
ஆரோக்கியம் இன்று அடித்தட்டு மக்களுக்கும் , நடுத்தர மக்களுக்கும், மிகப் பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக இதில் விவரிப்போம்.

முதலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் வெப்பமயமாதலை தடுக்கப்பட வேண்டும். கடந்த 50 ஆண்டு கால அதிமுக, திமுக ஆட்சியில் மலைகள், காடுகள், குளங்கள், ஏரிகள் அழிக்கப்பட்டும் ,ஆக்கிரமிக்கப்பட்டும், பல லட்சம் ஏக்கர்கள், அரசு வரைபடத்தில் காணாமல் செய்திருக்கிறார்கள்.

மேலும், ஓட்டுக்காக இலவச வீட்டு மனை பட்டா, என்று அவரவர் வேண்டியவர்களுக்கு எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து, பட்டா போட்டுக் கொண்டார்கள். இது தவிர,சென்னையில் எத்தனை ஏரிகள் ?குளங்கள் ?குட்டைகள் ?இன்று வரைபடத்தில் இல்லாமல் ஆகிவிட்டது என்கின்றனர் நீர்வளத்துறை அதிகாரிகள்.
மேலும்,திமுக ஆட்சிக் காலத்திற்கு முன் இருந்த சென்னையின் வரைபடம்! இப்போது இருக்கின்ற சென்னையின் வரைபடம்! இதற்குள் எத்தனை ஏரி, குளங்கள் இருந்தது ?அதை கணக்கெடுத்து பார்த்தாலே பொது மக்களுக்கு உண்மை புரியும்.

அதேபோல் 1965 க்கு முன் இருந்த மலைகள் ,காடுகள், நீர் நிலைகள், இவையெல்லாம் எப்படி காணாமல் போனது? இது அத்தனையும் அதிமுக, திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கான முக்கிய பங்கு என்பதை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
மேலும்,இன்று வெயில் என்பது மக்கள் வாழ்க்கையின் போராட்டமாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த வெயிலில் எப்படி வேலை செய்வது? ஒரு இடத்திற்கு இன்னொரு இடம் ,போயிட்டு வருவது, மிகப்பெரிய வலியான வாழ்க்கையாகத் தான் மக்களுக்கு இருந்து வருகிறது.

இதற்கு காரணம் ?பூமி அதிக அளவு வெப்பத்தை தாங்க முடியாமல் தகித்துக் கொண்டிருக்கிறது. சூரிய கதிர்வீச்சு நேரடியாக பூமியின் மேல் விழும் பொழுது, வெப்பம் தாங்க முடியாமல், மனிதர்களும், விலங்கினங்களும், பறவைகளும், அத்தனையுமே இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதை எவ்வளவு மக்களுக்கு இந்த உண்மை தெரியும்? மேலும்,

தேனி மாவட்டத்தில் ஒரு மலையையே வெட்டி எடுத்து விட்டார் என்று ஓ . பன்னீர்செல்வம் மீது நீதிமன்றத்தில் வழக்கு போய்க் கொண்டிருந்தது. இது போல் எத்தனை மந்திரிகள்? அதிமுகவிலும் ,திமுகவிலும், இந்த மலைகளை ,காடுகளை அழித்திருக்கிறார்கள்? அதுவாவது மக்களுக்கு தெரியுமா? இவர்கள் இயற்கையை அழித்ததன் விளைவு இன்று இயற்கை மனிதர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் கடுமையான வெயில்)! இன்னொரு பக்கம் கடும் மழை, வெள்ளம், இப்படி இயற்கையின் சீற்றங்களால், மனித வாழ்க்கை ஒரு பக்கம் போராட்டம். மற்றொரு பக்கம் உணவு கலப்பட பொருட்கள் விற்பனை செய்வது, தரமற்ற கலப்பட மளிகைப் பொருட்களை விற்பனை செய்வது, இவையெல்லாம் மனித வாழ்க்கையின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சவால்கள். அது மட்டுமல்ல இன்று,

ஹோட்டல் உணவகங்களில் ,மக்கள் ஆரோக்கியமாக வாழ உணவு கொடுக்க வேண்டும் .ருசியாக உணவு கொடுக்க வேண்டும். நம்முடைய ஓட்டல் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்று இருந்த காலங்கள் போய், இன்று ஹோட்டல் உணவுவகங்கள், பணத்திற்காக மட்டுமே குறிக்கோளாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றி எந்த பத்திரிகை ,தொலைக்காட்சியும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாது. அதற்கு பதிலாக,எவனாவது வாந்தி எடுத்தால், அல்லது அந்த உணவை சாப்பிட்டு மயக்கமடைந்தால், அப்போதுதான் மைக்கை நீட்டிக் கொண்டு ஓடுவார்கள். அதுவரை எதை பற்றி, எந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் கவலைப்படாது. இதன் விளைவு என்ன என்றால்?

