ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால்! இந்து கோயில்கள் மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்! ஆனால், மசூதியும், சர்ச்சும் ஏன்? அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லை ? – மதச்சார்பற்ற நாடு என்பது தவறானதா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, இந்த கேள்வியை மக்களிடமே கேட்டுள்ளார். இது சரியான கேள்விதான்.

இதனால் வரை காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள், நாட்டு மக்களை இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றுதான் பேசிக்கொண்டும்,புத்தகங்களில் மாணவர்களுக்கு பாடமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இந்திய வரலாற்றில் பல இடங்களில், உண்மையை மறைத்து பொய்களை சொல்லி இருக்கும் கூட்டம் ,இந்த பொய்யை சொல்வதற்கு இது ஒரு பெரிய விஷயமா?

தவிர,மதச்சார்பற்ற நாடு என்றால், எல்லா மதத்தின் வழிபாட்டுத் தலங்களும் ,அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.ஆனால், கிறிஸ்தவர்களுக்கும் ,முஸ்லிம்களுக்கும், வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வாகித்து கொள்ளலாம். அதில் வரக்கூடிய வருமானத்தை அவர்களே பயன்படுத்திக் தவிர,மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

ஆனால், இந்த கோயில்களின் வருமானத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்கலாம். அதை அவர்களும், சேர்ந்து அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட சட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ,நேரு கொண்டு வந்த சட்டம். எந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு மறைமுக துரோகங்களை செய்திருக்கிறார்கள் . மேலும்,

இந்த துரோக வரலாற்றுக்கு பிஜேபி, ஆட்சியில் படிப்படியாக அகற்றி, மக்களுக்கான ஆட்சியை கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில், முருகன் மலை மீது, தீபம் ஏற்றுவதற்கு திமுக ஆட்சியில் எப்படி எல்லாம் போராட வேண்டி இருக்கிறது? இவர்கள் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் என்று இந்துக்களை ஏமாற்றுகிறார்கள்.

தவிர,இந்துக்கள் வழி பட்டு வந்த முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை மீது, தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட, அதை நிறைவேற்றாமல்,அரசியல் அதிகாரம் இருக்கிறது என்று செய்யவில்லை. இப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு வாக்களித்துக் கொண்டு, அதே முருகனையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு எல்லாம், முருகன் தெய்வமா? கல்லா? என்பதை இந்த 2026 தேர்தலில் திமுகவிற்கு சொல்ல வேண்டும்.

மேலும் ,பிஜேபியை மதவாத கட்சி என்று இந்த கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், மதத்திற்கு பின்னால், இவர்கள் ஒளிந்து கொண்டு, அரசியல் செய்கிறார்கள். இங்கு இருக்கின்ற பிஜேபி அரசியல் கட்சியினருக்கு இது கூட தெரியாமல், இந்த வாய்ச்சவடாலுக்கார்கள் இடம் ஊமைகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

பெரும்பான்மை இந்துக்களை முட்டாளாக்கி, சிறுபான்மை கிருஸ்த்துவர்களையும், முஸ்லிம்களையும் ஓட்டுக்கலுக்காக அவர்களுக்கு சலுகைகளை கொடுத்துக் கொண்டு, சர்ச் கட்ட பணமும், மசூதி கட்ட பணமும், இதுவும் அவர்களுக்கு போதாது என்று இவர்கள் அரசாங்க பணத்தையும் ,கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து கோயில்களின் நிதியை திமுக ஆட்சியில், தேவையற்ற வழியில் எல்லாம் செலவு செய்து இருக்கிறார்கள். மக்கள் உண்டியலில் போடும் பணத்தைக் கொண்டு, இவர்களுக்கு எதிராகவே வழக்கு தொடர்வது பணத்தை செல வழிப்பது இது எல்லாம் திமுகவிற்கு வாக்களித்ததால் சகித்துக் கொள்ள வேண்டுமா?மேலும்,

இந்த உண்மைகள் நம் மக்களுக்கு எங்கே தெரியப் போகிறது? பணமும், இலவசமும் கொடுத்தால் ,காலில் விழுந்தால் ,மறந்து விடுவீர்களா? தவிர, இந்த கூட்டங்கள் , எப்படியும் பேசுபவர்கள் என்பது மக்களுக்கு இன்னும் புரியவில்லை.

மேலும்,மதவாத கட்சி என்றால் ஐயோ மதவாதமா? மதத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களா? கண்ணுக்குத் தெரிந்தே அப்பாவி மக்களை மதமாற்றம் செய்கிறார்கள். அதை திமுக அரசு இதுவரை ஏன் என்று கூட கேட்டதில்லை. அது மதமாற்றத்தை ஊக்குவிக்க கூடிய அரசியல் இல்லையா? தவிர,அந்தந்த ஊரில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தான் அதை தட்டி கேட்கிறார்கள். இது மத அரசியல் இல்லையா? இது மதவாதம் இல்லையா?

மேலும் ,கையில் ஒரு கொடியை கொடுத்துவிட்டு, வேலை ,வெட்டி இல்லாத ஒரு கூட்டங்களை கூட்டிக்கொண்டு, படித்தவனையும், உழைப்பவனையும், முட்டாளாக்க திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணி கட்சிகள் பேசிக்கொண்டு ,அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கிரிமினல் புத்தி வேற யாருக்கும் வராது. இந்த கிரிமினல் புத்தியால் , பல அரசியல் கட்சிகளை கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டு, கள்ள ஓட்டு போட்டுக் கொண்டு, ஜெயித்திருக்கிறார்கள். தவிர, கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும், நம்பி அரசியல் செய்வது மத அரசியல் இல்லையா?

மேலும், இது பற்றி எந்த பத்திரிகையும், எந்த தொலைக்காட்சியும், அதை சொல்ல கூட தகுதி இல்லையா ? பக்கங்கள் பெரியதாக இருந்தால், பெரிய பத்திரிகைகளாக செய்தித் துறை அதிகாரிகள் தீர்மானிக்கிறார்களா?

மேலும் ,குடிகாரன் எப்படியும் பேசுபவன் . இந்த அடாவடி கூட்டம் இங்கு தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. தகுதி உள்ள ஒருவனும், தரமான மக்களிடம் மதிக்கத்தக்க ஒருவன், ஒழுக்கம் உள்ள ஒருவன், எவனும் திமுகவுக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டான். யார் இவர்களுக்கு வாக்களிப்பார்கள்?

புறம்போக்கு சொத்துக்களை மடக்கிக் கொள்பவன், ஊர்த் தாலி அறுக்கிறவன், இவன் தான் திமுகவுக்கு ஓட்டு போட்டுக் கொண்டிருக்கிறான். இவனுக்கு என்ன தெரிய போகுது ?மதம் என்றால் என்ன தெரியப்போகிறது? எதுவும் தெரியாது. அதுக்கு அர்த்தமாவது தெரியுமா?

இதைவிட ஒரு கொடுமை, இந்த youtube இல் ,பத்திரிகையாளர் என்ற போர்வையில் பேசிக் கொண்டிருப்பவர்கள். கூலிக்கு மாரடிக்க கூடிய இந்த கூட்டத்திற்காவது இந்த உண்மைகள் தெரியுமா? இவர்களுக்கு பத்திரிகை பற்றியும் தெரியாது.

தவிர,ஒரே ஒரு கட்டுரை எழுதி கொடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம் ?எவனாவது அப்படி கொடுத்தால், இவர்களை பத்திரிகையாளர் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால், பத்திரிகையாளர், ஊடகவியலாளர், இந்தப் பொய்களை எல்லாம் அரசியல் தெரியாத மக்கள் ஏமாறாதீர்கள்.

உண்மைகள் ஒரு சில பத்திரிகைகளில் மட்டுமே வெளிவருகிறது. பொய்கள் பல பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளி வருகிறது.இப்போதாவது, இவர்களுடைய மதச்சார்பற்ற அரசியல் மக்களுக்கு புரிகிறதா? மேலும்,மதவாத கட்சிக்கு அர்த்தம் புரிகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *