
மனித வாழ்க்கை இணையதளத்தில் அதிகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் நன்மையா ?தீமையா? என்றால் அதில் நல்லதும் இருக்கிறது. கேட்டதும் இருக்கிறது. எதுவும் ஒரு அளவு தான்.
மேலும்,அளவுக்கு மீறி பார்த்துக் கொண்டிருக்கும், இன்றைய கால இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை, ஒரு பக்கம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ,அது ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தவிர,

எத்தனையோ பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள். அரசு வேலையில் பணியாற்றுபவர்கள், பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண்கள், எனக்கு நாலு மணி ஆனாலும், தூக்கம் வரவில்லை என்று தெரிவிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன?
மக்கள் வாழ்க்கை செல்போனில் கனவு காணும் வாழ்க்கையாகி விட்டது . உழைப்பு என்பது இல்லாமலே செல்போன் மூலம், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இது ஒரு தவறான புரிதல்.

மேலும்,பல புத்தகங்களை படித்து அதிலிருந்து படிப்பதற்கு ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு என்று கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கிறார்கள் . அந்தக் கல்வி இன்றைய காலகட்டத்திற்கு அவர்களுடைய வாழ்க்கையில், உதவக்கூடிய கல்வியாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்வி முறையை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
அப்படி இருந்தும், வேலை வாய்ப்பு இளைய சமுதாயத்திற்கு கிடைக்கவில்லை. அவர்களுடைய கனவு ஒரு பக்கம் அரசு வேலை வாய்ப்பு நோக்கி எத்தனையோ இளைஞர்கள் எதிர்பார்த்து காத்துக் இருக்கிறார்கள். இதில் அரசாங்கம் இவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை கொடுப்பதில், கடந்த ஆட்சியிலும், வந்திருக்கிற புது ஆட்சியிலும் இதுவரை அவர்களுக்கு எந்த பயனும் இல்லாமல் தான் இருக்கிறது.

மேலும்,10 ஆயிரம் பேர் காலிப் பணியிடத்திற்கு வேக்கன்சி (vacancy) சுமார் 10 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள் . இதில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெறுவார்கள்? மீதி ஒரு லட்சத்திற்கு 99 ஆயிரம் பேர், இந்த அரசு தேர்வில் சரியாக எழுதி இருக்க மாட்டார்களா? எப்படி இந்த பத்தாயிரம் பேர் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கிறார்கள்?
மீதி 99 ஆயிரம் பேரில் ,குறைந்தபட்சம் 25,000 பேராவது நன்றாக எழுதி இருப்பார்கள். அவர்களெல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு அரசு வேலைக்காக பயிற்சி நிறுவனங்களில் பயின்று தேர்வு எழுதி இருப்பார்கள். இங்கே என்ன நடக்கிறது ? தேர்வு எழுதியவர்களின் கனவு வீணாகி விடுகிறது.

மேலும்,எதற்கெடுத்தாலும் இன்று அரசு துறையில் ஒப்பந்தப் பணியாளர்களை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து நியமனம் செய்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு ஏஜென்டின் கீழ் பணியாற்றிக் கொண்டு, குறைந்த சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .
அந்த ஏஜென்ட் இவர்களுடைய மொத்த சம்பளத்தில், பாதிக்கு மேல் அவருக்கு போய்விடுகிறது. இது எல்லாம் யார் செய்த வேலை? என்றால் அரசாங்கத்தில் மந்திரியாக வந்த கடந்த அதிமுக , திமுக ஆட்சியில் இருந்து ஒவ்வொரு மந்திரிகளும், இந்த உள்ளடி வேலையை செய்திருக்கிறார்கள்.

மேலும்,சிப்காட்டில் இன்று வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான அரசு பணியாளர்கள் என்று ஒப்பந்ததாரர்களாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் தூய்மை பணியாளர்கள், நகராட்சியில், பேரூராட்சிகள், இப்படி ஒவ்வொரு துறையிலும், மக்களுக்கு போய் சேர வேண்டிய பயன்கள் ,இவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ,அரசு வேலை வாய்ப்பு ஒரு பக்கம் குறைந்துவிட்டது. இன்னொரு பக்கம், கடந்த திமுக ஆட்சியில் , இப்படி அரசு வேலை வாய்ப்பு அதிகரித்தால், அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது பெரிய சுமையாக இருக்கிறது என்று எல்லாத் துறைகளிலும் அரசு பணியாளர்களை நியமிக்காமலே ஆட்சியை நடத்தியவர்கள் கடந்த திமுக ஸ்டாலின் .

