தேர்தல் ஆணையம் உடனடியாக தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஆதரவான மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உடனடியாக மாற்ற எதிர்கட்சிகள் கோரிக்கை .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தேர்தல் ஓரிரு மாதங்கள் இருப்பதால், தேர்தல் ஆணையம் உடனடியாக மாவட்ட ஆட்சியர்களையும் மாவட்ட எஸ்.பி. களையும் மாற்றம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது நடை முறையில் இருக்கும் ஒன்று தான். இந்த நடைமுறை ஆறு மாதத்திற்கு முன்னவே செய்து விடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டின் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் இதை செய்யாமலே மிகவும் மந்தமாக இருக்கிறார். தவிர,தற்போது தான் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர்களை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், சவுடு மண் குவாரிகளில், அளவுக்கு அதிகமாக மண் எடுத்தார்கள் என்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் எந்த , எந்த சவுடு குவாரிகளை பொதுமக்களின் புகாரால், நிறுத்தினாரோ , அதே சவுடு மண் குவாரிகளை, மீண்டும் திமுக மந்திரிகளின் அழுத்ததால், அந்த சவுடு மண் குவாரிகளை ஓட விட்டு இருக்கிறார்.

மேலும்,விடையூர் சவுடு குவாரி 20 நாட்களாக ஓடாத இருந்த நிலையில், நேற்று முதல் ஓட எப்படி அனுமதி கொடுத்தார்? அங்கே கொடுக்கப்பட்ட அளவு 5000 லோடு மட்டுமே, ஆனால், தற்போது ஐம்பதாயிரம் லோடு ஒட்டி விட்டார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளும், இதற்கு எந்த அளவீடும் செய்யவில்லை.

எனவே, சட்டத்திற்கு புறம்பாக ,சவுடு மண் எடுப்பது பற்றி ,தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடையூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *