
நல்ல மனிதராகவும், சேவை மனம் உள்ளவராகவும் , பார்த்து வாக்களித்தால், உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், நல்லது.
மேலும்,தண்ணீர் குளம் ஏழுமலை தலித் சமூகத்தில் பிறந்த மக்கள் பணிக்கு ஒரு தகுதியான நபர் .
தவிர ,மக்கள் அதிகாரத்தில் ஒருவரைப் பற்றி மக்களிடம் பேசும் போது, அதற்கு அவர் தகுதியானவராக இருந்தால் மட்டுமே மக்களிடம் தைரியமாக சொல்வோம். நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும், பேக்கேஜ் நியூஸ் போட்டு, பணம் வாங்கும் பத்திரிகை ,மக்கள் அதிகாரம் இல்லை.

மேலும்,தண்ணீர் குளம் ஏழுமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பூவிருந்தவல்லியின் சட்டமன்ற உறுப்பினர்.
அப்போது இவரைப் பார்க்க பல செய்தியாளர்கள் செல்வார்கள். எல்லோரையும் மதிக்கக் கூடியவர். அவர்,அந்தப் பதவி இருக்கும்போது, அவரை தினமும் 100 பேர், 200 பேர் வந்து பார்ப்பார்கள். பதவிக்கான பிறகு அங்கே ஒருவரும் வரவில்லை.
இடையில் அவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பார்த்தாலும் அல்லது எங்காவது டீக்கடையில் பார்த்தாலும் ,பேசுவார். சட்டமன்றத்திலே டிடிவி தினகரன்காக, இறுதிவரை பதவியே போனாலும், பரவாயில்லை என்று சொன்ன சொல்லுக்கும், கொள்கைக்கும் ,அதே இடத்தில் நின்றவர். அப்போது இவரை பிழைக்கத் தெரியாதவர் என்று அதிமுகவில் இருந்தவர்கள் சொன்னார்கள். மேலும்,
அப்போதைய பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறுனீயம் பலராமன் இவரை எத்தனையோ முறை, எடப்பாடி பழனிசாமி இடம் வந்து சேர்ந்து விடுங்கள் என்று சொன்னதாக என்னிடம் சொல்வார்.

ஆனால்,நான் டி டி வி க்கு கொடுத்த வாக்குறுதியை மாற மாட்டேன். பதவி போனாலும் பரவாயில்லை என்று சொன்னவர். அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி இடம் ஒரு பெரும் தொகையும் பேரம் பேசப்பட்டது. அவர் அதற்காக ஓட வில்லை. பணத்திற்காக அலைபவர் அல்ல ,

தவிர,அந்த நன்றியை அம்மா முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரனும் மறக்கவில்லை. தன்னை நம்பியவர்களை ஏதோ ,ஒரு வழியில் அவர் காப்பாற்றுவார் என்ற நம்பி இருந்தார். இவருக்கும் ,சைதாப்பேட்டை தொகுதி வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கும், டி .டி .வி. தினகரன், அதிமுக கூட்டணியில், இந்த இரண்டு சீட்டுகள் கேட்டு வாங்கியதாக தகவல்.
மேலும்,ஜெயலலிதா இவருக்கு சீட் அறிவித்ததும், இவர் கையில் பணம் இல்லை. ஒரு நிருபரிடம் 25 லட்சம் கடன் வாங்கினேன் என்று சொன்னார்.அது மட்டுமல்ல, எளிமையான மனிதர் காரில் போகும்போது கூட பார்த்து விட்டால் நின்று எப்படி இருக்கிறீர்கள்? என்று விசாரிப்பவர்.அது மட்டுமல்ல,
ஆரம்பத்தில் அவர் வறுமையில் வாழ்ந்த காலத்தைக் கூட என்னிடம் வெளிப்படையாக பேசியவர். அதனால், பூவிருந்தவல்லி தொகுதிக்கு, தகுதியான வேட்பாளரை பூவிருந்தவல்லி தொகுதி மக்கள் இழந்து விடாதீர்கள்.
பொதுமக்களின் கோரிக்கையை எதுவானாலும் ,செய்து கொடுப்பவர். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவரைப் பார்க்கலாம். தினமும் பூவிருந்தவல்லியில் அலுவலகத்தை போட்டு, அங்கு வந்து மக்களை சந்திப்பார். மக்களும் அவரை அங்கு வந்து சந்திக்கலாம். எளிமையானவர் எந்த அரசியல் பந்தாவும் இல்லாமல் இருப்பவர் . மேலும்,
பணம் கொடுத்தால்தான் ,வேலை! என்றெல்லாம் ஆளைப் பார்த்து செய்ய மாட்டார். ஏழை ,எளிய மக்களுக்கு , அவர் எம்எல்ஏவாக இருந்த போது, தினமும் அவர் வீட்டுக்கு முன், ஒவ்வொருவருக்கும் ஆயிரம், 500 ,200 ,300 என்று அவர் கையில் என்ன கிடைத்ததோ ,அப்படி கொடுத்த ஒருவர். மேலும் ,இது பற்றி,
இது அவர் வீட்டுக்கு பக்கத்திலோ, அல்லது அந்தப் பகுதியிலோ, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடமோ கேட்டுப் பாருங்கள், ஒருவர் இல்லை என்றாலும், ஒருவர் கண்டிப்பாக சொல்வார்.மேலும்,
மக்கள் பணிக்கு தகுதியான ஒருவரை தான், டிடிவி தினகரன் பூவிருந்தவல்லி தொகுதிக்கு தேர்வு செய்து அம்மா முன்னேற்றக் கழகத்தில், அதிமுக கூட்டணி சார்பில், ஒரு தகுதியான வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார். அதை பூவிருந்த தொகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், இவரை எதிர்த்து திமுகவில் போட்டியிடக் கூடிய கிருஷ்ணசாமி அவர் ஒரு அரசியல் வியாபாரி. அரசியலில் வியாபாரிகள் பணத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போட்டு தான் செயல் படுகிறார்கள் . மக்களுக்கு எப்படி சேவையாற்ற வேண்டும்? என்று அவர்கள் நினைப்பதில்லை.மேலும்,
எப்படியோ ஸ்டாலினுக்கு கடவுள் ஒருமுறை அதிர்ஷ்டத்தை கொடுத்து விட்டார். இவர்கள் எல்லாம் ஜெயித்து விட்டார்கள். மக்கள் படாத பாடுபட்டார்கள். மீண்டும் பணத்தை வாங்கிக் கொண்டு, ஏமாறாதீர்கள்.

இன்னும் உங்கள் வாழ்க்கையில் ஐந்தாண்டு காலம் மிகப் பெரிய போராட்ட களமாக தமிழகம் இருக்கும். தவிர,யாருக்கும் ,எந்த உயிரும் உத்தரவாதம் இருக்காது.
ஆனால் இவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருப்பார்கள். இதுதான் திமுக. அதனால், அம்மா முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் தண்ணீர் குளம் ஏழுமலை உங்கள் தொகுதிக்கு சேவை செய்ய தகுதியானவர் என்று புரிந்து வாக்களியுங்கள்.
மேலும்,திமுக இன்று மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க போட்டி போடுகிறதே ஒழிய, மக்களுக்கு சேவை செய்ய போட்டி போடவில்லை. மக்கள் 1000 திற்கும்,500 க்கும் ஆசைப்பட்டீர்களானால், அவர்கள் கொடுக்கின்ற இலவச பொருட்களுக்கு ஆசைப்பட்டீர்கள் ஆனால் ,
இன்னும் ஐந்து ஆண்டுகள் இவர்கள் ஆட்சியில் இப்போது பட்ட வலியை விட இன்னும் அதிகமான வலிகளும் ,வேதனைகளும், இருக்கும், என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா? நீங்கள் பட்ட வலிகள் மறக்க முடியாது. இதை மக்களுக்கு நினைவுபடுத்துகிறோம் அவ்வளவுதான்.ஏனென்றால், எந்த பத்திரிக்கையிலும் உண்மைகளை தற்போது எழுத மாட்டார்கள். காரணம்

இந்த பத்திரிகைகளுக்கு பேக்கேஜ் நியூஸ் போட இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து விட்டார்கள் என்ற தகவல். இது தவிர, யூட்யூபில் 10 லட்சம் பார்வையாளர்கள் இருந்தால் அதற்கு ஒரு ரேட் ,5 லட்சம் பார்வையாளர்கள் இருந்தால் அதற்கு ஒரு ரேட் ,இப்படி ரேட் போட்டு எல்லாரையும் திமுக விலைக்கு வாங்கிவிட்டது.மேலும்,
ஏதோ எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் நடத்தக்கூடிய பத்திரிகைகளை தான் அவர்களால் விலைக்கு வாங்க முடியவில்லை. எனவே, மக்கள் தங்கள் தொகுதி வேட்பாளர் எப்படிப்பட்டவர்? சமூதய பணியாற்ற தகுதி உள்ளவரா ?அல்லது இவர் அரசியல் வியாபாரியா? என்பதை தேர்வு செய்து வாக்களியுங்கள்.
மேலும், மீண்டும்,தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று அவர்களுடைய பொய்களை நம்பி வாக்களிப்பது. உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளும் எனவே, தமிழகம் போதை கலாச்சாரத்தால், மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கும்.

மேலும்,பணம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. என்பதை மீண்டும் ஒரு முறை திமுக ஆட்சியின் அவலங்களை நினைத்துப் பார்த்து வாக்களியுங்கள். என்றும் சமூகப் பணியில் மக்களுக்காக மக்கள் அதிகாரம் …!
அடுத்து தொடர்ந்து மக்கள் அதிகாரத்தில் வேட்பாளர்களை பற்றிய தகவல் வெளி வரவுள்ளது. மக்கள் உஷாராகி விழித்துக் கொள்ளுங்கள்.