ஹோட்டல் உணவுகள், நோயை மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கிறது.மேலும், பரோட்டாவும் , சப்பாத்தியும் இப்போது அந்த நேரத்தில் ஓட்டு மக்களுக்கு விநியோகிப்பதில்லை . கேட்டால் ஆள் பற்றாக் குறை! அதனால், காலையில் எட்டு மணிக்கு போட்டு விட்டால், இரவு வரைக்கும் கொடுப்பார்கள் மிச்சம் மீதி இருந்தால் மறுநாளும் கொடுப்பார்கள்.
இது தவிர, தோசை மாவு எத்தனை நாள் புளித்தாலும், அதனுடன் உதய மாவை சேர்த்து தோசை, இட்லி செய்து மக்களுக்கு கொடுப்பார்கள் .இது எல்லாம் உடலுக்கு என்ன ஆகும்? அதேபோல், வடை சுட்ட எண்ணெய்களில் தாளிப்பது, பொரியல் செய்வது, அதே என்னை மீண்டும் பயன்படுத்துவது, இது எல்லாமே இன்று மக்களுக்கு கொலஸ்ட்ரால், பிபி, சுகர், உருவாக்கி வைத்து விட்டது.

காலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள் ,அவசரத்தில் செய்ய முடியாமல், ஹோட்டல் உணவுகளை சாப்பிடும் போது ,நோயை அவர்களாக வரவழைத்துக் கொள்கிறார்கள். இது எல்லாம் அனுபவத்தில் தெரிந்த உண்மை. மேலும், இன்றைய சொகுசு வாழ்க்கை என்று பெண்கள் சமைக்க சோம்பேறித்தனம் ஆகி ஹோட்டல் உணவகங்களில் அதாவது ஃபாஸ்ட் ஃபுட் வரவழைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். இது எல்லாம் இந்த உணவால் அவர்கள் நோயை விரும்பி வர வழைத்துக் கொள்கிறார்கள்.

மேலும் , 1980 காலம் வரை ஓட்டல் உணவுகள் நன்றாக இருந்தது. இன்று எத்தனையோ பேர் உணவு விஷயத்தில் சரியில்லாமல் ,அதிகாரிகள் முதல் டாக்டர்கள் ,இன்ஜினியர்கள் ,படித்தவர்கள் பெரிய அளவில் மருத்துவ சிகிச்சைக்கு சென்று வந்தவர்கள்.தவிர, கடவுள் அவர்களுக்கு மீண்டும் ஒரு உயிர் பிச்சை பெற்றவர்களும் உண்டு . இது மட்டுமல்ல,
என்றும் மக்களுக்கு ,நல்ல காற்று, சுத்தமான நீர், மண் வளம், அத்தனையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது . இதையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் அரசுக்கு என்ன அறிவுரை சொன்னார்கள்? இப்படியே போனால் பூமி இன்னும் அதிக வெப்பத்தை தாங்க வேண்டி இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்,

உலக வெப்பமயமாதலில், பூமி நமக்கு கொடுக்கும் இறுதி எச்சரிக்கை எல். நினோ விளைவுகள் தொடங்கி விட்டதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது பசுபிக் பெருங்கடலின் மேல் பகுதியில், வெப்பநிலை உயர்வதே எல் . நினோ .

இதன் காரணமாக இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் கடும் வெப்பத்தையும், அதன் காரணமாக கடும் வெப்பத்தையும், காட்டுத்தீ மற்றும் வெள்ளச் சேதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைப் பற்றி மத்திய மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இதை எப்படி தடுக்க முடியும்? என்பதை பொதுமக்களும் அரசும் ,இணைந்து சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிப்பது நம்மை நாமே ,பாதுகாத்துக் கொள்வதாகும்.
