
டெல்லி தமிழ் சங்கம் சார்பில் டெல்லியில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தில் ஆதிசங்கரரின் ஷட்பதி ஸ்தோத்ர ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
இந்த சொற்பொழிவு இறை ஞானத்தை மனிதன் எப்படி அடைய முடியும்? இதுகுறித்து ஆன்மீக சொற்பொழிவாளர்கள் பேரறிவாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எம் கற்பக விநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும்,சங்கத்தின் துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார். என். சாமுண்டீஸ்வரி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் சங்கத்தின் இணைச் செயலாளர் இரா. இராஜ்குமார் பாலா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் வி.எஸ். கிருஷ்ணன், மைதிலி கிருஷ்ணன் பங்களிப்போடு ஆன்மீக பிரவசன வல்லுநர்கள், வேதபாடசாலை முதல்வர் & கோசம்ரக்ஷகர், மருத்துவ சேவை புரிவோர் என, ஸ்ரீ தாமோதர தீட்சிதர், ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர், ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் சார்பாக ஸ்ரீநாத் விட்டல் ,ஸ்ரீ ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி சார்பாக முனைவர் அனந்தாச்சாரி, மாதா கேன்சர் கேர் நிறுவனர் டாக்டர் வி. துரை மற்றும் டாக்டர் விஜயஸ்ரீ மகாதேவன் ஆகியோருக்கு விருது வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து உ.வே. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் “ஆதி சங்கரரின் ஷட்பதி ஸ்தோத்திரம்” என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவும் நடைபெற்றது.மேலும்,

பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைச் செயலாளர் இரா. இராஜ்குமார் பாலா, இணைப் பொருளாளர் பாலுச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் சாமுண்டீஸ்வரி, ஆ. வெங்கடேசன், ரேவதி ராஜன், பி.ஆர். தேவநாதன், பி. ராமமூர்த்தி, ஆர். கணேஷ் மற்றும் திரு வி.எஸ். கிருஷ்ணன், மைதிலி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு பெற்றவர்களையும், சிறப்பு விருந்தினரையும் கௌரவித்தார்கள்.
மேலும்,டில்லி வாழ் ஆன்மீக அன்பர்கள் ஏராளமானோர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
