முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமி கல்வித் துறையில் உலக தரத்திற்கு இணையாக மாற்றம் கொண்டு வர முதல்வர் விஜய்க்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மக்கள் அதிகாரம் இணைய தள பத்திரிக்கையில் ,இதை வலியுறுத்தி தான் ,தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரத்தில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளி யிட்டிருந்தோம்.

அதாவது, செய்தித் துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தனியார் பள்ளி நிறுவனங்களின் அங்கீகாரம் புதுப்பிப்பதற்கு ஒரு பைசா செலவில்லாமல் நாங்கள் செய்து கொடுத்துள்ளோம் .இதில் யாரும் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அப்போது தனியார் பள்ளிகளை ஊக்கி வைப்பது போல, அரசு பள்ளிகளை, தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு இணையாக அதன் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். இங்கே பேசிக் (Basic) அடிப்படை இல்லாமல், உலக தரத்திற்கு இணையான கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுத்தால் அது வீணாகி விடும் .

ஏனென்றால், முதலில் கட்டமைப்பு! அவர்களுக்கான அந்த பேசிக் நாலெட்ஜ் (Basic knowledge) இருந்தால் தான், உயர் மட்ட கல்வியறிவை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலும், மாணவர்கள் அதை புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும் .

அதாவது, மாணவர்களுக்கு புரியுதோ, இல்லையோ ,ஆசிரியர் பாடம் நடத்தி விட்டு ,கடமைக்கு போய் விடலாம். ஆனால், மாணவர்களுக்கு அது புரிந்தால் தான், கல்வித்துறையில் வெற்றி . இங்கே மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் திறமை, மாணவர்கள் திறமை, பள்ளிகளின் கட்டமைப்பு ,இது அத்தனையும் ஒருங்கிணைந்து செயல்படும் போதுதான் மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி விகிதம், அதில் நிலை நிறுத்தப்படுகிறது.

மேலும்,தனியார் பள்ளிகளில் மாணவர்களை தரம் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். அதாவது நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களையே தனியார் பள்ளிகளில் சேர்த்து ,பணம் கட்டி படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் மாணவர்களின் திறன் எப்படி இருந்தாலும், அவர்கள் சேர்ப்பது கட்டாயமாக்கப் படுகிறது.

இவர்களும் அதற்கு இணையாக போட்டி போட வேண்டும் என்றால், போட்டியாளர்கள் ஒரே தகுதியில் இருந்தால் ,பரவாயில்லை ஒருவர் அதிகமாகவும் இன்னொருவர் குறைவாகவும் இருந்து ,அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது அது போட்டியல்ல.

மேலும்,தனியார் பள்ளியில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் தேர்வு, செய்து நியமிக்கிறார்கள். அவர்களுடைய பயிற்சித் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது ?என்பதை ஆய்வு செய்து நியமிக்கிறார்கள். இது ஒரு புறம், மற்றொரு புரத்தில், அரசு பள்ளிகளில் யார் பணம் ?கொடுக்கிறார்களோ, அவர்களை ஆசிரியர்களாக நியமிக்கிறார்கள்.

இதனால்,அவர்களுடைய திறமை, தகுதி எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, பணம் முன்னே வந்து நிற்கிறது. அப்படி என்றால் எப்படி? இந்த அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள், உலக தரத்திற்கு நிகரான கல்வியை கொண்டு வந்தாலும், அதில் எப்படி வெற்றி பெறுவார்கள்? முதலில் இந்த கட்டமைப்பை வலுவாக்குங்கள்.

ஒரு கட்டிடத்திற்கு பேஸ் மென்ட் மிக மிக முக்கியமானது. பேஸ் மெண்ட் வீக் என்றால் கட்டிடம் வலுவிருக்காது. இது வீடுகளுக்கு மட்டுமல்ல, கல்வியில் மாணவர்களுக்கும், இதே நிலைமைதான். மாணவர்களின் எந்த ஒரு தொழிற்கல்வி ஆனாலும், கலைக் கல்வியானாலும் பேசிக் நாலேஜ் யார் ஒருவர் நன்றாக வளர்த்திருக்கிறாரோ, அவர் மேலும், மேலும் ,கல்வியில் பல பட்டங்களை பெற்றிருப்பார். அவரால் உயர்கல்வியை பெற முடியும்.

தவிர,அது இல்லாமல் செல்லக்கூடிய மாணவர்கள், இன்றைய போட்டி கல்வி தேர்வில் வெற்றி பெறுவது கடினம். இதில் தான் நீட் தேர்வு, மற்றும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தக்கூடிய வேலைவாய்ப்பு போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியும். அதனால் தான் அரசு தேர்வு போட்டி கடுமையாக்கப்பட்டுள்ளது என்று தான் மாணவர்கள் மத்தியில் பேச்சு . எனவே,

தமிழக முதல்வர் விஜய்! எத்தனையோ அரசு பள்ளிகளில் இன்னும் கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கிறது, சரியான குடிநீர் வசதிகள் இல்லாமல் இருக்கிறது, ஃபேன் இல்லாமல் இருக்கிறது,கட்டிடங்கள் இல்லாமல் இருக்கிறது, போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருக்கிறது.முதலில் இந்த அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

அடுத்தது ,ஆசிரியர்களின் திறமையில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அடுத்தது , மாணவர்களின் ஒழுக்கத்தில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதைக் கொண்டு வந்தால் தான், அரசு பள்ளிகளை தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு, இணையான கட்டமைப்பை உருவாக்க முடியும்.

இவர்கள் வருங்காலத்தில் உலக தரத்திற்கு இணையான கல்வியை பெற முடியும் . அதற்கான கட்டமைப்பு ஆரம்ப கால பாட திட்டங்களில் கொண்டு வர வேண்டும். அதுதான் உண்மையான கல்வி வளர்ச்சி.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொன்னது போல், அடித்தளம் சரியாக அமைக்காமல் உலக தரத்திற்கான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கும்போது, அது யாருக்கு பயன்படும்? என்றால் தனியார் பள்ளிகளில் இன்று அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு தான், அது பயன்படும் .

அதாவது அது பணக்கார வர்க்கத்திற்கு தான் ,தற்போதைய நிலைக்கு அது பயன்படும் .ஏழை, எளிய நடுத்தர மக்கள், படிக்கக்கூடிய அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு அது பயன்படுமா?

இதையெல்லாம் ஆய்வு செய்து ,அதன் பிறகு மாற்றம் கொண்டு வரும் போது, நிச்சயம் கல்வித்துறை! இந்த மாற்றத்தால் வெற்றி பெறும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *