வளர்ந்து விட்டது போல, அவருடைய சமூக ஊடகங்கள் சில பேசுகிறது. பிஜேபி என்ற ஒரு கட்சியால் தான் அண்ணாமலை வளர்ந்திருக்கிறார் ஒழிய, அண்ணாமலையால் பிஜேபி வளரவில்லை. சொல்லலாம், அண்ணாமலையே இல்லாமல் வேறு ஒரு நபர் திமுகவின் ஊழலை பற்றி பேசி இருந்தால் , கூட நிச்சயம் பிஜேபி அந்த இடத்தில் வளர்ந்து இருக்கும் இதுதான் உண்மை.
மேலும்,அண்ணாமலையைப் பற்றி ஏ டு இஸட் (A to Z ) மக்கள் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளது. அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய வரை சுத்தமானவர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அண்ணாமலை அரசியலுக்கு வந்து எப்போது தலைவர் ஆனாரோ, அதன் பிறகு திமுகவின் ஊழல் ஃபைல் நம்பர் ஒன், டு ,த்ரீ என்று போட்டு பேசிக்கொண்டு, ஊடகங்களில் பேட்டி கொடுத்தாரோ ,அப்போதே திமுக இவரை விலை பேச ஆரம்பித்து விட்டது. விலை போய்விட்டார்.
இது பிஜேபியின் மேல் இடத்திற்கு தெரிந்து, ஆதாரங்களுடன் எடுத்து வைத்துக் கொண்டது. கடந்த எம்பி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு வைத்ததை தடுத்தது அண்ணாமலை, என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அப்படி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், குறைந்தபட்சம் ஒரு 15 எம்பி களாவது தமிழ்நாட்டில் நிச்சயம் ஜெயித்திருப்பார்கள். அதற்கு வேட்டு வைத்தவர் அண்ணாமலை. அது மட்டுமல்ல, மாநில தலைவர் ஆன பிறகு, இவருடைய சொத்து பட்டியல், வருமானம், எல்லாமே மாறிவிட்டது.
எந்த பதவியும் இல்லை. எப்படி மாறியது? எந்த வழியில் 100 கோடி ,500 கோடி வந்தது? அதனால், பிஜேபி ஊழலுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சி. இங்கே யார் ஊழல்? அதிகமாக செய்து கொண்டிருந்தாலும், மேலிடம் வேடிக்கை பார்க்காது. இப்போதாவது பி .எல். சந்தோஷ் கட்சி நிர்வாகிகளுக்கு இன்னும் பல அறிவுரைகளை சொல்லி, இந்த கட்சியை மக்களின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்தால், பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால், இங்கே இந்திக்காரர்கள் வருவார்கள். இந்திக்காரர்கள் இப்போது இல்லாமல் இருக்கிறார்களா?
யார் வந்தாலும், தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்க நீங்கள் தான் இருக்க வேண்டும். நீங்கள் தான் தமிழ்நாட்டின் மக்களுக்கு வேலைவாய்ப்பில் ,அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், முன்னுரிமை தமிழர்களுக்கு மட்டும்தான் என்பதை போராட வேண்டும். அதை செயல்படுத்த வேண்டும்.
இதையெல்லாம் மாநில தலைவர்களோ , மாநில நிர்வாகிகளோ சொன்னால், தலைமை ஏற்றுக் கொள்ளாதா?