இது தவிர,இன்றைய ஒவ்வொரு நகராட்சி ,பேரூராட்சி ,குப்பையல்லும் ஒப்பந்ததாரர்கள் யார் ?என்றால் ஒட்டுமொத்தமாக ஒரு நிறுவனம் எடுத்திருக்கிறது. அது கனிமொழியா? அல்லது ஸ்டாலினா ?என்ற ஒப்பந்தங்கள் ,இந்த குடும்பத்திற்குள் தான் இந்த காண்ட்ராக்ட் ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . இதையெல்லாம் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்.

மக்களுக்காக அரசாங்கம் நடத்தச் சொன்னால், இவர்களுக்கும் ,இவர்கள் குடும்பத்திற்கும், இவர்கள் கட்சிக்கும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கொள்ளையடித்த அத்தனை சொத்துக்களும் திமுக ,அதிமுக ஆட்சியில் இருந்தவர்களின் சொத்து கணக்கு பட்டியல் எவ்வளவு ?என்பதை மக்களுக்கு தெரிந்தால்! இன்று மக்கள் இவர்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.

இந்த ஊழல்வாதிகளும் நல்லவர்களாக கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மூலம் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மாற்றம் தான் இன்று விஜய்க்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இவர் என்ன செய்யப் போகிறார்? இதுதான் ஏழை, எளிய நடுத்தர மக்களின் முக்கிய கேள்வி?
மேலும் , தற்போது அரசுத் துறையில் உள்ள அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அவர்கள் சொல்வது, இந்த ஆட்சியில் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தவறானது. ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்ற முடியாது. அதாவது மந்திரிகள், எம்எல்ஏக்கள் ,இவர்கள் எல்லாம் ஆய்வு செய்வதை ரீல்சாக போட்டு, மக்களை ஏமாற்ற பார்க்கிறார்களா? அந்த மனநிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். அதனால், இனி யார் வந்தாலும் ,மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். மேலும்,

இந்த நிலை மாற, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் அரசியல் சுயநலமாகிவிட்டது. எப்படி ஏமாற்றினால், எப்படி ஓட்டு போடுவார்கள்? எப்படி இலவசங்களை அறிவித்தால் ,மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்? என்னென்ன திட்டங்களை தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தால், அரசு ஊழியர்கள் முதல் பொதுமக்கள் வரை ஏமாந்து வாக்களிப்பார்கள்?

இதற்குத் துணையாக இருப்பது ஒரு பக்கம் தொலைக்காட்சி, பத்திரிகைகள் ,சோசியல் மீடியாக்கள் ,இணையதளங்கள் ,இவை அத்தனையும், அவர்களுடைய பொய்யை, மெய் என்று சொல்லி ஏமாற்றி ஓட்டுக்களை வாங்க, இதை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .
மேலும் ,தற்போதைய கால கட்டத்தில் இணையதளத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . சினிமா மோகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நிழல் நிஜமாகாது. நிஜம் நிழலாகாது. அதில் உள்ள கருத்தை தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே, ஒழிய, அதையே வாழ்க்கையாக பின்பற்றினால், இளைய தலைமுறை ஏமாந்து போவார்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்களே அழித்துக் கொள்வார்கள்.

மேலும், இதற்கெல்லாம் பாலமாக இன்றைய இணையதளத்தின் கருவி செல்போன் இருந்து வருகிறது . ஒவ்வொருவருக்கும்,வாழ்க்கை என்பது உழைக்காமல், சிந்திக்காமல், போராடாமல் , இங்கே வாழ்க்கை இல்லை என்பதை இன்றைய இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் .
மேலும், இன்றைய இளைய சமுதாயத்திற்கு தாய், தந்தையை விட இன்று செல்போன் அவர்களுக்கு உயர்ந்ததாகப் போய் விட்டது . இதனால் மக்களிடம் அன்பு, பாசம் ,நேசம், நட்பு எல்லாமே குறைந்துவிட்டது. தர்ம சிந்தனை, நல்ல சிந்தனை ,இது எல்லாம் தாய் ,தந்தை வழியாக வரக்கூடிய நல்லவைகளை இந்த செல்போனால் இழந்து விடுகிறார்கள்.

மேலும்,அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது இல்லை. எல்லாம் செல்போனில் நான் தெரிந்து கொள்வேன். வாழ்க்கையை இங்கே தான், இவர்கள் நரகமாக்கிக் கொள்கிறார்கள். ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் போதைப்பொருள், இன்னொரு பக்கம் டாஸ்மாக், இப்படி தவறான பாதையை தேர்வு செய்து கொள்கிறார்கள்.
மேலும்,உழைக்காமல் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை .நிம்மதி இல்லை. இன்றைய போலி அரசியல்வாதிகள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் தெரியுமா? மக்களை ஏமாற்றி கொள்ளையடித்தவர்கள் நிம்மதியாக வாழ முடியுமா? அவர்கள் குடும்ப நிம்மதியாக வாழ முடியுமா? அவர்கள் ஒரு காலமும் எத்தனை கோயிலைத் தேடி, எத்தனை சாமி கும்பிட்டாலும், நிச்சயம் அவர்களுக்கு கடவுள் கருணை காட்ட மாட்டார்.

அதுமட்டுமல்ல, இளைய சமுதாயம் குடும்பப் பெண்கள் ,ஆண்கள் எல்லாவற்றுக்குமே இந்த செல்போன் குடும்ப வாழ்க்கையை சின்ன பின்னம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இன்று எத்தனையோ குடும்பப் பெண்கள், கணவனுடன் வாழ முடியாமல் நீதிமன்றத்திற்கு டைவர்ஸ் கேஸ் அதாவது விவாகரத்து வழக்கு போட்டுக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார்கள் . இதனால்,ஒரு பக்கம் குழந்தைகள் வாழ்க்கை பாழாகிறது. அவர்களுடைய எதிர்காலம் கேள்விக் குறியாகிறது .
மேலும்,இவை அத்தனைக்கும், இந்த செல்போன் மனித வாழ்க்கையின் மன நிம்மதி ஒரு பக்கம் சீர்குலைக்கிறது. இந்த உண்மைகள் எந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் சொல்லாது. எல்லாமே வியாபார நோக்கமாகி விட்டது.

மேலும்,கடந்த கால மனித வாழ்க்கைக்கும் ,இப்போது வாழுகின்ற இணையதள மனித வாழ்க்கைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அப்போது வாழ்ந்த மக்கள் பசி,பட்டினியாக வாழ்ந்தாலும், அவர்கள் எல்லாம் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் .நிம்மதியாக வாழ்ந்தார்கள். மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள். உழைத்து வாழ்ந்தார்கள். இப்போது ஊரை ஏமாற்றி வாழ்ந்தால் தான் வாழ முடியும் என்ற நினைப்பு எங்கிருந்து வந்தது? அதுதான் தவறான அரசியல் . மேலும்,

இப்போது, அதற்கு நேர் எதிர் மாற்றமாக மக்கள் வாழ்ந்தால், அதற்கேற்றார் போல் அரசியல்வாதிகள் ,அதற்கேற்றார் போல் குடும்ப வாழ்க்கை ,அதற்கேற்றம் போல் நட்பு வட்டாரம் ,அதற்கேற்றார் போல் சமூகம், இது அத்தனையுமே இன்றைய காலத்தின் இணையதள செல்போன் வாழ்க்கை! ஒரு போராட்டம் தான்.

மேலும்,இதிலிருந்து உண்மையை படிப்பவர்கள், சந்தோஷமாக நிம்மதியாக வாழ முடியும். செல்போன் நல்லதற்கும் பயன்படுகிறது .கெட்டதற்கும் பயன்படுகிறது. நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையை நல்ல விதமாக வாழ வழி ஏற்படுத்திக் கொள்பவர்கள் ,இந்த உலகத்தில் சிறப்பாக வாழ முடியும் என்பதை இந்த செய்தியின் வாயிலாக இளைய தலை முறைகள் புரிந்து கொள்வார்களா?
