
சமூக ஊடகங்களில் பேசுவதோ, அல்லது பத்திரிக்கை துறையில் உண்மைகளை சுட்டிக் காட்டுவதோ, ஆட்சியாளர்கள் தவறாக நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்கு தான் மாரிதாஸ் கைது பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் நினைக்க வேண்டி இருக்கிறது.
மேலும் ,மாரிதாஸ் ஒரு பொது பிரச்சனை தான் பேசி இருக்கிறார். யாரையும் தனிப்பட்ட முறையில் அல்லது அவர்கள் குடும்ப விஷயத்தில் எதுவும் பேசவில்லை. அவர் பேசியது உண்மையா? பொய்யா? என்பதை ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், அதை விசாரிக்க வேண்டும்.
தவிர,பொய்யாக இருந்தால், அதற்கு விளக்கம் கேட்க வேண்டும். இவ்வளவு தான், இதற்கு எதற்காக கைது? உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது. மீண்டும், மீண்டும் அதே தவறை காவல்துறை செய்து கொண்டிருக்கிறது.

மேலும்,அவர் பேசியிருப்பது போதைப் பொருள் கடத்தல் விஷயங்கள், இந்த துறைமுகங்களின் வழியாக நடக்கிறது. இந்த செய்தி நம்பக் கூடிய அளவில் தான் இருக்கிறது. பெரும்பாலான கடத்தல் தொழில் கடற்கரைப் பகுதிகளில் அதுவும், ராமநாதபுரம் கடற்கரை ஒட்டி தான், கடத்தல் தொழில் நடக்கிறது.
அதனால்தான், மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தால்,அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்ற பொய் செய்தியை தான் கார்ப்பரேட் பத்திரிக்கைகள் போட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையை என்ன? என்பது இன்னும் வெளி வராத தகவலாக தான் இது மக்களிடையே இருந்து வருகிறது.

எனவே, ஏற்கனவே சமூக ஊடகங்களில், லீமா ரோஸ் மார்ட்டின் குடும்பத்தின் ,போதை பொருள் குறித்து பேசப்பட்டு வரும் தகவல் ஒரு புறம் இருந்தால், ஆதவ் அர்ஜுனா பொதுப்பணி துறையை கையில் வைத்திருப்பதால், பெரும்பாலான துறைமுகங்கள் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மேலும்,இந்த துறைமுகங்களில் மூலம் தான் போதைப்பொருள் கடத்தல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.மேலும், தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் இன்னும் ஒழிக்கப் படவில்லை. நேற்று கூட ஒரு மாணவி போதை மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்து உள்ளார்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. இதைப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

எனவே, மக்களுக்காக ,இந்த சமூகத்திற்காக ஒருவர் குரல் கொடுக்கிறார் என்றால் , அவரை கைது செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதுதான் ஜனநாயகத்தின் பேச்சுரிமையா? இது சாமானிய மக்களுக்கு இல்லையா? அரசியல் கட்சியினருக்கு மட்டும் தான் இருக்கிறதா? அல்லது ஆட்சியாளர்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா? என்பதை நீதிமன்றம் தான் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

மேலும்,காவல்துறை சட்டத்தை மதிக்கிறார்களா ?இல்லை மிதிக்கிறார்களா? கைது செய்யும் முன் என்ன காரணத்திற்காக கைது செய்தார்கள்? நோட்டீஸ் கொடுத்தார்கள் என்றார்கள். கைதின் நோக்கம் என்ன? உங்கள் சுயநலத்திற்கு சட்டத்தில் கைது செய்யப் பட சொல்லி இருக்கிறார்களா? அதுதான் காவல்துறையின் கடமையா?
