தனியார் இறால் மற்றும் மீன்கள் ஏற்றுமதி பண்ணையில், அமோனியா கசிவால், தொழிலாளர்கள் 12 பேருக்கு மேல் உயிரிழப்பு – அதற்கான காரணத்தை ஆய்வு செய்து உடனடி அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

திருவள்ளூர் மாவட்டம் , ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள கன்னிகை பேர் கிராம பகுதியில் அமைந்துள்ள தனியார் மீன்கள் ஏற்றுமதி பண்ணையில் திடீரென ஏற்பட்ட அமோனியா கசிவால் 12 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அங்கு பணியில் இருந்த 64 பேர்களில் 60 பெண்கள், 4 ஆண்கள்)
பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலே இரண்டு பெண்கள் உயிரிழந்து விட்டனர்,
15 நபர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர், 23 நபர்கள்
தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,

மேலும்,24 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இவ் விபத்து குறித்து, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் மற்றும் சுகாதார
கூடுதல் இயக்குநர் , சுகாதார துனை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு பொறியாளர்கள்,

இயக்குனர்கள் தலைமையில் முதற் கட்ட விசாரணை அறிக்கையினை
24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் முழுமையான அறிக்கை மூன்று நாட்களுக்குள் அளிக்குமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும்,உயிரிழந்த குடும்பங்களுக்கு தல 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.தவிர, உடல்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி நல்லடக்கம் செய்யும் செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என்று தெரிவித்ததோடு, தமிழகம் முழுதும் உள்ள ஆபத்தான ஆலைகளைப் பற்றி ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி பண்ணையில்,இந்த உயிர் இழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என தகவல். இச்சம்பவம், பணி முடிந்த பிறகு, அங்கேயே தூங்கிய தொழிலாளர்களுக்கு, இரவு நேரத்தில், திடீரென ஏற்பட்ட அமோனியா கசிவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக மேற்படி ஆலையில் பணிபுரியும், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இச் சம்பவத்தால் ஆபத்தான நிலையில்,ஸ்டான்லி , ராஜீவ் காந்தி,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு ,தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும், இதன் காரணமாக இறால் பண்ணையின் உரிமையாளர்களான மோகன் மற்றும் ஜோசப் ஆகியோரை உடனடியாக தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

எனவே, இனி தமிழகம் முழுதும் உள்ள கம்பெனிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் தனியார் ஆலைகள் அதிக கவனம் செலுத்தி ,உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *